தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.11

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது


இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக, சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு காங்கிரஸ் செய்த தவறு தான் காரணம்:திக் விஜய்சிங்


உத்தரபிரதேச மாநிலத்தில் 1992 ம் ஆண்டு பாபரி மஜ்ஜித் இடிப்பை தடுக்கத் தவறியது அப்போது பஹுஜன் சமாஜ் வாடியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் தவறு என அக்க்கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங்க் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் கட்சி செய்த இரண்டு மிகப் பெரிய தவறுகள் ஒன்று பாபரி மஜ்ஜிதை இடிக்க விட்டது மற்றொன்று பஹுஜன் சமாஜ் வாடி கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்தது”

அரசுக்கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு சீட் தர மறுப்பு!


ஓசூர்: தமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், உருது சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் பயின்ற சிறுபான்மையினருக்கு அரசுக்கல்லூரிகளில் சேர இருக்கை மறுக்கப்படுதாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ப்ளஸ் 2 வகுப்பில், தமிழுக்கு பதில், முதல் பாடமாக உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடம் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர, சீட் மறுக்கப்படுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!

தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

ஞ்சுநாதர் இப்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கருநாடகத்தின் தர்மஸ்தலாவில் அமர்ந்து கொண்டு தானுண்டு தனது தருமப் பரிபாலனம் உண்டு என்று சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது  பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைசாயும் போதெல்லாம் 

இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத், ஜூன். 30  -   இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இராணுவ ரீதியாக பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு. இராணுவ

ஆப்கான் நட்சத்திர ஹோட்டலில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் - நேட்டோவுடன் கடும் சமர் (வீடியோ)


மும்பை தாக்குதலை போன்று, ஆப்கான் தலைநர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 10 ஆப்கானிய மக்கள் கொல்லபப்ட்டுள்ளனர். (வீடியோ )

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்


சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன்

29.6.11

தமிழக புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவியேற்றார்

சென்னை, ஜூன். 29-  புதிய அமைச்சரான முகம்மது ஜானுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் தர்பார் ஹாலில் இன்று காலை நடந்த விழாவி?ல் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் முகம்மது ஜானுக்கு

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!


இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார்.

இந்துத்துவா’ வகுப்பு எடுக்கும் இயக்குனர் 'பாலா'!


சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,

என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது பாப்பையா


நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.
மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.
அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே

பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை


பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக டெல்லியை விட்டு வெளியேற்றினர். அவருடைய ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ராம்தேவ்,

திகார் சிறையில் மு.க.ஸ்டாலினைப் பார்த்து கதறி அழுத கனிமொழி

புதுடெல்லி, ஜூன். 28-  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டெல்லி திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைதான தி.மு.க.வை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட பலர் டெல்லியில் உள்ள திகார் சிறையில்

மனித உரிமைகள் தொடர்பில் மேற்குலகம் பாடம் நடத்த வேண்டாம் : சீன பிரதமர் பிரிட்டனில் தெரிவிப்பு


மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு பாடம் நடத்த வேண்டாமென, சீன பிரதமர் வென் ஜியாபோ பிரித்தானியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரிட்டன் வந்துள்ள சீன பிரதமர், நேற்று திங்கட்கிழமை  இக்கருத்துக்களை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனுடன் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர்

28.6.11

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!


கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.
உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான

போராட்டத்தில் கலந்துக்கொள்ள ராம்தேவிற்கு ஹசாரே நிபந்தனை


வலுவான லோக்பால் மசோதாவிற்காக காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் அன்னா ஹசாரே துவக்க உள்ளார்.
இந்நிலையில் ஹசாரேவின் போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக ஹைடெக் யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார்.ஏற்கனவே சர்ச்சைக்குரிய நபராக திகழும் ராம்தேவ் தனது போராட்டத்தில் கலந்துக்கொள்வதால் சிக்கல்கள் உருவாகி தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என கருதிய ஹசாரே, ராம்தேவ் தனது போராட்டத்திலிருந்து கலந்துக்கொள்ளாமல் கழற்றிவிடுவதற்காக தான் நிபந்தனைகளை கடைப்பிடித்தால் போராட்டத்தில் பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.ஆனால்,
அந்த நிபந்தனைகள் என்ன? என்பது குறித்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மா.மா.கட்சியினரை கண்டித்து இன்று மாபெரும் கண்டனப் போர் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள அறிக்கை: தமுமுக அதன் அரசியல் வாரிசு ம.ம.கட்சியினரால் உணர்வு வார இதழ் அலுவலகம் சூரையாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதை சென்னை காவல்துறை அகற்றி அதன் சாவியை RDO விடம் ஒப்படைத்துள்ளார்கள்.ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின்

நவீன வசதிகளுடன் அதிவேக பாஸ்போர்ட் மையங்கள்!


தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.
பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில்

கடாபியை கொல்லும் நோக்கம் நேட்டோவுக்கு உள்ளது - அமெரிக்கா


லிபிய அதிபர் கடாபியைக் கொல்லும் நோக்கம் நேட்டோ படைகளுக்கு உள்ளது என்றும், கடந்த மாதமே நேட்டோ படைகள் அவரை கொல்ல முயற்சி மேற்கொண்டதாக அமெரிக்க கடற்படை அட்மிரல் சாமுவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த மாதம் கடாபியின் மாளிகைகள் தாக்கப்பட்டது அவரைக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று உறுதியாகியுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபி

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முகமது ஜான் பதவியேற்பு


தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.    
 
ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்று, சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம் பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.

60 வயதை கடந்தவர்கள் மந்திரி பதவி வகிக்க கூடாது: ப.சிதம்பரம் கருத்து


மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-  
 
தற்போதைய இளம் தலைவர்கள் மீது நான் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்.
 
மத்திய மந்திரி சபையில் 40 வயது

மும்பை பத்திரிகையாளர் கொலையில் 7 பேர் கைது


மும்பை பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் இருந்து வெளியாகும் பத்திரிகை மிட்டே. இந்த பத்திரிகையின் மூத்த நிருபர் ஜோதிர்மாய் தேவ் (வயது 56). ஜே.தேவ் என்று அழைக்கப்படும் அவர் புலனாய்வு நிருபர் ஆவார். கடந்த 11-ந் தேதி மும்பை பாவாய் பகுதியில் மர்ம மனிதர்கள் ஜே.தேவை

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இருந்து சிபிஐக்கு விலக்கு ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை, ஜூன் 28: தகவல் உரிமைச் சட்டத்தில் இருந்து சிபிஐ அமைப்புக்கு விலக்கு அளித்திருப்பது ஏன் என்று விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமைச்சட்டத்தின் மூலம், அரசு அலுவலகங்களில் நடைபெறும் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு

27.6.11

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள் காலத்தின் கட்டாயம்!


உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர் .
அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும் , ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும்   இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் , ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர் .

உலக மக்கள் தொகையில் 1 . 5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர் .
அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு

முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யஹூவின் 19 வயது மகனும், ராணுவ செய்தித் தொடர்பாளருமான யாயிர் நதன்யஹூ, முஸ்லீம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் யாயிர்

60 லட்சம் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை! குர்ஷித்

சென்னை : நடப்பு கல்வி ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 60 லட்சம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை, பஷீர் அகமது சையது கல்லூரியில் நேற்று நடந்த இந்திய சிறுபான்மையினரின் பிரச்னைகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பிலான

இலண்டனில் சிபிஐ விசாரணை வசமாய் சிக்கும் தயாநிதி!


ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.
இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில்

சிறையில் மகனை நினைத்து கனிமொழி ஏக்கம்


2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 15ஷ்10 தனிமைச் அறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தனது மகனை நினைத்து ஏக்கத்தில் இருப்பதாகவும், சிலசமயம் கதறி அழுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருந்தாலும் கனிமொழி முன்பு புன்னகையுடன் காணப்பட்டதாகவும், அவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததில் இருந்து அந்த புன்னகையைக் காணவில்லை என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுகவுக்கு எதிராக கடுமையாக வீசிய மக்கள் அலையால் தோற்றோம்- அன்புமணி


திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் வீசிய கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிருப்தி அலையால்தான் பாமக தோல்வி அடைய நேரிட்டது. திமுகவுக்கு எதிரான அலையில் பாமக சிக்கிக் கொண்டது என்பதே உண்மை என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பாமகவின் மக்கள் டிவிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

26.6.11

சமையல் கியாஸ், டீசல் விலை உயர்வு: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  கியாஸ், டீசல், மண்எண்ணெய் விலை உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:-
ஏழை, நடுத்தர மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூபாய் 2ம்,

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!


அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்

சென்னை, ஜூன். 26-  டீசல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசு டீசலுக்கான

கார்பரேட் சாமியார் ராம்தேவ்வின் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!


சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

25, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது

புதுடெல்லி, ஜூன். 26-  வருகின்ற 29ந்தேதி முதல் 25, 50 பைசா நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பு

அல் கொய்தா இயக்கத்தின் பெயரை மாற்ற விரும்பிய பின்லேடன்

இஸ்லாமாபாத், ஜூன். 26-  அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பெயரை ஒசாமா பின்லேடன் மாற்ற விரும்பியதாக அவர் எழுதிய கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடன், கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். அப்போது, அவர் வசித்த வீட்டிலிருந்து வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள்

25.6.11

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!


கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு

சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன-காஸா


கடந்த ஐந்து வருட காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையினால் அமுல் நடத்தப்பட்டுவரும் காஸா மீதான சட்டவிரோத முற்றுகை குறித்து சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றன. இந்த மெத்தனப் போக்கினால், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பான இந்த முற்றுகையில் சர்வதேச சமூகமும் பங்குகொண்டுள்ளது என்றுதான் நாம் கருதவேண்டி இருக்கின்றது" என காஸா முற்றுகைக்கு எதிரான

மீட்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் டெல்லி திரும்பினர் பாக்கிஸ்தானுக்கு நன்றி!


சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி கப்பம் தொகை செலுத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்தியர்கள் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.
சோமாலிய கடற்கொள்ளையரால் பிடிக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்ட எம்.வி.சூயஸ் சரக்குக் கப்பல், ஓமன் நாட்டுக்கு வரும் வழியில் கடற்புயலில் சிக்கியதால், அதில் இருந்த

மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை இரக்கமற்ற செயலாம்! சிந்தனையற்ற மனிதன்


ஜாம்ஷெட்பூர் : ""சில்காரி படுகொலை வழக்கில், மாவோயிஸ்டுகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது இரக்கமற்ற செயல்,'' என ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி கூறியுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில், ஜார்க்கண்ட் மாநிலம் சில்காரி கிராமத்தில், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கண்டனப்

67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது

இஸ்லாமாபாத், ஜூன். 25-  67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு பாகிஸ்தான் நிபந்தனையுடன் விசா வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 67 அமெரிக்க உளவுத்துறையினருக்கு விசா வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் உளவுவேலை பார்ப்பதற்காக வருபவர்கள் பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்கா பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டால் மட்டுமே, அவர்களுக்கு விசா வழங்க முடியும்

“சாரைப்பாம்பை விழுங்கும் நாகம்”..: மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி!

தன் இனமே தன் இனத்தை அடித்து உண்ணும் அவலமான நிலையில் இன்று காலம் நகர்ந்து செல்கின்றது. அந்த வகையில் இந்த பாம்பு இணைக்கின்றது. இது வரையில் பாம்பும் கீரியும் சண்டை போடுவதை பார்த்திருப்போம். வேறு சில ஊர்வனவற்றை  உண்ணும் கொடுமை கண்டிருப்போம் ஆனால் தன் இனமான பாம்பையே உண்ணும் காட்சியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பாம்புகளின் ராஐாவான நாகப்பாம்பு ஒன்று அப்பாவியான சாரை பாம்பு ஒன்றை உண்ணும் அரிய காட்சியை காண காணொளியை பாருங்கள்.    ( வீடியோ )

24.6.11

சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: அமெரிக்க பக்தர்

புட்டபர்த்தி, ஜூன். 23-  சாய்பாபா தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இப்பணம் கொடி கொண்டா போலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார்

இந்நாள், முன்னாள், துணை முதல்வர் தேர்தல் சிலவு கணக்கு!!


தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

ஆனால் முதல்வர் ஜெயலலிதா, ரூ.9.5லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி

ரூ.100 கோடி நிலம், சொத்துகள் அபகரிப்பு: அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது?


தமிழக மேற்கு மண்டலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலங்கள், சொத்துகள் விவசாயிகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது, போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், அவர்களின் பினாமி பெயரில் செயல்படும் கட்டுமான நிறுவனங்களின் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின்

வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு 6 ஆண்டுகள் சிறை


வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியாவின் மகன் அராபத் ரகுமான் கோகோவிற்கு வங்கதேச நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் முறைகேடான வகையில் ரூ. 2.7 மில்லியன் டாலர் அளவிற்கு பணம் ஈட்டியதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

பா.ம.க.,வில் நீக்கம் தொடர்வது யாருக்காக? புதிய பரபரப்பு


பா.ம.க., தோன்றிய காலத்தில், அன்புமணியின் எதிர்காலம் கருதி, தலித் எழில்மலை உள்ளிட்ட, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இன்று தொடர் தோல்வியால் துவண்டு கிடக்கும் பா.ம.க.,வில், தலைவர் மணிக்காக, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர் நீக்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு தேர்தல் வெற்றிக்காக, பா.ம.க., அணி மாறும் வித்தையை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. 2009, லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல்

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?: அறிவியல் உண்மை!

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?: அறிவியல் உண்மை!
குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும்

23.6.11

சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது

சென்னை, ஜூன். 23-  சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் இடம்பெறாது, என்று கண்காட்சியை நடத்துபவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தக் கண்காட்சியில் நடைபெறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்

ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் மீண்டும் தேர்வு

நியூயார்க், ஜூன். 22-   ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பான் கி மூன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

67 வயதான தென் கொரிய முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கி மூனை 192 நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2012 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. மீண்டும் ஐநா பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட

மேலும் 5 இந்திய மொழிகளில் தமிழ் உட்பட கூகுள் சேவை அறிமுகம்

வாசிங்டன், ஜூன். 23  மேலும் 5 இந்திய மொழிகளில் தனது மொழிபெயர்ப்பு தேடுதல் சேவையை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த சேவைகள் இன்று(ஜூன் 22) முதல் தொடங்கப்படுவதாக கூகுள் நிறுவன

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!


இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.

இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!

*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.

கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி


தன் மகள் கனிமொழியை, தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி: ரூ. 1250 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூன். 23-  ஏழைப் பெண்களுக்கு தரமான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தயாரித்து வழங்குவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் அதிகாரிகள் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பொருட்கள் தொடர்பான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மிக்சி,

குஜராத் பல்கீஸ் பானு வழக்கு:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- CBI


கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்து, முஸ்லிம் சகோதரிகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான

22.6.11

திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டார் கனிமொழி


பாதுகாப்பு காரணங்களுக்காக திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி திஹார் சிறையில் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்லார். அவருக்குப் பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மே 20ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மகளிர் சிறையான சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
 அவரது ஜாமீன் மனுக்களை