தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.9.11

சென்னை அடுத்த அரக்கோணம் அருகே இரயில்கள் மோதல் 15 பேர் பலி 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்


VBK-TRAIN_1_781514f
சென்னை: சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த விரைவு பாசஞ்சர் ரயில் மோதி பெரிய விபத்து நேரிட்டது.
நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று

துபாய் நாட்டில் 17 இந்தியர்கள் விடுதலை

துபாய், செப். 14-  சார்ஜாவில் மிஸ்ரி நசீர்கான் என்ற பாகிஸ்தானியர் ஒருவரை இந்தியர்கள் 17 பேர் சேர்ந்து கொலை செய்து விட்டனர். அவர்களுக்கு சார்ஜா கோர்ட்டு, கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.4.36 கோடி கொடுப்பதாக, குற்றவாளிகள் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொள்வதாக மிஸ்ரி நசீர்கானின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி நேற்று கோர்ட்டில் ரூ.4.36 கோடி பணம், பாதிக்கப்பட்டவரின்

காபுலில் தலிபான்களின் திடீர் தாக்குதல் - 77 அமெரிக்க படைகள் காயம்!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேட்டோ படையின் தலைமை
அலுவலகம் மற்றும், அமெரிக்க தூதரகத்தினை குறிவைத்து தலிபான்கள், தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு என்பவற்றில், 77 அமெரிக்க இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 5 ஆப்கானிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

குஜராத் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை – ஜாகியா ஜாஃப்ரி


zakia
டெல்லி:குஜராத் கலவரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஜாக்யா ஜாஃப்ரி, கோத்ரா கலவரத்துக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக திரிவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
நீண்ட சட்ட போராட்டத்துக்கு தயாராக இருப்பதாக கூறிய ஜாக்யா, குஜராத் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

மோடிக்கு எதிரான கலவர வழக்கு -உச்சநீதிமன்றம் கண்காணிக்க மறுப்பு!


அகமதாபாத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் மர்மக்கும்பல் ஒன்று ரயில் பெட்டி ஒன்றை எரித்ததன் விளைவாக அதில் பாபர் மசூதியை இடிப்பதற்காக பயணம் செய்த கரசேவகர்கள் மற்றும் பொதுமக்கள் கருகி சாம்பலானார்கள். இதனை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீது இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தினர்.

மேலும் அவர்களின் வீடுகள்