தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.4.11

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்டரம் 2ஜி வழக்கு குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் - முக்கிய முடிவெடுக்க இன்று கூடுகிறது திமுக ?


ஸ்பெட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகார வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில்,
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி,

2011 இன் Great Escape! : கந்தஹார் சிறையிலிருந்து தலிபான்கள் தப்பியது இப்படித்தான் (படங்கள்)


தெற்கு ஆப்கானிஸ்த்தானில் உள்ள கந்தஹார் சிறையிலிருந்து 476 தலிபான் கைதிகள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றனர். ( படங்கள் )
எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி ஐந்து மணித்தியாலங்களாக இந்த தப்பிச்செல்லல் நடவடிக்கை நடந்தது. எனினும் காவலிலிருந்த ஆப்கான் படையினருக்கு அவர்கள் தப்பிச்சென்று மூன்று மணித்தியாலங்கள் வரை என்ன நடந்தது என்றே தெரியாது.
2008ம் ஆண்டு, தற்கொலை குண்டு தாக்குதல் மூலம், நூற்றுக்கணக்கான தலிபான்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு தலிபான்களுக்கு மீண்டும் பாரிய வெற்றியை தேடித்தந்த சம்பவமாக இது மாறியுள்து.

மகரஜோதி இயற்கையானது - மகரதீபம் ஏற்றப்படுவது - நீதி மன்றத்தில் சபரிமலை தேவஸ்தான நிர்வாகம்


சபரிமலையில் வருடம் தோறும் மகர சங்கிராந்தி தினத்தன்று  வானில் தெரியும் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர தீபம் மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம்  தெரிவித்திருக்ககிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புல்மேடு பகுதியில் நின்று மகர ஜோதியை தரிசித்த  பக்தர்கள் திரும்பியபோது ஏற்பட்ட   நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பில்  கேரள  உயர் நீதிமன்னறத்தில்  பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இவ்வாறு தொடரப்பட்ட ஒரு

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது


sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் அனைத்து போர்விதிமுறைகளையும் இலங்கை

எஸ்.எம்.எஸ் மூலம் சமையல் கேஸ் பதிவு


சென்னை, எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கேஸ் பதிவு செய்வதற்கு 10 இலக்க தொலைபேசி எண்ணை இண்டேன், எச்.பி. கேஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் கேசுக்கு பதிவு செயலாம்.
8124024365 என்ற பத்து இலக்க எண்ணில் இன்டராக்டிவ் வாய்ஸ் சிஸ்டம் மூலம் இதில் 24 மணி நேரமும் கேசுக்கு பதிவு செய்யலாம். மேலும் இந்த 10 இலக்க