தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.3.11

இந்தியா:ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

பலாசூர்(ஒரிசா),மார்ச்.6:எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒரிசாவின் வீலர் தீவில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. துல்லியமான, விருப்பமான முடிவை எட்டும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றது.

சவூதியில் போராட்டம் நடத்த தடை


ரியாத்,மார்ச்.6:சவூதி அரேபியாவில் அரசுக்கெதிரான போராட்டங்கள், கூட்டத்தை நடத்துவது, பேரணிகள் ஆகியவற்றுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அரசுக்கெதிரான போராட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும். எவரேனும் சட்டத்தை மீறினால் அவர்களுக்கெதிராக தேவைப்பட்டால் நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டம்

கஷ்மீர்:கடந்த ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 - அரசு அறிக்கை


ஜம்மு,மார்ச்.6:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த எழுச்சி போராட்ட வேளையில் 104 சாதாரண மக்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.

இதில் 92 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமேற்பட்டு பின்னர் மரணமடைந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் இதர 12 பேரும் கொல்லப்பட்டதாக கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையோ அல்லது ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடோ வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஒமான்:போரா​ட்டம் எதிரொலி - அமை​ச்சரவையில் அதிரடி மாற்றம் - கபூஸ் நடவடிக்கை

மஸ்கட்,மார்ச்.6:அரசுக்கெதிரான போராட்டம் நடைபெறும் ஒமானில் அந்நாட்டு மன்னர் சுல்தான் காபூஸ் பின் ஸைத் அமைச்சரவை மற்றும் நிர்வாகத்துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சீர்திருத்தம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கோரி ஒமானில் சில நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து அமைச்சர்களையும் பதவியை விட்டு விலக்குவது மற்றும் அவர்களது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள்

சிங்கப்பூர் ராணுவத்திற்கு சீக்கிய தளபதி

சிங்கப்பூர்,மார்ச்.6:சிங்கப்பூரில் சீக்கிய மதத்தைச் சார்ந்த பிரிகேடியர் ஜெனரல் ரவீந்தர் சிங் அந்நாட்டின் புதிய ராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதன்முதலாக சிங்கப்பூரில் ஒரு சீக்கியருக்கு ராணுவத்தின் உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 41 வயதான ரவீந்தர் சிங் தற்போதைய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் சான்சூனிடமிருந்து இம்மாதம் 25-ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.

1982-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்ந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரவீந்தர் சிங் தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்