தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.11

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார்

லிபியாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக வெடித்துள்ள புரட்சியில் இதுவரை 300 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், லிபியாவில் வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை குறித்து மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனவே, அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளது. இது தவிர, பக்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்களும் ஏமனில் 14 ஆயிரம் இந்தியர்களும் உள்ளன. அந்த நாடுகளிலும் கலவரம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய வெளியுறவு மந்திரி

பஸ் தின ஊர்வலத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்


சென்னை, பிப். 24- சென்னையில் நேற்று நடந்த பஸ் தின ஊர்வலம் பயங்கர கலவரமாக வெடித்தது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் பெண் துணை கமிசனர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 35 போலீசாரும், பொதுமக்கள் 6 பேரும் காயமடைந்தனர்.
சென்னையில் போலீஸ் தடை

லிபியா:ராணுவம் திரிபோலியில் குண்டுவீசித் தாக்கியது, சாலைகளில் பிணக்குவியல்


திரிபோலி,பிப்.23:அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத்தொ டர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்

கெய்ரோ,பிப்.23:அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறிப்பிடித்து சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன்றுக் குவித்து வரும் சூழலில் அந்நாட்டை அரபு லீக்கிலிருந்து வெளியேற்றியதாக அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸாதெரிவித்துள்ளார்.

லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.

பக்ரைனில் அரசியல் கைதிகளை விடுவிக்க மன்னர் சம்மதம்


மனாமா பக்ரைனில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டியா பிரிவு கைதிகளை விடுவிக்கும்படி மன்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு 25 பேர் மீது போடப்பட்ட வழக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை துவங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது

வன்முறையை நிறுத்துமாறு லிபிய அதிபருக்கு ஐ.நா. கோரிக்கை


நியூயார்க், பிப். 23- அமைதி வழியில் போராடிவரும் லிபிய மக்களின் மீது இராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு லிபியா அதிபர் கர்னல் கடாபியை ஐ.நா. பாதுகாப்புப் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.நா.வின் உயர் அதிகார அமைப்பான பாதுகாப்புப் பேரவை அதன் இம்மாத தலைவரான பிரேசில் தூதர் மரியா லூயிசா ரிபேரோ வயோட்டி தலைமையில்