தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.4.11

அமெரிக்காவி​ன் சதித்திட்ட​ம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை​யுடன் இருக்கவேண்​டும் – அஹ்மத் நஜாத்


Mahmud_Ahmadinejad_181110_8
டெஹ்ரான்:அமெரிக்காவும்,இஸ்ரேலும் இல்லாத புதிய மத்திய கிழக்கு உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டம் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானி-அரபு மற்றும் ஷியா-சுன்னி ஆகிய பிரிவினை மோதல்கள் வெடித்துள்ள சூழலில் நஜாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.
ஈரானில் சிஸ்தான்-பலூசிஸ்தான்

முபாரக் குடும்பம் கூண்டோடு தடுப்புக்காவலில் : இராணுவ அரசு அதிரடி


எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து பதவிவிலக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக் மற்றும் அவருடைய
இரு மகன்களையும் 15 நாள் தடுப்புக்காவலில் வைத்து, இலஞ்ச ஊழல் தொடரான விசாரணை நடத்தப்படவுள்ளதாக இராணுவ அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், குற்றப்பிரிவினர் பேஸ்புக் இணையத்தளத்தில் நேற்று (புதன் கிழமை) அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

யூரி கெகாரின் விண்வெளியில் சுற்றிவந்து ஐம்பது வருடங்கள்


ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் சுற்றிவந்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன. விண்வெளிக்குச் சென்றுவந்த முதலாவது மனிதன் அவர்தான்.
வானத்தை வசப்படுத்த மனிதன் எடுத்த முயற்சியின் முதல் வெற்றியாக அது பார்க்கப்பட்டது.
அதுவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யா தான் முதல் முறையாக அந்த சாதனையை செய்தது. யூரி கெகாரின் பூமியை ஒரு சுற்று சுற்றிவந்து மீண்டும் பூமிக்குள் இறங்கியபோது அவர் விஞ்ஞான உலகின் கதாநாயகனாக பார்க்கப்பட்டார்.

சி.ஐ.ஏ உளவாளிகளை திரும்ப அழைக்கவேண்டும் – பாகிஸ்தான்


0412-pakistan-drone-attacks_full_380
வாஷிங்டன்:பாகிஸ்தானில் சி.ஐ.ஏ ஏஜண்டுகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். ஆப்கான் எல்லையில் தொடரும் ட்ரோன் (ஆளில்லா விமானத் தாக்குதல்) தாக்குதலை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.
சி.ஐ.ஏ தலைவர் லியோன் பனேட்டாவுடன் சந்திப்பை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தலைவர் அஹ்மத் ஷுஜா பாஷா வாஷிங்டனுக்கு