தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.5.11

ஏமனில் உள்ள தமிழக செவிலியர்களை மீட்க விஜயகாந்த் வேண்டுகோள்


சென்னை, மே.28-   வளைகுடா நாடான ஏமனில் உள்நாட்டு போரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த செவிலியர்களை காப்பாற்றுமாறு மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபருக்கு ஆதரவாக ராணுவமும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக பழங்குடியினரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை: சென்னையில் கருத்தரங்கம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் சிறிலங்க அரச படைகள் போர்க் குற்றங்களை இழைத்துள்ளன என்றும், அதன் மீது ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ள ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
‘தமிழீழ விடுதலையும்

ருவாண்டா இன அழிப்புடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது


ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும்

முதல் முறையாக ஐரோப்பியப் பாராளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர் !


குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனாரா என்ற தலைப்பில், ஐரோப்பியப் பாராளுமன்ற உறுபினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடு ஒன்றை முதல் முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற வளாகத்தில் யூன் 1ம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிவுற்று 2 வருடங்கள் ஆகியும் குற்றம் இழைத்தவர்கள்

எகிப்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குகிறது சவுதி அரேபியா


கெய்ரோ, மே.22- எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார். தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. 
 
இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த சவுதி அரேபியா முன்வந்துள்ளது. எகிப்துக்கு அந்நாடு ரூ.20 ஆயிரம் கோடி நிதிஉதவி அளிக்கிறது.