தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.11

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை இணை
அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.

'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் சவூதி தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?



சவூதி அரபிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், வெளிநாட்டினர் தங்கள் சம்பளத்தை 'அப்படியே' தாயகம் அனுப்புவதில் கட்டுப்பாடு ஏற்படுத்த சவூதி தொழிலாளர் நல அமைச்சகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி வாங்கும் சம்பளத்தில் 'குறிப்பிட்ட சதவிகிதம்' மட்டுமே தாயகம் அனுப்ப அனுமதிக்கப்படும் என்று

அடையாளம் தெரியாத கல்லறைகள்:விசாரணை நடத்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை


புதுடெல்லி:கஷ்மீர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகளை குறித்தும், மாநிலத்திலிருந்து காணாமல் போன் ஆயிரக்கணக்கான நபர்களைக்குறித்தும் முழுமையான விசாரணையை நடத்த மத்திய அரசு தயாராகவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

துருக்கி நிலநடுக்கம் : 2 வாரங்களே ஆன கைக்குழந்தை பத்திரமாக மீட்பு (வீடியோ)


துருக்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலநடுக்கத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வாரக்குழந்தை, அவரது தாயார், மற்றும் பாட்டியார் எரிக் நகரின் கட்டிட இடிபாடுகளிலிருந்து 48 மணிநேரத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா


புதுடில்லி: இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக

ஹுஸைன் காதிரிக்கு மரணத்தண்டனை தீர்ப்பு கூறிய நீதிபதி சவூதியில் அடைக்கலம்


இஸ்லாமாபாத்:பஞ்சாப் மாகாண முன்னாள் ஆளுநர் ஸல்மான் தஸீர் கொலைச்செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாலிக் மும்தாஸ் ஹுஸைன் காதிரிக்கு மரணத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி பர்வேஸ் அலி ஷா சவூதி அரேபியாவில் அடைக்கலம் தேடியுள்ளார்.தண்டனைக்குரிய தீர்ப்பை வழங்கியபிறகு கொலை மிரட்டல் வந்ததையொட்டி நீதிபதியும், அவரது குடும்பத்தினரும் சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்காதீர்கள் : அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கோரிக்கை


இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து ஆஸ்திரேலியா தன் நாட்டு
சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்த அறிவுரைகளை திரும்ப பெறுமாறு, இந்தியா வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி மற்றும், சனநடமாட்டம் அதிமுள்ள இந்திய நகரங்களுக்கு, தன் நாட்டு பயணிகள் சுற்றுலா மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்கும் படி ஆஸ்திரேலியா அறிவுறுத்தியிருந்தது.

"முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது


போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது.
“உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால்

இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த போலீஸ்காரர் கைது

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஜெர்சி (30). பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக ஜெர்சி வந்தார்.

2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஆவடி சிறப்பு காவல்படை காவலர் அருண்குமார் (28), ஜெர்சி மீது காதல் கொண்டுள்ளார். ஜெர்சியிடம் இதுபற்றி ஜாடைமாடையாக பேசியுள்ளார். பலமுறை அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார்.