தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.11

இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்

லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.

இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.

செப்டம்பர் 11 மற்றும் லண்டனில் ஜூலை 7ல் நடந்தத தாக்குதல்களால் இங்கிலாந்தில் இஸ்லாமோபோபியா பரவியது. எனினும் இதனால் இஸ்லாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை

கர்கரே தன்னுடன் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் திக்விஜய் சிங்


புதுடெல்லி,ஜன.5:மும்பைத் தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்காரே தான் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தீவிர ஹிந்துத்துவாக்களிடமிருந்து தனது உயிருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்தார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தகவலை வெளியிட்டிருந்தார்.

இதுத் தொடர்பான ஆதாரங்களை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் அவர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாலை 5.44 மணிக்கு மும்பையில் தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைமையகமத்திலிருந்து 022308733 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து தனது மொபைல் எண்ணான 09425015451க்கு கர்காரே அழைத்ததன் ஆவணங்களை திக்விஜய் வெளியிட்டுள்ளார். அதே நாளில் மாலை 8 மணிக்கு மும்பையில் தாக்குதல் நடைபெறுகிறது. சில மணிநேரங்களில் கர்காரே கொல்லப்படுகிறார்.

நான் பொய்க் கூறினேன் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மன்னிப்புக் கோரவேண்டும் எனக் கூறிய திக்விஜய்சிங், கர்காரேயும், நானும் தொலைபேசியில் உரையாடியதற்கு ஆதாரமில்லை எனத் தெரிவித்த மஹாராஷ்ட்ரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலும் மன்னிப்புக் கோரவேண்டுமென அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தொலைபேசி பதிவின் படி 6.21 நிமிடங்கள் இருவரும் உரையாடியுள்ளனர். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினை வெளிப்படுத்தியதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டுதான் தான் இவ்வழக்கினைக் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கர்காரே தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக திக்விஜய்சிங் தெரிவித்தார்.

உரையாடல்களின் ஆவணங்களை ஒரு வருடத்திற்கு மேலாக பாதுகாப்பதில்லை என பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தெரிவித்ததாக திக்விஜய் சிங் கூறியிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் தான் நிம்மதி இழந்திருப்பதாகவும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை அடையாளங் காண முயற்சிப்பதாகவும் கர்காரே தெரிவித்ததை திக்விஜய்சிங் வெளியிட்டார்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் தனக்கெதிராக வெளியிடப்பட்ட தலையங்கம் வேதனை ஏற்படுத்தியது என கர்காரே தெரிவித்துள்ளார்.

துபாயில் கர்காரேயின் மகன் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக சாம்னாவில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் கர்காரேயின் மகன் துபாயில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறான்.

புனே பேக்கரி குண்டுவெடிப்பு மற்றும் வாரணாசி குண்டு வெடிப்புகளைத் தவிர இந்தியாவில் குண்டுவெடிப்புகள் குறைந்துள்ளதாக திக்விஜய்சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

"இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னணியில் ஒரு தனிக்குழு செயல்பட்டு வருகிறது. சபரி கும்பமேளாவில் வைத்துதான் மலேகான் குண்டு வெடிப்பிற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் உள்ள சுவாமி அஸிமானந்தாவை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியாகும். தீவிரவாதத் தாக்குதல்களின் பெயரால் இவர்களை கைதுச் செய்யும்பொழுது பா.ஜ.கவுக்கு ஏன் வேதனையாக இருக்கிறது? ஏன் அவர்களுக்காக இவர்கள் களமிறங்குகிறார்கள்? இந்திரேஷ் குமாரின் நேராக விரல் சுட்டிக் காட்டப்படும் பொழுது ஏன் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்?இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் என்.ஐ.ஏ விசாரிக்கவேண்டும்.

சுனில் ஜோஷியின் கொலை உட்பட தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் மத்தியபிரதேச அரசு உண்மைகளை மறைத்துவிட்டது. சுனில் ஜோஷியை ரகசியம் வெளியே கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ்தான் கொலைச் செய்துள்ளது. இவ்வகையில் வேறு சிலரும் அச்சுறுத்தப்படுகின்றனர்." என திக்விஜய்சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளித

இந்​தி​யா​வில் 100 தீவி​ர​வா​த இயக்கங்களுக்குத் தடை

டெல்லி: சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் 100க்கு மேற்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

இதில் விடு​த​லைப் புலி​கள் அமைப்பு ​(எல்​டி​டிஈ)​,​​ இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி),

தனி காலிஸ்​தான் மாநி​லம் கோரும் பப்​பர் கல்சா இன்​டர்​நே​ஷ​னல் ​(பிகேஐ)​,​​ காலிஸ்​தான் கமாண்டோ படை ​(கேசி​எப்)​,​​ சர்​வ​தேச சீக்​கிய இளை​ஞர்​கள் சங்​கம் ​(ஐஎஸ்​ஒய்​எப்)​,

காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களான லஷ்​கர் இ-​தொய்பா,​​ ஜெய்ஷ்-​இ-​முக​மது,​​ தெஹ்​ரிக்-​இ-​பர்​கான்,​​ ஜமியத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ அல்-​காய்தா,​​ ஹர்​கத்-​உல்-​முஜா​கி​தீன்,​​ ஹர்​கத்-​உல்-​அன்​சர்,​​ஹர்​கத்-​உல்-​ஜிகாத்-​இ-​இஸ்​லாமி,​​ ஹிஸ்​புல் முஜா​கி​தீன்,​​ அல்-​உமர்-​முஜா​கி​தீன், ஜம்மு-​காஷ்​மீர் இஸ்​லா​மிய முன்​னணி, அஸ்ஸாம் தீவிரவாத அமைப்புகளான​​ உல்பா,​​ என்​டி​எப்பி,​​ தீந்தர் அஞ்சுமன், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்ப்படை), மாவோயிஸ்டுகள் உள்​ளிட்​ட​வை இடம்​ பெற்​றுள்​ளன.​

தீவி​ர​வாத நட​வ​டிக்​கை​யில் ஈடு​ப​டு​வோ​ருக்கு எதி​ராக கடும் நட​வ​டிக்கை எடுக்​கும் விதத்​தில் சட்​ட​வி​ரோத செயல்​களை தடுக்​கும் சட்​டத்தை மத்​திய அரசு சமீ​பத்​தில் திருத்தி அமைத்​தது.​ இந்த சட்​டத்​தின் கீழ் இப்போது இந்​தக் குழுக்​க​ளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது

பாகிஸ்தானில் பயங்கரம்-பஞ்சாப் மாகாண ஆளுநர் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் சயீர், மாலிக் மும்தாஜ் ஹூசேன் காத்ரி என்ற தனது மெய்க்காப்பாளரால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் நடந்துள்ள மிகப் பரபரப்பான அரசியல்படுகொலையாக இது வர்ணிக்கப்படுகிறது.

46 வயதேயாகும் சல்மான், பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அதிபர் சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பி்ல கூறுகையில், இஸ்லாமாபாத்தின் முக்கிய வணிகப் பகுதியான கோசர் மார்க்கெட்டை சல்மான் வந்தடைந்தவுடன் அவரது மெய்க்காவல் படையில் இருந்த ஒருவர் சரமாரியாக சுட்டுத் தள்ளி விட்டார். அதில், சம்பவ இடத்திலேயே ஆளுநர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்றார்
.

கற்பழித்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏவைக் குத்திக் கொன்ற ஆசிரியை


பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ராஜ் கிஷோர் கேசரி (வயது51). இவர் பூர்னியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைகேட்டார். ஏராளமானோர் கியூவில் நின்று மனு கொடுத்தனர்.
 
அவர்களிடம் ராஜ் கிஷோர் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அப்போது ரூபம் பதக் என்ற பெண்ணும் பார்வையாளர் போல் நின்றிருந்தார். அவர் எம்.எல்.ஏ. அருகில் வந்ததும் திடீர் என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்.எல்.ஏ.வின் விலா பகுதியில் குத்தினார். இதில் எம்.எல்.ஏ. ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
 
உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.   அங்கு கூடியிருந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
 
ஆதரவாளர்கள் தாக்கியதில் அந்தப் பெண்ணும் படுகாயம் அடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.   எம்.எல்.ஏ.வை குத்திக்கொன்ற ரூபம் பதக் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
 
அவரை எம்.எல்.ஏ. தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து 3 ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் கேசரி மீது ரூபம்பதக் 6 மாதத்துக்கு முன் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் தாமதம் செய்து வந்தனர்.
 
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது கற்பழிப்பு புகார் கூறப்படுவதாக எம்.எல்.ஏ. கூறி வந்தார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பூர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டார்.
 
அப்போது எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகார் குறித்து நிதிஷ்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் பின்னணி காரணமாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை பார்வையாளர் போல் வந்து எம்.எல்.ஏ.வை தீர்த்து கட்டிவிட்டார்.
 
ஏற்கனவே ராஜ்கிஷோர் கேசரி மீது 2008-ல் ஒரு பெண்ணை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் புகாரில் உண்மை இல்லை என்று போலீசார் வழக்கை கைவிட்டனர்.  கொலை செய்யப்பட்ட ராஜ்கிஷோர் கேசரி பூர்னியா தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா சார்பில் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
 
எம்.எல்.ஏ. கொலை செய்யப்பட்ட தகவல் கேட்டதும் முதல்- மந்திரி நிதிஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார். எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது ஆதரவாளர்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கொலையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முதல்- மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
எம்.எல்.ஏ.வின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை முதல்- மந்திரி சுஷில்குமார் மோடி பூர்னியா நகருக்கு விரைந்துள்ளார். எம்.எல்.ஏ. கொலை குறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில பாரதீய ஜனதா தலைவர் சி.பி. தாகூர் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிய தடை உத்தரவு வருகிறது

இலங்கையில் மினி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை) அணிவதற்கு தடைவிதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 

பாரம்பரியமான நாட்டில் பொது இடங்களில் எத்தகைய ஆடைகள் அணியலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து அறிக்கை வெளியிடுமாறு ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அந்நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மினி ஸ்கர்ட் அணிய தடை விதிக்க வேண்டும் என்ற மக்களின் புகார்களை பரிசீலனை செய்தது. இந்த பரிசீலனையை ஒரு கமிட்டிக்கு அனுப்பி பொது இடங்களில் எப்படிபட்ட ஆடைகள் அணியலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் பிடிஐக்கு தெரிவித்தார்.

பெண்கள் ஆடைகள் குறித்து அரசு இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. ஆனால் லக்பிமா என்னும் செய்தித்தாள் மினி ஸ்கர்டுக்கு தடைவிதிப்பது குறித்து அரசு எண்ணுவதாகத் தெரிவித்துள்ளது என்று அமைச்சக செயலாளர் நிமல் ரூபாசிங்கே கூறினார்.

இது குறி்த்து அமைச்சர் டி.பி. ஏகநாயகே கூறியதாக லக்பிமா வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

மதம் மற்றும் சலாச்சார பிரநிதிகளும், குழுக்களும் பெண்கள் மினி ஸ்கர்ட் அணிவது நமது கலாச்சாரத்தை சீரழித்துவிடும் என்று வருத்தம் தெரிவித்து எனக்கு எழுதியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிலைமை மேலும் மோசம் அடைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் பெண்கள் ஆபாசமாக போஸ் கொடுத்திருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்ற ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாப் பாடகர் அகானின் இசை வெளியீடு ஒன்றில் பிகினி அணிந்த பெண்கள் புத்தர் சிலையைச் சுற்றி நடனமாடுவது போல் படமாக்கப்பட்டதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு இலங்கையில் கச்சேரி நடத்த விசா மறுக்கப்பட்டுள்ளது.

200 உள்நாட்டு ஆபாச இணையதளங்களை தடை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர்.