தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.11

சுனில் ஜோஷி கொலை: சூத்திரதாரி ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

புதுடெல்லி,பிப்.9:இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடத்திய குண்டுவெடிப்புகளின் ஆதாரங்களை அழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷியை கொலைச்செய்ய திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமார்தான் என்பது ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது
குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக ராஜஸ்தான் மாநில ஏ.டி.எஸ் கைதுச்செய்த ஹிந்துத்துவ பயங்கரவாதியான பரத் மோகன்லால் ரதேஷ்வர் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் இதனை தெரிவித்துள்ளான்.

ஏற்கனவே இவ்வழக்கில் கைதான அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றே ரதேஷ்வரும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடுச் செய்துக் கொடுத்தது ரதேஷ்வர்தான் என்பதை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கண்டறிந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் மாநிலம் வால்ஸாதிலிருந்து ரதேஷ்வர் கைதுச் செய்யப்பட்டான். ரதேஷ்வரின் வாக்குமூலத்தையும் குற்றப்பத்திரிகையுடன் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான சுனில்ஜோஷி குண்டடிப்பட்டு இறந்துபோனான். ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டளையின்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளை தலைமையேற்றவன் சுனில்ஜோஷி.

குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெளியாகுவிடும் என அஞ்சி ஆர்.எஸ்.எஸ்காரர்களே ஜோஷியை கொலைச் செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுத் தொடர்பாக ஜோஷியுடன் தங்கியிருந்த 4 பேரில் ஒருவரான ஹர்ஷத் சோலங்கி உள்பட 3 பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். வதோதரா பெஸ்ட் பேக்கரி வழக்கில் சோலங்கி முக்கிய குற்றவாளியாவான்.

ஜோஷி கொலைச் செய்யப்பட்ட தகவலை அன்றைய இரவில் ஆனந்த்ராஜ் என்ற நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தன்னிடம் தெரிவித்ததாக சி.ஆர்.பி.ஸி 151,154 படி பதிவுச் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் ரதேஷ்வர் கூறியுள்ளான்.

"ஆனால், அப்பொழுது ஜோஷிதான் கொலைச் செய்யப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. மறுநாள் பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளியானபோது, இவர் நம்முடன் தங்கியிருந்த மனோஜ் அல்லவா?(ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஜோஷியை மனோஜ் என்றுதான் அழைப்பார்கள்) என்பது தெரியவந்தது. பின்னர் நான் பிரக்யாசிங்கை அழைத்தேன். அப்பொழுது அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதை உறுதிச்செய்தார். அதன் பின்னர் அஸிமானந்தாவை அழைத்தேன். அவர் ஜோஷி கொலைச் செய்யப்பட்டதில் அதிருப்தியாக இருந்தார். ஜோஷியை கொலைச் செய்தது இந்திரேஷ்குமார்தான் என அஸிமானந்தா என்னிடம் தெரிவித்தார்.

இந்திரேஷிற்கு ஜோஷியை பிடிக்காது. இக்காரியத்தை விரைவாக கர்னல் புரோகித்தை அழைத்துக் கூறுமாறு நான் அஸிமானந்தாவிடம் தெரிவித்தேன். ஜோஷி எனது வால்ஸாத் வீட்டில்தான் தங்கியிருந்தார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இரவு ஜோஷி என்னை தொலைபேசியில் அழைத்தார். அவர்களுக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கிறோம் எனவும், தொலைக்காட்சியை பார்க்கவும் என்னிடம் ஜோஷி தெரிவித்தார். அச்செய்தி அஜ்மீரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பாகும்.

வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்த நான் இந்தியாவிற்கு திரும்பி வந்தபொழுது தேஷ்முக் பாய் என்பவர் மூலமாக அஸிமானந்தாவுக்கு அறிமுகமானேன். வால்ஸாதில் வீடுகட்ட நிலத்தை வாங்கியபொழுது அங்கு பூஜைகளை செய்தது அஸிமானந்தாவார். தொடர்ந்து அவருடனான உறவு நீடித்தது. 2006-ஆம் ஆண்டு அஸிமானந்தாவின் ஆசிரமத்தில் வைத்து விவேகானந்தரின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினேன். அங்கே வைத்துதான் பிரக்யாசிங் மற்றும் சுனில் ஜோஷிக்கு அறிமுகமானேன்.

2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முந்திய இரவில் ஜோஷி எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் ஒரு சிறுவனும் உடனிருந்தான்." இவ்வாறு ரதேஷ்வர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

முபாரக் எகிப்தை விட்டு வெளியேறப் போவதாக ஜெர்மன் பத்திரிகை


கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் தனக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனிக்கு செல்லவிருப்பதாக ஜெர்மனியிலிருந்து வெளியாகும் ஸ்பீகல் பத்திரிகை தெரிவிக்கிறது.

மருத்துவ சோதனை என்ற பெயரில் முபாரக் வெளியேறவிருப்பதாகவும், இதற்காக ஜெர்மனியில் ஆடம்பர க்ளீனிக்கில் தங்க விருப்பதாகவும் அப்பத்திரிகை தெரிவிக்கிறது.

இதுக்குறித்து அமெரிக்க அரசும் முபாரக் அரசும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. முன்பு ஈரானில் புரட்சி ஏற்பட்ட பொழுது அந்நாட்டு சர்வாதிகாரி ஷா பஹ்லவி மருத்துவ சிகிட்சை என்ற பெயரில் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:கல்ஃப் நியூஸ்

அடுத்த ஊழல்: இஸ்ரோ அலை ஒதுக்கீட்டி​ல் ரூ.2 லட்சம் கோடி இழப்பு

டெல்லி,பிப்.:தொலைத் தொடர்பு துறையில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக்கை துறை கூறியது. இந்த விவகாரம் விசுவ ரூபம் எடுத்து நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போன்ற முறைகேடு மத்திய விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவிலும் நடந்து இருப்பதை மத்திய தணிக்கை துறை கண்டு பிடித்து உள் ளது. தொலை தொடர்பு துறை போலவே இஸ்ரோவிலும் அலைவரிசை 

தமிழ்நாட்டில் இன்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 28 ந்தேதி முடிவடைகிறது.


தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:


சென்சஸ் 2011 க்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் நாளை (9 ந்தேதி) தொடங்கி 28 ந்தேதி முடிவடைகிறது. இந்த பணிக்காக 20 லட்சத்து 47 ஆயிரம் வட்டங்கள் உருவாக்கப்பட்டு 24 கோடி வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.2ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கால்களுடன் வாழ்ந்த பாம்பு

கால்களுடன் வாழ்ந்த பாம்பு,கால்களுடன் வாழ்ந்த பாம்பின் எலும்புக்கூடு லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. அவைகளுக்கு கால்கள் கிடையாது. இதற்கு முன்பு கால்களுடன் பாம்புகள் இருந்ததற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

பழங்காலத்தில் வாழ்ந்த அரிய உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் லெபனானில் ஒரு பாம்பின் எலும்பு கூட்டை கண்டெடுத்தனர். சுமார் 19 “இஞ்ச்” நீளமுள்ள அந்த பாம்பின் எலும்பு கூட்டில் கால்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

இவை சுமார் 9 1/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லெபனானில் கண்டெடுக்கப்பட்ட பாம்பின் எலும்பு கூட்டில் சுமார் “1 இஞ்ச்” அளவுக்கு கால் எலும்புகள் இருந்தன. அதே நேரத்தில் பாம்பின் வயிற்றுப் பகுதியில் கால்கள் வளர்ந்து வந்ததற்கான அறிகுறிகளும் இருந்தன.அந்த எலும்புகள் “ 1/2 இஞ்ச்” அளவில் வளர்ந்திருந்தன.

இந்த வகை பாம்புகள் கால்கள் மூலம் நடந்து திரிந்ததால் நிலத்திலும், நீரிலும், பொந்துகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த வகை பாம்புகளின் கால்கள் காலப்போக்கில் படிப்படியாக மறைந்து அவை ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக மாறியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு மரணதண்டனை வழங்கும் அபாயம்


“விக்கிலீக்ஸ்’ ஸ்தாபகர் ஜூலியன் அஸேஞ்சே சுவீடனுக்கு அனுப்பப்பட்டால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் குற்றச்சாட்டு வழக்குகளுக்காக சுவீடனுக்கு ஜூலியன் அஸேஞ்சை அனுப்புவது தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போதே அவரது சட்டத்தரணிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஜூலியன் அஸேஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் அந்நாட்டு இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவரது சட்டத்தரணியான ஜியோப்ரி ரொபேர்ட்ஸன் கூறினார்.
மேலும் சுவீடனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அஸேஞ்சே (39 வயது) மறுப்பு தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள பெல்மார்ஷ் நீதவான் நீதிமன்றில் ஜூலியன் அஸேஞ்சே தொடர்பான இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜூலியன் அஸேஞ்சே சுவீடனிலிருந்து நாடு கடத்தப்படமாட்டார் என்பதை சுவீடன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டுமேன அஸேஞ்சேவின் சட்டத்தரணிகள் வலியுறுத்தியுள்ளனர்

சோமாலியா கடற்கொள்ளையர்களால் 17 இந்திய மாலுமிகள் உட்பட 22 பேர் கடத்தல்


17 இந்திய மாலுமிகள் மற்றும் இத்தாலிய மாலுமிகள் 5 பேர் உட்பட 22 பேரை இந்தியப் பெருங்கடல்
பகுதியில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூடானிலில் இருந்து மலேசியாவிற்கு சென்றுகொண்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த சவினா கேய்லைன் என்ற எண்ணெய்க்கப்பலை இந்திய பெருங்கடலில் வைத்து மறித்து துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பின்னர் அவர்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்து சென்றதாகவும் இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள்


இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெங்களூரில் செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமர்ஸ் மற்றும் ஸ்ரீ ஜக்ருதி சமிதி என்ற பெண்கள் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான கொடுமை: தீர்க்க வழிகள் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மனித உரிமை கல்வி மற்றும் கண்காணிப்பு அமைப்பின் தென்னிந்திய பிரிவு, பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்து ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம் என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக 26 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுகிறாள். இதுபோல் 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஆண்டுக்கு 1.5 கோடி பெண் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களில் 4ல் ஒருவர் 15 வயதைத் தாண்டுவதற்கு முன்பே இறந்து விடுவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பெரும்பாலான கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும், குழந்தை பிறப்பதற்கு முன்பே ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிவதற்கான அல்ட்ராசவுண்ட் இயந்திரம் மட்டும் இருக்கின்றன. இதை வைத்து, பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டதிட்டங்கள் அனைத்தும் ஆண்களாலேயே இயற்றப்படுவதால் ஆண்களுக்கு சாதகமாகவும், பெண்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளனதுது என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நக்மோகன் தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை மட்டுமல்லாது, பாலியல் வேறுபாடு, அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு என பெண்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம். இதிலிருந்து விடுபட ஆண்களின் உதவி தேவைதுது என ஸ்ரீ ஜக்ருதி சமிதி செயலாளர் கீதா மேனன் தெரிவித்துள்ளார். செய்திகள்:அலைகள்
: