தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.11

மு.க.அழகிரிக்கு முன் ஜாமீன்!!

எப்ரல் 3, மதுரையில் வருவாய்த்துறை அதிகாரி தாக்கப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எனவே, அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நேற்று மாலை முதலே மதுரையை ஆக்கிரமித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை மு.க.அழகிரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல்

28 வருடங்களின் பின் இந்தியா வசமானது உலக கோப்பை

உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கையை வென்ற இந்திய அணி
28 வருடங்களின் பின்னர் உலக கோப்பையை மீண்டும் தனது வசமாக்கியது.
டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது.

உலக கோப்பை இந்தியாவின் வெற்றித் தருணங்கள் (படங்கள்)


யெமன்:பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி


20114113153591112_20
ஸன்ஆ: 32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஸன்ஆவை தவிர கிராமங்களிலும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மக்கள் வீதியில் இறங்கினர். தலைநகரின் பெரும்பாலான மஸ்ஜிதுகளை பூட்டிவிட்டு இமாம்களும், பொதுமக்களும் ஸன்ஆ பல்கலைக்கழக மைதானத்தில் ஜும்ஆ தொழுகையை

பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ – விவாதத்திற்கு கடும் எதிர்ப்


பாரிஸ்: ‘பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ என்ற தலைப்பில் விவாதம் நடத்துவதற்கான அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் கட்சியுடைய தீர்மானத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் முயற்சி என கத்தோலிக், ஆர்த்தோடக்ஸ், ப்ரொட்டஸ்டாண்ட் ஆகிய கிறிஸ்தவ பிரிவினரும், யூத, முஸ்லிம், புத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஈரானிலுள்ள தூதரை குவைத் திரும்ப அழைத்தது


குவைத் சிட்டி:ஈரானில் குவைத் தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. இந்நடவடிக்கை ஈரான் அரசிற்கு தெரிந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத்தில் உளவு வேலைப்பார்த்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளையில், உளவு வேலைத் தொடர்பாக குவைத்தில் ஈரான் தூதரகத்தில் ஷெர்ஷே தஃபேயை குவைத் அரசு அழைத்து கண்டனத்தை தெரிவித்துள்ளது.
உளவு வேலை காரணமாக ஈரானின் தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனா,ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை உபயோகிக்க அமெரிக்கா திட்டம்


cablegate_291110
மாஸ்கோ:ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் சர்வதேச ஏவுகணை தடுப்பு கட்டகத்தை துவங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் பிரபல ரஷ்ய பத்திரிகையான  Komsomoloskaya Pravda கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவுடன் மட்டுமின்றி ரஷ்யாவின் எல்லையையொட்டிய