தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.11

பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ – விவாதத்திற்கு கடும் எதிர்ப்


பாரிஸ்: ‘பிரான்சில் இஸ்லாத்தின் பங்கு’ என்ற தலைப்பில் விவாதம் நடத்துவதற்கான அந்நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோஸியின் கட்சியுடைய தீர்மானத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது முஸ்லிம்களை அவமானப்படுத்தும் முயற்சி என கத்தோலிக், ஆர்த்தோடக்ஸ், ப்ரொட்டஸ்டாண்ட் ஆகிய கிறிஸ்தவ பிரிவினரும், யூத, முஸ்லிம், புத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குழப்பமான காலக்கட்டத்தினூடே கடந்து செல்கிறோம் என்ற கவலையை மக்கள் மத்தியில் உருவாக்கவே இந்த விவாதம் உதவும்.
மேற்கு  ஐரோப்பாவில் மிகவும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட நாடு பிரான்ஸாகும். முஸ்லிம்களை மீண்டும் மோசமானவர்களாக சித்தரிக்கும் முயற்சிதான் இது. எத்தகையதொரு பெரும்பான்மையைக் கொண்ட கட்சி ஆனாலும், இத்தகைய விவாதங்கள் பொருத்தமானதல்ல.
ஒரு மதப் பிரிவினரைக் குறித்து ஆராயமல் தீர்மானிக்கவே இது உதவும் என அனைத்து மத தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கும் இவ்விவாதத்தைக் குறித்து சர்கோஸியின் யு.எம்.பி கட்சியிலும் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.
எதிர்கட்சியான நேசனல் ஃப்ரண்டிற்கு ஆதாயத்தை பெற்றுத்தரும் செயல் இது என ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேசனல் ஃப்ரண்டிற்கு தெளிவான பெரும்பான்மையை பெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 கருத்துகள்: