தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.11

புனித குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ்துப்பாக்கி சூடு– 4 பேர் மரணம்


புதுடெல்லி:ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

நோபல் பரிசு தனக்கு கிடைத்தது தெரியமுன்னரே, மருத்துவரை கொன்றது புற்றுநோய்!


2011 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புக்களில் முதற்கட்டமாக மருத்துவயியலுக்கான நோபல் பரிசு இன்று (திங்கட்கிழமை)அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் புரூஸ் பட்லர், பிரான்ஸின் ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடாவின் ரால்ப் ஸ்டெயின்மேன் ஆகிய மூவரும், மருத்துவயியலுக்கான இந்நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டனர்.

கோமளி சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக வழக்குப் பதிவு; விரைவில் கைது?


ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக டெல்லி போலீஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில்ஓட்டுரிமையை பறிக்கவேண்டும் அவர்களுக்கு எந்தஒரு சலுகையும் கொடுக்ககூடாது என்று சங்பரிவரங்களின் விஷமப்பிரச்சாரத்தை கையிலெடுத்து சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை ஒன்று தொடர்பாக,

துபாயில் கோலாகலமாக தொடங்கிய 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு


துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியானது தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழர்கள் வணிகத்தில் ஒன்றுபட வேண்டும்-டத்தோ சாமிவேலு
02.10.2011 ஞாயிற்றுக்கிழமை காலை துவக்க விழா நடைபெற்றது. மலேசிய அரசின் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை

700 கோடியாகிறது உலக மக்கள் தொகை : ஐ.நா


இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்' என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை

நவம்பர் 1-லிருந்து ஆந்திராவில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி!

ஹைதராபாத், அக். 4-  ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டம் நவம்பர் முதல் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி இதற்கான கோப்பில் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி கையெழுத்திட்டார். இது குறித்து ஆந்திர மாநில அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமுல்படுத்த முடிவெடுத்துள்ளது.

புற்று நோய்க்கு புதிய மருந்து; 3 பேருக்கு நோபல் பரிசு!


புற்று நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட மூன்று மருத்துவ விஞ்ஞானிகளுக்கு 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புரூஸ் பெட்லர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூலேஸ் ஹாஃப்மேன் மற்றும் கனடாவை சேர்ந்த ரேல்ப் ஸ்டெய்ன் மேன் ஆகிய

அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி: கிலானி பெருமிதம்

இஸ்லாமாபாத், அக். 4-  அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றும், அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்து இருப்பதாகவும், அதில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில்