தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.2.11

ஈராக்:எழுச்சிப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் மரணம் ( வீடியோ )

பாக்தாத்,பிப்.26:அமெரிக்க (வீடியோ) கைப்பாவையான பிரதமர் நூரி அல் மாலிக்கின் தலைமையிலான அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக 'வெகுண்டெழும் தினம்'(day of rage) கடைப்பிடிப்பதையொட்டி ஈராக்கின் நகர வீதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் நூரி அல் மாலிக்கியின் ராணுவத்தினர் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் 7 பேர்

10 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார் - சர்ச்சையில் சிக்கும் யோகா சாமியார் ராம்தேவ்

புதுடெல்லி,பிப்.26:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக்கின்றார்கள் பல சாமியார்கள்.

'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - லிபியா ராணுவத்தினருக்கு யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள்

தோஹா,:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி

லிபியா கலவரத்திற்கு ஒசாமா பின்லேடன் தான் காரணம்: கடாபி


திரிபோலி எங்கள் நாட்டு மக்களை திசை திருப்பி அவர்களை குழப்பி கலவரத்தினை உண்டாக்கியதே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தான். இச்சதிச்செயலை அவர் திறமையாக கையாண்டுள்ளார் என லிபியா அதிபர் மும்மர் கடாபி தெரிவித்துள்ளார்.
லிபியாவில் 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவிவிலகக் கோரி கடந்த ஒருவாரமாக மக்கள் போராட்டம் நடத்தி

நிலைத்தடுமாறும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.25:ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக லிபியாவில் மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் அந்நாட்டின் அதிபர் முஅம்மர் கத்தாஃபி.

தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கொலை வெறித்தனமாக பேட்டிக்கொடுத்த அவர், தற்போது மக்கள் எழுச்சியை திசை திருப்பும் முகமாக லிபியாவில் போராட்டத்தை வழி நடத்துவது அல்காயிதா என புழுகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: "தெளிவாக தெரிகிறது லிபியாவின் தற்போதையை பிரச்சனையை வழி நடத்துவது அல்காயிதாதான் என. 20 வயதுக்கு மேற்பட்டோர் எவருமே இந்த போராட்டங்களில் கலந்துக் கொள்ளவில்லை. இளைஞர்களை அல்காயிதாவன்முறைக்காக தூண்டுகிறது." என கூறுகிறார் கத்தாஃபி

கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பரிமாற்றத்துக்கு பல்வா உதவியுள்ளார்: சி.பி.ஐ.


புதுடெல்லி, பிப். 25- கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரூ.200 கோடிக்கு அதிகமான பணம் பரிமாறியதற்கு ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பல்வா உதவியுள்ளார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி இப்போது நீதிமன்றக் காவலில் பல்வா உள்ளார். அவரது ஜாமீன் மனுவும், இவ்வழக்கில்

முஸ்லிம்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் - சர்கோஸி

பாரிஸ்,பிப்.25:பிரான்சில் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவர்கள் பிரஞ்சு கலாச்சாரத்துடன் கலந்துவிட வேண்டும் என அந்நாட்டு அதிபர் சர்கோஸி தெரிவித்துள்ளார்.

பன்முக கலாச்சாரத்தை கண்டித்த அவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலாச்சாரங்கள் மூலமாக முன்னேறுவது என்பது தோல்வியை ஏற்படுத்தும் என விளக்கம் கொடுத்தார்.

பிரான்சு நாட்டைச்சார்ந்த ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரான்சில் வாழும் மக்களின் அடையாளத்தைக் குறித்து நாங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளோம். ஒரே சமுதாயமாக மாறுவதை