தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.4.11

'ஒபாமாவின் பிறப்பிடம் எது?' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை வெளியிட்டது வெள்ளை மாளிகை


பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிறப்பிடம் தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் முகமாக, ஒபாமாவின் உண்மையான பிறப்பு சான்றிதழை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
ஒபாமா ஹவாய் தீவுகளில் தான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இப்பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஒபாமா ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான சட்ட அந்தஸ்த்து குறித்த சர்ச்சைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!

April 29,பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது: பிரதமர் கிலானி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தீவிரவாத ஆதரவு அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ஐ.எஸ்.ஐ. பற்றி பொய் பிரசாரம் நடக்கிறது என்று குறிப்பிட்டார்.

அவர் இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது இதை குறிப்பிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பேஸ்புக் நிறுவனருக்கு எகிப்தில் அழைப்பு


கெய்ரோ,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், எகிப்து வரவேண்டும் என, "ஜனவரி 25 புரட்சி' அமைப்பின் சார்பில், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த, அடக்குமுறை ஆட்சிக்கு, சமீபத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு, மக்களின் எதிர்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து போராட்டக் குழுக்களையும் ஒருங்கிணைப்பதில், "பேஸ்புக்' இணையதளம் முக்கிய பங்கு வகித்தது.

கனடாவில் தொடங்கியது கையெழுத்துப் போராட்டம்


ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக் குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் உள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் போர்க்குற்றங்களை

29.4.11

வாக்கு எண்ணும் மையத்தில் புதிய தடை: தேர்தல் ஆணையம்


வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்­ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில்

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்


Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

குவாண்டனாமோ:சிறைகைதிகளை சித்திரவதை-ஒத்துழைத்த அமெரிக்காவும்,பிரிட்டனும்


kyantonoma
லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறை கைதிகளை சித்திரவதை செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும்,பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தை குறித்து பிரிட்டீஷ்

சர்ச்சைக்கு பின்னர் ஒபாமா பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பு


வாஷிங்டன், ஏப். 28- நீண்ட கால சர்ச்சைக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த தகவலை அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார் ஒபாமா. அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார்.

சாய்பாபா மரணம் - சந்தேகங்கள் சர்ச்சைகள் தொடங்கின



சத்ய சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது உடலும் தேசிய மரியாதைகளுடன் நேற்று சமாதி வைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அவரது மறைவு குறித்து சர்ச்சைகள் பல தோன்றத் தொடங்கியுள்ளன.
கடந்த 24-ந்தேதி காலை  அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மறைவு குறித்தம் சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரது மறைவு குறித்து புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக்காதல் கொலை!! பிரபல சாமியார் தலைமறைவு!!

April 29, நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.

சம்ப

வ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.

கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும்

வறுமையை ஒழிக்க நல்ல உலகத்தை படைக்க வேண்டும்: அப்துல் கலாம்


சிகாகோ, - வறுமையை ஒழிக்க வேண்டுமானால் நல்ல உலகத்தை படைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கலாமுக்கு பொதுவரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் உரையாற்றிய அப்துல் கலாம் பேசியதாவது:
நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம்.

28.4.11

முஸ்லிம்கள் வீதிகளில் தொழுகை நடத்த அனுமதி பெற வேண்டும் – பிரான்ஸ்


france prayer
பாரிஸ்:பிரான்சில் உள்ள முஸ்லிம்கள் தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ தொழுகை நடத்த வேண்டும் எனில் பிரான்சி அரசாங்கத்திடம் முன்பே அனுமதி வாங்க வேண்டும் என்று ஜியன்ட் தெரிவித்துள்ளார்.
இவரது இந்தக் கருத்தையொட்டி, ஒருபுறம் முஸ்லிம் மக்கள் பொது இடங்களில் தொழுவதற்கு அனுமதியும் உண்டு என்றும் வாதிடுகின்றனர்.

குஜராத் இனப்படுகொலை:பிரதீப் சர்மா, சஞ்ஜீவ் பட் குற்றச்சாட்டுக்கு ஆதரவு

கட்ஸ்:குஜராத் கலவரத்தின் போது கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்தில் இருந்து தொலை பேசி வந்ததாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
சிறப்பு புலனாய்வு குழுவிடம் இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வலியுறுத்துகிறார் நிதின் கட்காரி

அயோத்தி:பாரதிய ஜனதாதள கட்சியில் தலைமைத்துவம் ஏற்று முதல் முறையாக அயோத்தியை காண சென்ற கட்காரி ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இதில் எந்த வித அரசியல் இடையூறோ அல்லது தேர்தல் இடையூறோ இல்லை என்றும், கோவிலை திரும்பக் கட்டுவதால் பல கோடி மக்களின் நம்பிக்கை திரும்ப கிடைக்கும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு நீதித்துறையும் அனுமதி அளித்துள்ளது.
அவருடன் சென்ற மற்ற சில தலைவர்கள், அயோத்தியில் உள்ள அந்த இடமானது சற்று விவகாரமானது என்றும், ராமர் கோவிலை கட்ட முடிவு எடுத்தால், பஞ்சகோசி பரிக்ரமா பகுதியின் வெளிப்புறத்தில்

கனிமொழிக்கு திமுக ஆதரவு உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்திக்க திமுக முடிவுசெய்துள்ளது.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பெயர்,

கலைஞர் டிவியை இயக்குவது கனிமொழி தான்: சிபிஐ

புதுடெல்லி முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக

கறுப்புப்பணம்:இந்தியர்களின் பெயர்களை வெளியிடுவேன் – ஜூலியன் அஸாஞ்ச்


black money

புதுடெல்லி:சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடு செய்துள்ள நபர்கள் குறித்த ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் இது தொடர்பான ஆவணங்களை உடனடியாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட, வெளியிடப்போகும்

27.4.11

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்டரம் 2ஜி வழக்கு குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் - முக்கிய முடிவெடுக்க இன்று கூடுகிறது திமுக ?


ஸ்பெட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகார வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில்,
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி,

2011 இன் Great Escape! : கந்தஹார் சிறையிலிருந்து தலிபான்கள் தப்பியது இப்படித்தான் (படங்கள்)


தெற்கு ஆப்கானிஸ்த்தானில் உள்ள கந்தஹார் சிறையிலிருந்து 476 தலிபான் கைதிகள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றனர். ( படங்கள் )
எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி ஐந்து மணித்தியாலங்களாக இந்த தப்பிச்செல்லல் நடவடிக்கை நடந்தது. எனினும் காவலிலிருந்த ஆப்கான் படையினருக்கு அவர்கள் தப்பிச்சென்று மூன்று மணித்தியாலங்கள் வரை என்ன நடந்தது என்றே தெரியாது.
2008ம் ஆண்டு, தற்கொலை குண்டு தாக்குதல் மூலம், நூற்றுக்கணக்கான தலிபான்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு தலிபான்களுக்கு மீண்டும் பாரிய வெற்றியை தேடித்தந்த சம்பவமாக இது மாறியுள்து.

மகரஜோதி இயற்கையானது - மகரதீபம் ஏற்றப்படுவது - நீதி மன்றத்தில் சபரிமலை தேவஸ்தான நிர்வாகம்


சபரிமலையில் வருடம் தோறும் மகர சங்கிராந்தி தினத்தன்று  வானில் தெரியும் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர தீபம் மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம்  தெரிவித்திருக்ககிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புல்மேடு பகுதியில் நின்று மகர ஜோதியை தரிசித்த  பக்தர்கள் திரும்பியபோது ஏற்பட்ட   நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பில்  கேரள  உயர் நீதிமன்னறத்தில்  பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இவ்வாறு தொடரப்பட்ட ஒரு

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது


sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் அனைத்து போர்விதிமுறைகளையும் இலங்கை

எஸ்.எம்.எஸ் மூலம் சமையல் கேஸ் பதிவு


சென்னை, எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கேஸ் பதிவு செய்வதற்கு 10 இலக்க தொலைபேசி எண்ணை இண்டேன், எச்.பி. கேஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் கேசுக்கு பதிவு செயலாம்.
8124024365 என்ற பத்து இலக்க எண்ணில் இன்டராக்டிவ் வாய்ஸ் சிஸ்டம் மூலம் இதில் 24 மணி நேரமும் கேசுக்கு பதிவு செய்யலாம். மேலும் இந்த 10 இலக்க

26.4.11

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது


aimlb
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர்.  அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக


121216298
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
ஹஸாரேவை புதிய காந்தியாகவும்

சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு (அன்னா ஹசாரே)வரை எல்லாமே போலி!!

 அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். சங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன்,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது


துபாய், ஏப். 25- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.
துபாய் நகரை தலைநகரமாக கொண்ட யாஷ்சாட் என்கிற செயற்கைக் கோள் தொடர்பு நிறுவனம் தான் ஒய்1 ஏ என்கிற இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. பிரஞ்சு கயானா நாட்டில் உள்ள கோரூ என்கிற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின்

கடாபியின் அரச மாளிகை மீது நேட்டோ படைகள் கடும் குண்டுவீச்சு தாக்குதல்கள் : 45 பேர் படுகாயம்


லிபிய அதிபர் மௌம்மர் கடாபியின் பாப் அல் அசிசியாஹ் கோட்டையை குறிவைத்து இன்று திங்கட்கிழமை
 அதிகாலை நேட்டோ படைகள் கடும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டன.

சில மணி நேரங்கள் நீடித்த இத்தாக்குதல்களில் பப் அல் அசிசியாஹ் கட்டிடம் கடும்

சாய்பாபா மரணம் குறித்து தஸ்லிமா நஸ்ரின் விமர்சனம்


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தஸ்லிமாவின் எழுத்துக்களை விட அவரது சர்ச்சைப் பேச்சுக்களும், கருத்துக்களும்தான் பிரபலமாக உள்ளது. அவரது லஜ்ஜா என்ற நூல் வங்கதேச மதவாதிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியதால் அவருக்கு மதவாதிகள் பாத்வா விதித்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவான தஸ்லிமா பல நாடுகளில் தஞ்சமடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆப்கானின் கந்தகார் சிறையிலிருந்து 540 தலிபான்கள் தப்பினர்! : அமெரிக்க படைகளுக்கு ஏமாற்றம்

ஆப்கானிஸ்த்தானின் கந்தகார் சிறையிலிருந்து, தலிபான்களின் முக்கியத தளபதிகள் உட்பட சுமார் 540 க்கு மேற்பட்ட கைதிகள் எவ்வித உயிரிழப்புக்களுமின்றி தப்பியுள்ளதாக ஆப்கானிய அரசு தகவல்களும், தலிபான்களின் ஊடகத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.இரவோடு இரவாக சுமார் 320 நீளமான குகை ஒன்றினூடாக  இவர்கள் தப்பியுள்ளதுடன், இது நன்கு யோசனை செய்து செயற்படுத்திய திட்டமெனவும் தெரியவந்துள்ளது.

தலிபான் போராளிகளால் சிறைக்கு வெளியிலிருந்து

25.4.11

டெல்லியில் வக்ஃப் கட்டிடங்களின் வாடகை ஒரு ரூபாய் முதல் 11 வரை


812577998
புதுடெல்லி:கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய் முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் நிஜாமுத்தீன், கரோல்பாக், பஹார்கஞ்ச், சப்ஜிமண்டி, பல்லிமாரன், மாத்தியமஹல், பழைய டெல்லியின் வீதிகள்

ஸ்கைப் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை


இணையத்தில் அரட்டையில் தெளிவான வாய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும்
மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.

அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை. 

உளவுத்துறையா? களவுத்துறையா?

APRIL 24, புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

மேலும் புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை பதிவுச்

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு:மறு விசாரணைக்கு உத்தரவு


evidence
திருவனந்தபுரம்:பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2009 மே 17-ஆம் தேதி

ஆளில்லாவிமானத்தாக்குல்:எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தர்ணா போராட்டம்


imran khan
இஸ்லாமாபாத்:வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் அடாவடித் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பெஷாவரில் தெஹ்ரீக்-இ-இன்ஷாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான்கான் இரண்டு தின தர்ணா போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆதரவாளர்களுடன் இம்ரான்கான்

காவிமயம்:குஜராத்தின் வழியை பின்பற்றும் மத்திய பிரதேசம்


shivraj-singh-chauhan-13703
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.
2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சிறுபான்மையினரின்

24.4.11

துபாயில் வெகுசிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” நிகழ்ச்சி


Audience
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர்.
முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள்

எகிப்திற்கு வாக்குப்பதிவு எந்திரம் வழங்கத்தயார்:குரைஷி


eletion machine
கெய்ரோ:எகிப்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குபதிவிற்கான எந்திரங்களை வழங்கத் தயார் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.ஒய்.குரைஷி தெரிவித்துள்ளார். எகிப்து சட்ட அமைச்சர், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆகியோருடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார் குரைஷி.
தேர்தலுக்கு அதிகம் நாட்கள் இல்லை என்பதால் தங்களுடைய

ஏமனில் பிரம்மாண்ட பேரணி; அதிபர் சலே பதவி விலகுவாரா?


சனா,ஏமன் அதிபர் பதவி விலகுவது குறித்து வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முன் வைத்த பரிந்துரைகளை, எதிர்ப்பாளர்கள் நிராகரித்து விட்டனர்.
இந்நிலையில், நேற்று ஏமனில் அதிபர் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி பேரணி நடத்தினர். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்து, நேற்று முன்தினம் வளைகுடா கூட்டுறவு

2011-ஆம் ஆண்டிற்கு பிறகும் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் தொடர்வதாக அறிக்கை



வாஷிங்டன்:2011- ஆம் ஆண்டுடன் ஈராக்கிலிருந்து ராணுவத்தை முற்றிலும் வாபஸ் பெறப் போவதாக அளித்துள்ள வாக்குறுதியை அமெரிக்க நிறைவேற்றவில்லை என அறிக்கையொன்று கூறுகிறது.
ஈராக்கில் ஈரானின் ஆதிக்கத்தை தடுப்பது என்ற போலியான காரணத்தை காட்டி ஈராக்கில் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதற்கு அமெரிக்க தயாராகுவதாக அமெரிக்க, ஈராக் அதிகாரிகளை

ஷியா தலைவர் கொலை வழக்கில் தாரிக் அஸீஸிற்கு விடுதலை


tarik ajis
பாக்தாத்:ஷியா தலைவர் தாலிப் அல் ஸுஹைலை கொலைஸ் செய்த வழக்கில் சதாம் ஹுஸைனின் ஆட்சிக் காலத்தில் துணை பிரதமராக பதவி வகித்த தாரிக் அஸீஸை நீதிமன்றம் விடுவித்துள்ளது. ஆறுபேரை தண்டித்த நீதிமன்றம் மூன்றுபேரை தூக்கிலிட உத்தரவிட்டது.
1994-ஆம் ஆண்டு ஈராக் உளவாளிகள் ஸுஹைலை லெபனான் தலைநகரான பெய்ரூத்தில் வைத்து கொலை செய்ததா

லிபியாவில் ஆளில்லா ஆயுத விமானங்கள்: ஒபாமா ஒப்புதல்!


வாஷிங்டன், ஏப். 23- லிபியாவில் அதிக சத்தம் எழுப்பாத அமெரிக்க ஆயுத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் கூறினார்.
லிபியாவில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் கடாபி ராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை

தாலிபான் தாக்குதல்:14 பாக். ராணுவத்தினர் பலி


taliban
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் கைபர் பக்தூல்க்வா மாகாணத்தில் தாலிபான் போராளிகளுடன் நடந்த மோதலில் 14 ராணுவத்தினர் பலியாகினர்.ஆப்கான் எல்லையையொட்டிய லோவர் தில் மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு மையத்திற்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூட்டமாக வந்த தாலிபான் போராளிகள் பாதுகாப்பு மையத்திற்கு அருகிலிருந்த

23.4.11

எகிப்து, லிபியா வரிசையில் தற்போது சிரியா : நேற்றைய ஆர்ப்பாட்டங்களில் 43 பேர் படுகொலை

சிரியாவின் ஹோம்ஸ், இஷ்ரா, ஹரஸ்டா மற்றும் டமாகஸ் நகரங்களில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட வெள்ளிக்கிழமை தொழுகையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களின் போது சிரியா அரசு படைகளின் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 43 ஆர்ப்பாட்டகாரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.