தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.2.11

சீனாவில் மல்லிகை புரட்சி என்றபெயரில் மக்கள் புரட்சி!!!

பீஜிங்,பிப்.21:துனீசியாவிலும், எகிப்திலும் நிகழ்ந்ததுபோல ஆட்சிமாற்றங்கோரி சீனாவில் ’மல்லிகைப் புரட்சி’ என்ற பெயரிலே மக்கள் நடத்துவதற்கான முயற்சிக்கு எதிராக நாடு முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இணையதளம் மூலமாக 'மல்லிகைப் புரட்சிக்கு' அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பீஜிங்கிலும், சீனாவின் இதர 11 நகரங்களிலும் போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நகரங்களில் கூடுதல்

எகிப்து, துனிஷியா போன்று லிபியா இல்லை - கடாபியின் மகன் அறிவிப்பு


லிபியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளை அடுத்து அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய
முஅம்மர் கடாபியின் மகன் சிலர் உள்நாட்டு யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் எனினும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் எச்சரித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது

எகிப்து , துனிஷியா போன்று எமது நாடு இல்லை என்று தெரிவித்த அவர், தனது தந்தை

லிபியாவில் சர்வாதிகாரத்தின் கோரத்தாண்டவம் - மரணம் 200 தாண்டியது

திரிபோலி,பிப்.21:ஆட்சிமாற்றம் கோரி மக்கள் எழுச்சிப் போராட்டம் நடந்துவரும் லிபியாவில் நேற்றும் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகளிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்தன.

பெங்காசி நகரத்தில் நேற்று முன்தினம் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஒன்றுக்கூடிய மக்களின் மீது பாதுகாப்புப்படை அரக்கத்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலே சுட்டுத்தள்ளினர். இதனால் லிபியாவில் எழுச்சிப் போராட்டத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.
காயமடைந்தவர்களையும், இறந்தவர்களின் உடல்களையும் அனுமதிக்கப்பட்டுள்ள

குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம்

குவைத்சிட்டி,பிப்.20:குவைத்தில் குடியுரிமை கோரி போராட்டம் நடத்தியவர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக்கொண்டதில் 30 பேருக்கு காயமேற்பட்டது. 50 பேரை ராணுவம் கைது செய்தது.

குவைத்தில் வடமேற்கு நகரமான ஜஹ்ராவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை குவைத்தின் செலிபியா கிராமத்திலும், இதைப் போன்றதொரு போராட்டம் நடைபெற்றுள்ளது.

தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம் ரகசிய பேச்சு


நியூயார்க்:"ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் ஒபாமா நிர்வாகம், ரகசிய பேச்சுவார்த்தையைத் துவக்கி விட்டது. அரசியல் தீர்வு ஒன்றே ஆப்கன் பிரச்னையைத் தீர்க்கும் என்று ஹிலாரி கூறியுள்ளார்' என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "நியூயார்க்கர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் குடியேற்றம்:ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா 'வீட்டோ' மூலம் முறியடித்தது

ஐ.நா,பிப்.20:ஃபலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக கட்டிவரும் குடியேற்றங்களை கண்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனது 'வீட்டோ' அதிகாரத்தின் மூலம் முறியடித்துள்ளது.

ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்(P.L.O) தயாராக்கிய தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் இதர 14 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

முஸ்லிம்களுடன் நல்ல உறவை நிலைநாட்டுவேன் என சவடால் விடும் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு 'வீட்டோ'

ஹிந்துத்துவா பயங்கரவாதம் - குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி

கொல்லம்,பிப்.20:வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கேரள புரம் என்ற இடத்தில் பட்டாணி முக்கு என்ற பகுதியில் உள்ள சிந்து என்பவரின் வீட்டின் மேல் மாடியில் குண்டுவைக்க முயற்சி செய்த பொழுதுதான் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குண்டுவெடித்ததில் அந்த வீடும், அண்டை வீடும் சேதமடைந்தன. வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டு மதப் பிரச்சார தொடர் நிகழ்ச்சி தொடர்பான நோட்டீஸால் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது.

இப்பிரதேசத்தில் மத வன்முறையை உருவாக்குவதற்கான திட்டம் இது என அவ்வூர் மக்கள்

மலைக்க வைக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு


"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'


- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.


"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.

நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மற்றுமொறு உலக அதிசயம்


ஆக்லாந்து, பிப். 15 நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மற்றுமொறு உலக அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மற்றுமொறு உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள