தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.11

13-ந் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு


சென்னை,  தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் இடங்களில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் விழிப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.
வருகிற 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழக தேர்தல் 49(ஓ) படிவம் சாதித்தது என்ன?


தமிழகமக்கள் தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரம் இது.
நடந்து முடிந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவாகியிருப்பது மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிகிறார்கள்.

ஒசாமா தொடர்பான விசாரணையை போலீசாரிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஏற்றது


இஸ்லாமாபாத் அருகே, கொல்லப்பட்டஒசாமா பின்லாடன் வசித்து வந்தது தொடர்பான விசாரணையை போலீசாரிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஏற்றது. ஒசாமா வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் உட்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இஸ்லாமாபாத் அருகே ராணுவ கோட்டையாக விளங்கும் அபோதாபாத்தில்,  ஒசாமா பின்லாடனை அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

ஒசாமாவுக்காக கொல்கத்தாவில் சிறப்பு தொழுகை : பெருந்திரளானோர் பங்கேற்பு (படங்கள்)


அல்-கய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் ஆத்மா அமைதி அடைவதற்காக கொல்கத்தாவில் உள்ள திப்புய் சுல்தான் மசூதியில் இன்று சிறப்பு தொழுகை இடம்பெற்றது. பின்லேடன் கொல்லப்பட்ட பின் நடைபெறும் முதலாவது வெள்ளிக்கிழமை தொழுகை என்ற வகையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.