தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.11

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்


Always-this-scene-Pakistan-Cricket-Team-Prayer-in-Mohali-Stadium
மும்பை: ‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல்  மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பால்தாக்கரேக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே எகிறும்.நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான்

சிரியா மக்கள் புரட்சியின் முதல் வெற்றி : அமைச்சரவையை கலைத்தது அரசு


சிரியாவில், அரசுக்கு எதிராக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரத்தால்,
அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது.இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அல் அசாட் உறுதிப்படுத்தியுள்ளார்.

அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டதை

நிரபராதிகளான முஸ்லிம்களின் புனர் வாழ்வுக்கு உதவுவோம்: தேசிய சிறுபான்மை கமிஷன்


header
அலிகர்:தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர் வாழ்வுக்காக உதவுவோம் என தேசிய சிறுபான்மை கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் குற்றமற்றவர்கள் என பரிபூரணமாக சட்டரீதியாக உறுதிச் செய்யப்பட்டால் புனர்வாழ்விற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என கமிஷனின் தலைவர் வஜாஹத்  ஹபீபில்லாஹ் தெரிவித்துள்ளார்.

யாரு ஹீரோ? யாரு காமடியன்? வடிவேலு-விஜயகாந்த்! அடியல் வீடியோ


நேற்று தொலைக்காட்சியில் இரண்டு பொதுக்கூட்ட பிரச்சார செய்தியைப் பார்க்க நேரிட்டது. (வீடியோ)
ஒரு கூட்டத்தில் வடிவேலு பேசிக்கொண்டிருந்தார். கலைஞரின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையையும் மக்களிடம் விளக்கிக் கொண்டே வந்த அவர், "கலைஞர் அய்யா ஊனமுற்றவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவிச்சிருக்காரு" எனப் பேசிவிட்டு, பின் அடுத்த நொடி, "அப்படி சொல்லக் கூடாது. தப்பு. மாற்றுதிறனாளிகள்னு சொல்லனும், என்னை மன்னிச்சுருங்க." என மன்னிப்புக் கேட்டுவிட்டு, "கலைஞர் மாற்றுதிறனாளிகளுக்கு நிறைய சலுகைகள் அறிவிச்சிருக்காரு"னு சொல்லிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

சீனாவின் மேலாதிக்கம்! இலங்கையை உடைக்க இந்தியா திட்டம்!!

மார்ச் 30, தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் தீவிரமான முன்நகர்வாக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிடுவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது.

தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுக்காக சீனாவை நோக்கி இலங்கையின் பார்வை திரும்புகின்ற நிலையில் அதற்கு பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திட்டமிடுவதாக

ஹோஸ்னி முபாரக் வீட்டுக் காவலில் சிறை - இராணுவ சுப்ரீம் கவுன்சில் தகவல் வெளியீடு


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், சவுதி அரேபியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக வெளிவந்துள்ள தகவல்களை மறுத்துள்ள இராணுவ தரப்பு,
அவர் இன்னமும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியிட்டுள்ளது. எகிப்தின் சுப்ரீம் கவுன்சிலின் இராணுவ படையினர் நேற்று திங்கட்கிழமை இத்தகவலை வெளியிட்டுள்ளனர். 18 நாட்கள் எகிப்தில்

அச்சுதானந்தனை எதிர்த்து பா.ஜ.க. போட்டியில்லை -பா.ஜ.க.வுடன் கம்யூனிஸ்ட் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு


ஆழப்புழா:முதல்வர் அச்சுதானந்தனை எதிர்த்து பி.ஜே.பி. போட்டியிடாதது, கேரளாவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மலப்புழா தொகுதியில்,பா.ஜ.கவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தும் அங்கு பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தாதது கம்யூனிஸ்ட் பா.ஜ.கவின் கள்ளத்தொடர்பை உறுத்திபடுத்தியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பெஷாவரில் போலீஸ் செக்போஸ்டிற்கு அருகே குண்டுவெடிப்பு: ஏழு பேர் மரணம்


3-30-2011_13090_l_u
பெஷாவர்:வடமேற்கு பாகிஸ்தானில் போலீஸ் செக்போஸ்டிற்கு அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் போலீஸ்காரர் உள்பட ஏழுபேர் கொல்லப்பட்டனர்.
40க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. மோட்டார் பைக்கில் வந்த நபர் ஸ்வாபி நகருக்கு அருகிலுள்ள அம்பர் செக்போஸ்டிற்கு அருகில் வந்தபொழுது உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்தார்.

30.3.11

உங்கள் பேஸ் புக்கில் வீடியோசாட் செய்ய வேண்டுமா?


facebook_002
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும்.
இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம்.

விசாரணையில் இருந்து தப்ப சாமியார் நடிப்பு!!

மார்ச் 30, மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 6 பயங்கரவாத வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாமியார் பிரக்யாசிங் உடல்நிலை கோளாறு, மயக்கம் வருகிறது எனக் கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான் என மருத்துவ அறிக்கை கூறுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தும்போது மட்டுமே உடல் நிலை சரியில்லை என பயங்கரவாதி பிரக்யாசிங் புகார் கூறுகிறார். க்ராண்ட் மருத்துவக்

சென்னையில் 7 வருட பாரம்பரியமுள்ள மஸ்ஜிதைத் தகர்க்க தேசவிரோத குண்டர்கள் முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!


சென்னை:சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
7 வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த உமர் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள தனது கட்டடத்தின் முதல்

கடாபியை பதவி விலக்க இராணுவ நடவடிக்கை நல்ல தெரிவாகாது! : ஒபாமா


கடாபியை பதவியிலிருந்து விலக்க, உலக நாடுகளே ஒன்றிணைய வேண்டும். எமது தன்னிச்சையான தாக்குதல்களின் மூலம் அவரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்க முடியுமெனில் அது ஒரு தவறாகிவிடும் என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
லிபிய தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு மட்டுமே பங்கிருப்பதாக கருதுவதை நிரகாரித்து,  வாஷிங்கடனின் தேசிய பாதுகாப்பு

‘ஹிந்துத்துவம் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை’: ஆர்.எஸ்.எஸ். சூளுரை


புதுடெல்லி: ஹிந்துத்வா கொள்கை  சந்தர்பவாதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று  பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து,ஹிந்துத்துவம் என்பது எங்கள் அமைப்பின் அடிப்படைவாதம் என்றும்,அதில் எந்த மாற்றுக் கருத்தும் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் சூளுரைத்துள்ளார்.

ஜாதி ரத்தம் குடிக்கும் ஓநாய் ராமதாஸ்-விஜயகாந்த் கடும் தாக்கு


இரு ஜாதிகளை மோத விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய்தான் டாக்டர் ராமதாஸ் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். தமிழக தேர்தல் பிரசாரக் களத்தில் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. பாமக அடிக்கடி கூட்டணி மாறுவதை விமர்சித்து விஜயகாந்த் பேசி வருவதால் கடுப்பாகியுள்ளனர் அக்கட்சியினர். இதையடுத்து விஜயகாந்த்துக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸும், காடுவெட்டி குருவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் தர்மபுரியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்

விஜயகாந்துக்கு எதிராக திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் .


காமெடியில் முன்னணி நடிகராக இருக்கும் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தும், திமுக ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு காமெடி நடிகர்/பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவருகிறார்.
பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவை பேச்சால் மக்களை கவர்ந்த திண்டுக்கல்

29.3.11

மொகாலியில் மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது


மும்பை தாக்குதலுக்குப் பிறகு நிலவும் கடுமையான பிணக்குகளையும், போர் சூழலையும் முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக நாளை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவில் நிலவும் இறுக்கமான சூழலை பாக்.பிரதமரின் வருகை தணியச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியர்களின் மரணத் தண்டனையை ரத்துச் செய்தது ஷார்ஜா நீதிமன்றம்


ஷார்ஜா:எட்டு இந்தியர்களுக்கான மரணத் தண்டனையை யு.ஏ.இயின் ஷார்ஜா மாநில நீதிமன்றம் ரத்துச் செய்தது. இவர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவரின் குடும்பத்திற்கு துபாயில் இந்திய ஹோட்டல் அதிபர் ஒருவர் ஈட்டுத்தொகை அளித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
எஸ்.பி.சிங் ஓபராய் என்பவர் கொலை வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள்

குவைத் இடையீட்டை ஏற்றுக்கொள்வோம்: பஹ்ரைனின் முக்கிய எதிர்கட்சி அறிவிப்பு


மனாமா:பஹ்ரைனில் எதிர்கட்சியான ஷியா பிரிவினருக்கும், அரசுக்குமிடையே பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்படலாம் என குவைத் நாட்டின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக முக்கிய எதிர்கட்சியான விஃபாக் அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர தங்களுடைய கட்சி இதனை ஏற்றுக்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஜாஸிம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் அரசு மற்றும் எதிர்கட்சியின் பேச்சுவார்த்தைகளில்

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி


4093534
தோஹா:கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால்,

அருண் ஜெட்லியிடம் விசாரணை வேண்டும்!! பஸ்வான்!!

மார்ச் 28, புதுடெல்லி: ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும்

லிபியா மீதான அமெரிக்க ஆக்ரமிப்பு : ஒரு மாற்றுப் பார்வை


லிபிய விவகாரம் இன்று, தினந்தோறும் மேற்குலக செய்தி நாளிதழ்களின் முதற்பக்க செய்திகளில் இடம்பிடித்திருக்க வேண்டியளவு வளர்ந்திருக்கிறது(வளர்க்கப்பட்டிருக்கிறது?).
தம்மை பக்கசார்பற்ற செய்தி ஊடகங்கள் எனக்கூறிக்கொள்ளும், சி.என்.என், பி.பி.சி (மேற்குலக செய்தி தளங்கள்) போன்ற தளங்கள் கூட சிலவேளைகளில், கடாபியினதும், அவரது அரச படைகளினதும் விமான குண்டுவீச்சுக்களில் 40,50 என பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறும்

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க., கூட்டணி கிடையாது: வைகோ சுய புராணம்


தி.மு.க.,வையே ஜீவனாக, வாழ்வாக, உயிராக நினைத் திருந்தவன் நான். என் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டு, 1993ம் ஆண்டு தி.மு.க., விலிருந்து வெளியேற்றப் பட்டேன். இதனால், 1994ம் ஆண்டு ம.தி.மு.க., உதயமானது. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். வெறும், 316 ஓட்டு வித்தியாசத்தில் நான் தோல்வியடைந்தேன். 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.
அடுத்த ஆண்டு, நாங்கள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.,

இனவெறி பேச்சு: ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது கான்பெரா, மார்ச். 26-


கான்பெரா,  ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி அவதூறு கருத்துகளை கூறியதற்கு ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 1500 வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள திரின் கோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர், `பேஸ்புக்' இணைய தளத்தில் ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி இனவெறி அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆப்கானிஸ்தான் அரசிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி அப்துல்

28.3.11

மன்மோகன்சிங்கின் அழைப்பு: பாகிஸ்தான் பத்திரிகைகள் புகழாரம்


புதுடெல்லி:பாகிஸ்தான் அதிபரையும், பிரதமரையும் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் மன்மோகன்சிங் அழைத்த நடவடிக்கையை ‘சமாதானத்தின் சிக்ஸர்’ என பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
வருகிற 30-ஆம் தேதி மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நடைபெறவிருக்கிறது.இப்போட்டியை காண பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா

சபர்மதி எக்ஸ்பிரஸை கண்டது கூட இல்லை – கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்ட உமர்ஜி


கோத்ரா:”நான் ஒருபோதும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கண்டது கூட இல்லை” என கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் அநியாயமாக சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டுள்ள ஸஈத் உமர்ஜி தெரிவித்துள்ளார்.
“நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை வழக்கில் சிக்கவைத்தார்கள்” என மெளலான ஹுஸைன் இப்ராஹீம் உமர்ஜி என்ற ஸஈத் உமர்ஜி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள

இந்தியா-சவூதி ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது: ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்க முயலுவோம் – எஸ்.எம்.கிருஷ்ணா


ஜித்தா:சவூதி அரேபியாவுடன் இந்தியா ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்,cயா ஹஜ் துறை அமைச்சர் ஃபுவாத் அல்ஃபாரிஸியும் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவிலிருந்து ஹஜ் செல்வதற்காக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் ஹஜ் ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமென

குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத மணல் புயல் 25-03-2011




இன்று மாலை (25-02-2011) குவைட்,இராக்’கின் பஸ்ரா பகுதிகளில் வரலாறு காணாத  (வரலாறு வந்து சொல்லிச்சா?) மணல் காற்று வீசியது.மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்த மணல் காற்றில் இரவு 8.00 மணிவரை நீடித்தது. (டின்னர் லேட் ஆச்சுல்ல....)  பயங்கர காற்றும் அள்ளி வீசும் மணலும் (மணல் காற்றுல மணல்தான்யா வரும்)  எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது.

ஹிந்துத்​துவா -பா.ஜ.​கவுக்கு சந்தர்ப்பவா​தம் – விக்கிலீக்​ஸ் தகவல்


புதுடெல்லி:பா.ஜ.கவின் ஹிந்து தேசியம் என்பது வாக்கு வங்கிக்கான சந்தர்ப்பவாதம் மட்டுமே என மூத்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கம்பிவட(கேபிள்) செய்தி கூறுகிறது.
2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் ‘தி ஹிந்து’ பத்திரிகை வழியாக வெளியிட்டு வரும் செய்திகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தொடந்து பா.ஜ.கவிற்கு சிக்கலை

இஸ்லாமியர்களை ஏமாற்ற முடியாது!! கலைஞர்!!

மார்ச் 27, : அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர் களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது பற்றி, முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாரை ஏமாற்றினாலும் இஸ்லாமிய பெருமக்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது. தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

10 ஆண்டுகாலம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தாரே அப்போது ஏன் இடஒதுக்கீடு செய்யவில்லை. இஸ்லாமியர்களுக்கு திமுக

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான  ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

27.3.11

TNTJ :திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா

TNTJ வின் பொதுக்குழுவும் முதல்வர் சந்திப்பும் – தினத்தந்தி செய்தி


தினத்தந்தியில் இன்று (27-3-11) வெளியான செய்தி:
இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு
கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்


தேவ்பந்த்(உ.பி.):முஸ்லிம்கள் பரஸ்பரம் ஐக்கியமாக செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டுமென மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் ஸுதைஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய கல்விக் கலாச்சாலையான தேவ்பந்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுற்றஷீதில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார் மக்கா இமாம்.
அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம்கள் உலகிற்கு அளித்த

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்


சென்னை:இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ்

ஜப்பானில் அணுஉலை கதிர்வீச்சு அதிகரிப்பு


டோக்கியோ, ஜப்பானில் புகுசிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானில் கடல் நகரமான புகுசிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட 8 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிரிய ஆர்பாட்டங்களில் பெரும் முன்னேற்றம் !


சிரிய ஆர்பாட்டம் முன் எதிர்பார்க்காத அளவுக்கு வெள்ளம் போல பெருக்கெடுத்து வருவதாக சிரியாவில் இருந்து டேனிஸ் தூதுவர் கிறஸ்ரீனா லாசன் தெரிவிக்கிறார். பரபரப்பான வெள்ளிக்கிழமையானாலும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் நடந்து போக முடியும். ஆனால் இன்றோ வீதியால் போக முடியாதளவு ஜனத்திரள் குவிந்து போயுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். மக்களும், வாகனங்களுமாக தலைநகரே

லிபியா:அட்ஜாபியா நகருக்குள் மறுபடியும் போராளிகள்


சென்ற வாரம் கேணல் கடாபியின் ஆதரவுப் படைகள் கைப்பற்றி முக்கிய எரிகொருள் குதங்கள் உள்ள நகரமான அட்ஜாபியா சற்று முன்னர் போராளிகள் தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடாபியின் படைகள் வாகனங்களை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுவதாக போரளி ஒருவர் அங்கிருந்து தெரிவிக்கிறார். தற்போது பீ.பீ.சி நிருபரும் அல் ஜஸீரா நிருபரும் அங்கு நிற்கிறார்கள். இந்த நகரம் போராளிகளின் கைகளில் விழுந்துவிட்டதென அவர்கள் ஊர்ஜிதம் செய்கிறார்கள். கடாபி நிலைகொண்டுள்ள திரிப்போலி நோக்கிப் போவதற்கு

26.3.11

இன்று பூமிதினம் (‘எர்த் அவர்’)


உலகில் சுற்றுசூழல் மீதான அத்துமீறல் வரம்பு மீறிய சூழலில், இயற்கை பேரிடர்கள் தொடர் கதையாகும் வேளையில்  128 உலக நாடுகள் மரணித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இன்று ‘பூமி தினம்’(எர்த் அவர்) கடைப்பிடிக்கப்பிடிக்கின்றன.
இதையொட்டி இன்று இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வச்ச ஐஸ்லே ஜனி புரந்திடுச்சி கொஞ்சம் அடக்கிவாசி !! முடியல

சென்னை, மார்ச்.26-தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதை விவசாயி, மீனவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய 3 பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை அகற்றி

சிரியாவில் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி (வீடியோ)


நிகோசியா,  சிரியாவில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலியானார்கள். (வீடியோ )
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கர் நகரில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் "தரா" என்ற ஊரில், ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 100க்கும்

கடாபியின் எண்ணெய்ப் பணம் பறிமுதலாகிறது


நேற்று புறுக்சல்சில் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் எண்ணெய் விற்ற பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்தது. கடாபியுடன் தொடர்பு கொண்டு, எண்ணெய், காஸ் போன்றவற்றை யாரெல்லாம் வாங்கினார்கள் என்ற நெடிய பட்டியல் ஒன்றையும் அது வெளியிட்டுள்ளது. இதில் தனி நபர்கள், தனியார் நிறுவனங்கள் என்று பலருடைய பெயர்களையும் தந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடாபிக்கு வழங்க

ஜெ. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு!!


மார்ச் 25, திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தி.மு.க., அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை.

நேட்டோ சுழற்றியுள்ள நாணயத்தின் இரண்டு பக்கங்களும் வானில் பளபளக்கின்றன..


லிபியாவிற்குள் மேலை நாடுகளின் தரைப்படைகள் ஆங்காங்கு இறங்கிவிட்டனஎன்ற செய்தியை அறிந்து கொண்டு அப்பால் செல்வது நல்லது..
.
.
.
.
.
.
.
.
.
லிபியப் போர் ரஸ்யாவில் பிரதமர் – அதிபர் இருவருக்கும் இடையே மோதலை

பிரபாகரனைக் காப்பாற்ற அமெரிக்க முயற்சி செய்தது - இலங்கை அமைச்சர்


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பற்றுவதற்கு
அமெரிக்க முன்றது என இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய  கடற்படையை இலங்கைக்கு

ராமதாஸ் எப்பொழுது முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார்?


பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமதாசுக்கு இம்முறை தி.மு.க 31 இடங்களை ஒதுக்கியது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட சூழலில், ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட ராமதாஸ் அறிவிக்கவில்லை எனக்கூறி அவரது கட்சியைச் சார்ந்த முஸ்லிம்கள் சிலரும், காயிதேமில்லத் பேரவையைச் சார்ந்தவர்களும் ராமதாஸின் உருவப் பொம்மையை நெல்லையில் எரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

லிபியா சிக்கலை தீர்க்க லண்டனில் சர்வதேச மாநாடு


லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு தலைமை தாங்க முடியாத அவலத்தில் தடுமாறிய நேட்டோ ஒருவாறாக நேற்றிரவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. துருக்கியின் கடும் எதிர்ப்பு, வெளிநடப்பு போன்ற நெருக்கடிகளுக்கு பின்னர் நேற்றிரவு ஓர் உடன்பாட்டை எட்டித் தொட்டுள்ளது.
இதன்படி ஐ.நாவால் விதிக்கப்பட்ட லிபியாவிற்கு எதிரான விமானப்பறப்பு தடை வலயத்தை நேட்டோ விமானப்படைகள் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு


மதுரை, மார்ச். 23- மதுரை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு, தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிசன் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவாக தமிழ்நாட்டில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் கம்ப்யூட்டருடன் இணைந்த கண்காணிப்பு

25.3.11

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை


புதுடெல்லி:நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

லிபியா - மேற்குல நாடுகளின் யுத்தத்திற்கு எதிர்ப்பு - பான் கீ மூன் போர்க் குற்றவாளி - விமல் வீரவன்ச


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகம் முன்னபாக, லிபியா மீது  மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நிலமை கை மீறிவிட்டது போரை நிறுத்து சீனா ஆவேசம் !


லிபியாவில் இப்போது நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தி சமாதானப் பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என்று சீனா பலமாக அலறியுள்ளது. ஐ.நா தீர்மானம் லிபிய விமானங்கள் வானத்தில் பறப்பதை தடை செய்வதை மட்டுமே வலியுறுத்தியுள்ளது. ஆனால் மேலை நாடுகளின் படைகள் அதை பிழையாக கற்பிதம் பண்ணி தரை மீதும் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருக்கின்றன. இது தவறான செயல் உடனடியாக இரு தரப்பும் யுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டுமென அலறியுள்ளது. மேலும் சீன வெளிநாட்டு அமைச்சர் யான் யூ கூறும்போது இந்த விவகாரம் மற்றய இடங்களுக்கும் பரவப்போகிறது என்று தாம் அச்சமடைவதாகவும் கூறினார். நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவர தாம் அடுத்த பக்கத்தால் பேசி வருவதாகவும், லிபியா இறைமை உள்ள நாடு அதன்

லிபியாவின் எண்ணெய் வளத்துக்காகதான் அமெரிக்கா தாக்குதல்: ஈரான் மதத்தலைவர்


டெக்ரான், மார்ச். 23- தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா லிபியா விவகாரத்தில் தலையிட்டு உள்ளதற்கு காரணம் லிபியாவின் எண்ணெய் வளம் தான் என்று ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
புனித நகரான மஷாத்தில் இருந்து காமேனி ரேடியோவில் பேசினார். அப்போது

மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன்: கடாபி அறிவிப்பு


திரிபோலி, லிபியா அதிபர் கடாபி மக்கள் முன் தோன்றி பேசினார். அப்போது உயிர் தியாகம் செய்தாலும் செய்வேனே தவிர, மேற்கத்திய படைகளிடம் சரண் அடைய மாட்டேன் என்று அறிவித்தார்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் 41 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இப்படி போராட்டம் நடத்தும் மக்கள் மீது லிபிய ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. மக்களை
காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ராணுவம் லிபியா நாட்டில் திரிபோலி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று 4-வது நாளாக தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலை நாட்டுப்படைகள் லிபியா தரையில் இறங்கிவிட்டன



ஐ.நாவின் தீர்மானம் லிபியா மீதான வான் தாக்குதலுக்கு அனுமதி அளித்தாலும் அதைப் புறந்தள்ளி மேலை நாடுகளின் படை வீரர்கள் லிபியாவின் தரையில் இறங்கிவிட்டார்கள். மேற்படி தகவலை டேனிஸ் போரியல் ஆய்வாளர் எஸ்பன் செலிங் லாசன் டேனிஸ் தொலைக்காட்சி சேவை இரண்டிற்கு தெரிவித்துள்ளார். இந்தப் படையினர் தாக்குதல் நடவடிக்கையை செய்வதற்காக களமிறங்கவில்லை. ஆனால் லிபியாவின் போர் நிலமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவே அங்கு போயுள்ளார்கள். தரையில் நிலவும்