தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.4.11

வாக்கு எண்ணும் மையத்தில் புதிய தடை: தேர்தல் ஆணையம்


வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்­ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில்

ஆப்கானில் எட்டு நேட்டோ படையினரை சுட்டுக்கொன்ற பைலட்


Afghan-air-force-shooting-007
காபூல்:ஆப்கானிஸ்தானில் காபூல் விமானநிலையத்தில் வைத்து எட்டு நேட்டோ படையினரை ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பைலட் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
நேட்டோ படையினருடன் ஏற்பட்ட வாய் தகராறில் ஆப்கான் பைலட் துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் ஒரு காண்ட்ராக்டரும் கொல்லப்பட்டார். உள்ளூர் நேரம் 11 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக அமைச்சக செய்தித் தொடர்பாளர் முஹம்மது ஸாஹிர் ஆஸ்மி தெரிவிக்கிறார். மேலும் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

குவாண்டனாமோ:சிறைகைதிகளை சித்திரவதை-ஒத்துழைத்த அமெரிக்காவும்,பிரிட்டனும்


kyantonoma
லண்டன்:குவாண்டனாமோவில் பிரிட்டீஷ் சிறை கைதிகளை சித்திரவதை செய்ய டோனி ப்ளேயரின் தலைமையிலான அப்போதைய பிரிட்டீஷ் அரசும், அமெரிக்காவும் ஒத்துழைத்ததாக குவாண்டனாமோ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும்,பிரிட்டனின் வெளிநாட்டு புலனாய்வு பிரிவும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தை குறித்து பிரிட்டீஷ்

சர்ச்சைக்கு பின்னர் ஒபாமா பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பு


வாஷிங்டன், ஏப். 28- நீண்ட கால சர்ச்சைக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய பிறந்த இடம் குறித்த தகவலை அளித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுகட்சி சார்பில் போட்டியிட்டார் ஒபாமா. அப்போது இவரின் பிறப்பு மற்றும் இருப்பிடம் குறித்து சர்ச்சை எழுந்தது. இருப்பினும் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று அதிபர் பதவியில் அமர்ந்தார்.

சாய்பாபா மரணம் - சந்தேகங்கள் சர்ச்சைகள் தொடங்கின



சத்ய சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது உடலும் தேசிய மரியாதைகளுடன் நேற்று சமாதி வைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அவரது மறைவு குறித்து சர்ச்சைகள் பல தோன்றத் தொடங்கியுள்ளன.
கடந்த 24-ந்தேதி காலை  அவர் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மறைவு குறித்தம் சந்தேகங்கள் எழுப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவரது மறைவு குறித்து புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கள்ளக்காதல் கொலை!! பிரபல சாமியார் தலைமறைவு!!

April 29, நெல்லை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த கிராமத்தில் உள்ள கிணற்றில் ஒரு உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.

சம்ப

வ இடத்திற்கு தச்சநல்லூர் போலீசார் சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது43) என்று தெரியவந்தது.

கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும்

வறுமையை ஒழிக்க நல்ல உலகத்தை படைக்க வேண்டும்: அப்துல் கலாம்


சிகாகோ, - வறுமையை ஒழிக்க வேண்டுமானால் நல்ல உலகத்தை படைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் கலாமுக்கு பொதுவரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது. அதில் உரையாற்றிய அப்துல் கலாம் பேசியதாவது:
நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம்.