தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.2.11

முபாரக் ராஜினாமா: எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது


எகிப்து அதிபர் முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு குடும்பத்துடன் கெய்ரோவில் இருந்து வெளியேறினார். ஆட்சி பொறுப்பை ராணுவம் கைப்பற்றியது.
எகிப்து நாட்டில், கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. கடந்த 18 நாட்களாக, தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்டிரியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு உரையாற்றிய அதிபர் முபாரக், தான் பதவி விலக போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற போராட்டக்காரர்கள் நேற்று லட்சக்கணக்கில் திரண்டு, அதிபர் மாளிகையையும், பாராளுமன்றத்தையும் முற்றுகையிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், உயிருக்கு பயந்த முபாரக் தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச்சென்றதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதிபர் முபாரக் பதவி விலகியதாக, துணை அதிபர் உமர் சுலைமான் அறிவித்ததாக அரசு தொலைக்காட்சி அல்-ஜசீரா நேற்று இரவு அறிவித்தது. இதைத்தொடர்ந்து முபாரக்கின் 30 ஆண்டு சர்வாதிகார ஆட்சி நேற்று முடிவுக்கு வந்தது. ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாகவும் அறிவிப்பு வெளியானது.
சுலைமானின் அறிவிப்பை கேட்ட, பொதுமக்களின் கிளர்ச்சி வெற்றி கொண்டாட்டங்களாக மாறியது. நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நோபல் பரிசு வென்ற எல்பராடி, இதுகுறித்து கூறுகையில், எகிப்து மக்களுக்கு இந்த நாள் மிகச்சிறந்த ஒரு நாள். எகிப்து இப்போது விடுதலை அடைந்து விட்டது என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதன் காரணமாக முபாரக் பதவிவிலகியுள்ளார். இதனை நான் வரவேற்கிறேன். மிகவும் சிக்கலான இத்தருணத்தில் எகிப்தின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும், ஆனாலும் எகிப்து மக்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்

பெங்களூர் நீதிமன்றத்தில் மதானியின் ஜாமீன் மனு தள்ளுபடி


பெங்களூர், பிப். 12- பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் அப்துல் நசீர் மதானியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் அப்துல் நசீர் மதானி கடந்த ஆண்டு ஆகஸ்டு 17-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பெங்களூர் சிறையில்அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவரை ஜாமீனில் விடக்கோரி, பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வி. ஜெகன்நாதன் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது அரசு வக்கீல் அசோக், "மதானி, அமைதியை குலைக்கும் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உள்ளவராக இருக்கிறார். கேரளாவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன. தேசத்தின் பாதுகாப்பை கருதி அவரை ஜாமீனில் விடக்கூடாது" என்று வாதிட்டார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு, மதானியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். என்றாலும் அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து கொள்ள அனுமதி அளித்தார்

காவி மெளலானாக்கள் - சங்க்பரிவாரின் புதுமுயற்சி

ல்க்னோ,பிப்.10:முஹம்மது வாஹித் ஜிஸ்தி தலைமையில் 15 பேர்கள் அடங்கிய காவி மெளலானாக்களின் கும்பல் ஒன்று லக்னோவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மச்சாலி மஹால், மாடல் டவுன், பஈஸி மஸ்ஜித் ஆகிய பகுதிகளிலுள்ள சாக்கடை ஓடும் சந்து பொந்துகளிலெல்லாம் சிரமத்துடன் நடந்து சென்று சங்க்பரிவாரின் தத்துவத்தை பிரச்சாரம் செய்து வருகிறது.

அயர்லாந்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலி

டப்ளின், பிப். 11- அயர்லாந்தில் குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட்டில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. அதில், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 2 விமானிகள், அயர்லாந்து அதிபர் மேரி மெக்கலிசின் உறவினர் மற்றும் அதிகாரிகள் என 12 பேர் பயணம் செய்தனர். விமானம் பறந்த போது கடும் மூடு பனி பரவி இருந்தது. எனவே, விமானம் பறக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கார்க் விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரை இறக்கினர் அப்போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், அயர்லாந்து ஜனாதிபதியின் உறவினர் உள்பட 6 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாகினர். மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். 
 
உடனே, அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் 2 பேர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தை பிரதமர் பிரைன் கோவன் ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார். அயர்லாந்தில் உள்நாட்டு குட்டி விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது இதுதான் முதல் முறை என்று கூறினார்

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி


இஸ்லாமாபாத், பிப். 11- அணு ஆயுதங்களை தாங்கி சுமார் 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கவல்ல ஹட்ப்-7 (பாபர்) என்கிற நவீன ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை மூலம் இந்தியாவிலுள்ள இலக்குகளையும் தாக்க முடியும்.
ஏவுகணை அமைப்பின் செயல்பாட்டை மதிப்பிடுவதன் ஒரு பகுதியே இந்தச் சோதனை என்று பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தச் சோதனை எங்கு நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானின் முப்படை அதிகாரிகள் குழுவின் தலைவர் காலித் ஷமீம் முன்னிலையில் இந்தச் சோதனை நடந்திருக்கிறது. நாட்டின் தாக்குதல் திறனை அதிகரிப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த சோதனை ஒரு மைல்கல் என அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து உறுதியுடன் இருக்கும் என்று தெரிவித்த அவர், இந்த ஏவுகணைச் சோதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளையும் விஞ்ஞானிகளையும் அதிபரும், பிரதமரும் வெகுவாகப் பாராட்டினார்கள் என்றார்.
பாபர் ஏவுகணை நவீன ரக அல்லது சாதாரண வெடிபொருள்களைத் தாங்கி, மிகக் குறைந்த உயரத்தில் பறந்து சென்று, குண்டூசி முனை அளவுத் துல்லியத்துடன் இலக்கைத் தாக்கவல்லது. ராடாரின் கண்களுக்கும் இது சிக்காது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் குஷாப் என்ற இடத்தில் 4-வது அணுஉலைக்கூடம் கட்டும் பணி தொடங்கியது. இதன்காரணமாக அந்த நாடு மேலும் அதிகமான அணுஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும். இப்போதே அந்த நாட்டிடம் 100-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும். இந்த அணுஉலைக்கூடத்தை சீனா கட்டிக்கொடுக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டு உள்ளன. குஷாப்பில் ஏற்கனவே 2 அணு உலைக்கூடங்கள் இருக்கின்றன.

மகிந்த ராசபக்சேவிற்கு குற்றப்பத்திரிகை அனுப்பப்படும்


வாசிங்டன், பிப் இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சேவிற்கு குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமெரிக்க வழக்கறிஞர் புருஸ் பெயின் அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
மகிந்த ராசபக்சேவை முப்படைத் தளபதியாகக் கொண்டுள்ள சிறிலங்கா படைகள் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, மூன்று தமிழர்கள் சார்பாக வழக்கைப் பதிவு செய்துள்ள வழக்கறிஞர் புரூஸ், முதற் கட்டமாக கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி முகவரியிலுள்ள அலரி(அதிபர்) மாளிகைக்கு மின்னஞ்சல் ஊடாக குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக படுகொலைகள் தொடர்பான ஹேக் உடன்படிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் எனவும், வியன்னா தீர்மானத்திற்கு அமைவாக இராசரீக உறவுகளைக் குழப்பாத வகையில் வாசிங்கரன் டி.சி.யிலுள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு குற்றப்பத்திரிகை அனுப்பவும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பெண் குழந்தை பிறந்தால் உடனே கொன்று விடுங்கள்: சல்மா அன்சாரி


பெண் குழந்தை பிறந்தால் உடனே விசம் கொடுத்து கொன்று விடுங்கள் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி. இவர் அடிக்கடி மரபுகளை மீறி கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து கடந்த ஆண்டு தீவிரமாக விவாதம் எழுந்த போது, அந்த இட ஒதுக்கீடு எந்த பயனும் தராது என்று சல்மா அன்சாரி பேசினார். அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் எத்தனை பெண்கள் பயன் பெறுகிறார்கள். எனவே பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாத வரை இட ஒதுக்கீடு பயன் தராது என்றார். சல்மாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் சல்மா அன்சாரி புது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க இயலாமல் சமுதாய சூழ்நிலை உள்ளது. இதில் எனது கருத்து என்னவென்றால் பெண் குழந்தை பிறந்ததும் உடனே விசம் கொடுத்து கொன்று விட வேண்டும் என்றார். இது கருத்தரங்குக்கு வந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சல்மா அன்சாரியின் பேச்சு நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.