தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.1.11

குவைத்தில் உள்ள ரெஸ்டாரெண்டுக்கு டிரைவர்கள் தேவை

நாகப்பட்டினம் : குவைத்தில் உள்ள சப்வே ரெஸ்டாரெண்டுக்கு டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். குவைத்தில் ஏற்கனவே டிரைவராக பணிபுரிந்து தற்போது தாயகத்தில் இருப்போர் தேவைப்படுகின்றனர். 120 KD சம்பளமும் இருப்பிடமும் அளிக்கப்படும் என்றும் பணி நேரத்தில் உணவு வழங்கப்படும் என்றும் விசா தயார் நிலையில் இருப்பதாகவும் ஸ்மைல் கன்ஸல்டன்சி நிறுவனம் அறிவித்துள்ளது.


விருப்பம் உள்ளோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.ABDUL SAMAD -   9976327487, SMILE CONSULTANCY, NO. 2 THERADI ST, NAGAPATTINAM - 611001
KUWAIT RETURN DRIVERS with return Kuwait driving license
20 numbers
Salary:120KD
 நன்றி :தட்ஸ் தமிழ் இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது.

குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்த ஜோதியை உருவாக்குவதில் தேவசம் போர்டுக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்
பழங்காலத்தில், காட்டுவாசிகள் மகரவிளக்கு விழாவினை பொன்னம்பலமேடு பகுதியில் கொண்டாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது பொன்னம்பலமேடுவில் ஜோதியை ஏற்றி மகரவிளக்கு விழாவைக் கொண்டாடுவார்கள். காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட பின்னரும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது என்றும் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.

பன்டலம் அரண்மலை மேலாண்மைக் குழுத் தலைவர் ராமவர்மா ராஜா மற்றும் கோயிலின் தலைமைப் பூசாரி கன்டரராரு மகேஷ்வரரு ஆகியோரும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.

மகரவிளக்கு நாளின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு மேல் மலை உச்சியில் தென்படும் நட்சத்திரத்தின் ஒளிதான் மகரஜோதி என்றும் தற்போது பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் ஜோதி மகரஜோதி அல்ல என்றும் தலைமைப் பூசாரி கூறியுள்ளார்.

பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகரஜோதி மனித தயாரிப்பு என்பது உண்மை என்றாலும் அது நம்பிக்கை சார்ந்தது என்று ஐயப்பா சேவா சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.

மகரஜோதி மனித தயாரிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஐயப்ப பக்தர்களின் மனதில் புனிதம் பெற்ற நிகழ்வாக இடம்பெற்றுவிட்டது என்று இந்து ஐக்கியவேதி அமைப்பின் பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.

மகரஜோதியும் பொன்னம்பலமேடும் சபரிமலை கோயிலின் அடிப்படையான இடம் என்று கருதப்படுகிறது. இவை ஆழ்ந்த மத நம்பிக்கையின் உண்மைப் பகுதிகள். பொன்னம்பலமேடுவில் சிமெண்ட் தரையைக் கட்டியது திருவாங்கூர் தேவசம் போர்டுதான் என்றும் ராஜசேகரன் கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் அறிவிற்குட்பட்டு தேவசம்போர்டால் கட்டப்பட்டதே இந்த இடம் என்றும் கூறியுள்ள ராஜசேகரன், புல்மேடு விபத்திலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக சிலர் மகரஜோதி குறித்து பிரச்சனைகளை எழுப்புகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப்படும் இடம்
பொன்னம்பலமேடுவில் மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்படும் இடம் 1990களில் திருவாங்கூர் தேவசம் போர்டால் கட்டப்பட்டது. இந்தப் புகைப்படம் உரிய அனுமதி பெற்று 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.நன்றி: தட்ஸ் தமிழ் இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

நித்யானந்தாவுடன் எனது(சல்லாப)) உறவு தொடரும்! - ரஞ்சிதா

இந்த காம கழிசடைகளின் நாற்றமெடுத்த வீடியோவை உலகமே பார்த்து காறி உமிழ்ந்தது இன்று இந்த கழிசடையின் வெறி அடங்கா நாற்றமெடுத்த பேட்டியை படித்து மீண்டும் ஒருமுறை காரி உமிழுங்கள்  பெங்களூர்: நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.

கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார்.

'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.

இன்னொரு பக்கம் பெங்களூர் மடத்தில் முன்பை விட அதிக நேரம், நித்யானந்தாவுடன் அதிக நெருக்கத்துடன் இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தாவுக்கு பாத பூஜை, பால் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்தல் என தினம் ஒரு பரபரப்பை செய்து அதை பத்திரிகைகளுக்கு செய்தியாக திட்டமிட்டு அளித்து வருகிறார்.

இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:

"நித்யானந்தாவுடன் இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு இருப்பேன். அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என் குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில் அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என் குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியமாய்பட்டது. மக்கள் என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.

ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும் நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய நோக்கம்.

சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...," என்றார்.இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி