தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.12.10

கீழக்கரை அருகே கடலில் படகு மூழ்கியதில் 16 பேர் பரிதாப பலி

ராமநாதபுரம் : விடுமுறையை கழிக்க தீவுக்கு உல்லாச பயணம் சென்றவர்களின் படகு கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சிலரின் கதி என்னவானதென்று தெரியவில்லை. சுனாமி நினைவு நாளில் ராமநாதபுரம் அருகே இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதே, படகு கவிழக் காரணம் எனக் கூறப்படுகிறது.


ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், கடந்த வாரம் திருமணம் ஒன்றுக்காக தனது குடும்பத்தாருடன் பெரியபட்டினம் வந்தார். வந்த இடத்தில், உறவினர்களுடன் அருகில் உள்ள முல்லித்தீவிற்கு சுற்7றுலா செல்ல தயாராகினர்.இரண்டு வேன்களில் அருகில் உள்ள முத்துப்பேட்டை கடற்கரைக்கு சென்றவர்கள், அங்கிருந்த பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐயூபு கான், ரசூல் என்பவர்களுக்கு சொந்தமான படகுகளில் முல்லித்தீவிற்கு கிளம்பினர்.ரசூல் படகில், பிரியாணி தயாரிக்கத் தேவையான பொருட்கள், காஸ் அடுப்பு, சிலிண்டர், இரண்டு ஆடுகளுடன், 15 ஆண்கள் சென்றனர். ஐயூபு கானின் படகில் பெண்கள், குழந்தைகள் என, 38 பேர் சென்றுள்ளனர். பெண்கள், குழந்தைகள் சென்ற படகு தீவுக்கு முன், ஒரு கி.மீ., தூரத்தில் நிலைதடுமாறி மூழ்கியது. படகை ஓட்டிச் சென்ற ஐயூபு கான், ஹாஷரத்(16) ஆகியோர் நீந்தி, முன்னால் சென்ற படகிற்கு தகவல் தெரிவித்தனர்.


அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். படகு முழுவதும் மூழ்கிய நிலையில், இரு பலகைகள் மட்டுமே சம்பவ இடத்தில் மிதந்தன. சிறிது தூரத்தில் மிதந்து கொண்டிருந்த அப்துல் குத்தூஸ் மனைவி சலிமா பீவி(48), சலாவுதீன் மனைவி மர்லியா(42), இபுனு மகள் நாதீரா(7), குத்தூஸ் தங்கைகள் பரகத்(37), ஹமீதா நிஷா(38), பெரியபட்டினத்தைச் சேர்ந்த சீனி முகமது மனைவி பிரிதவ் பானு(40), சீனி ஊர்து மனைவி பர்சானா(35), அஜ்மல் கான் மகள் ஹர்ஷதா(15), ஜாஹிர் மகள் மகுபு(16), சதகத்துல்லா மனைவி அலிமுத்து(45), சாகுல் ஹமீது மகள் முஸ்பிலிகா(12), கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த சீனி மகன் கலீல்(11), சீனி முகமது மகன் அப்துல் வஹாப்(12) ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.பெயர் தெரிந்த சீனி முகமது மகள் நஜியா(18), ரஹிமா(13) மற்றும் சிலரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை உறவினர்கள் கைப்பற்றி வீடுகளில் வைத்து பூட்டினர். பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.கலெக்டர் ஹரிஹரன், டி.ஐ.ஜி., அமல்ராஜ், எஸ்.பி., பிரதீப்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் பெயர் விவரங்கள் உட்பட எந்த தகவலையும் கூற மறுத்து விட்டனர்.


விபத்து நடந்தது எப்படி?பெரியபட்டினம் பகுதியிலிருந்து அருகில் உள்ள தீவுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கமாக நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் 2,000 ரூபாயில் மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு நாட்டுப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. முல்லித்தீவு செல்லும் வழி வழக்கமாக 15 அடி ஆழத்தில் இருக்கும்.விபத்து நடந்த பகுதியில் மட்டும் 30 அடி ஆழம் இருக்கும். படகு இப்பகுதியை நெருங்கியதும், லேசாக குலுங்கியுள்ளது. மிரண்டு போன பெண்கள், ஒருவருக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு ஒரே இடத்தில் திரண்டுள்ளனர். விபத்துக்குள்ளான படகு பலவீனமாக இருந்ததாலும், பதட்டத்தில் படகின் இன்ஜினை "ஆப்' செய்ய தவறியதாலும் கவிழ்ந்ததுஅதிகாரிகளை புலம்ப வைத்த மக்கள் : அதிகாரிகள் வருவதற்கு முன்னரே உடல்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், அவற்றை கைப்பற்றிய உறவினர்கள் வீடுகளில் வைத்து பூட்டினர். அதன் பின் வந்த கலெக்டர், அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தியும், பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறு' சம்பந்தப்பட்ட ஜமாத்தார்களிடம் வலியுறுத்தி சென்றனர்.

அதிகாரிகள் பதில் என்ன? கலெக்டர் ஹரிஹரன் குறிப்பிடுகையில், "சம்பவத்திற்கு காரணமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனே நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்காது. தீவுப் பகுதிகளுக்கு சென்றது குறித்து வனத்துறையினர் விசாரிப்பர். அடிக்கடி பலரும் தீவுகளுக்கு செல்வதாக கூறுவது தவறானதாகும்' என்றார்.


எஸ்.பி., பிரதீப்குமார் கூறுகையில், "விபத்து நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் நிலை தெரியவில்லை; விசாரித்து வருகிறோம்' என்றார்.


விபத்தில் சிக்கிய படகில் சென்ற ஹாஷரத் என்ற சிறுவன் குறிப்பிடுகையில், "எனது அம்மா என் கண் முன்னே மூழ்கி பலியானார். எனக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி தீவுக்குச் சென்றேன். படகு மூழ்கிய மறுநொடியே அனைவரும் மூழ்கினர். சிறுவர்கள் நிறைய பேர் மூழ்கி விட்டனர்' என்றான்.

படம்-நன்றி: தினமலர்

பதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்

புதுடெல்லி டிச: மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்டம் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர். குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது. தற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.

செய்தி:தேஜ
ஸ்

வலுவான இஸ்லாமிய ஊடகம் தேவை - ஒ.ஐ.சி பொதுச்செயலாளர்

ஜித்தா,டிச.26:இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்ள வலுவான ஊடகம் தேவை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (organisation of islamic countries) பொதுச் செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிக் ப்ரோட்காஸ்டிங் யூனியனின்(ஐ.பி.யு) பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் இக்மலுத்தீன்.

ஊடக உலகின் வேகமான வளர்ச்சிக்கொப்ப செயல்படுவதற்கு இஸ்லாமிய ஊடகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. 2005 ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் மக்காவில் நடந்த ஒ.ஐ.சி மாநாட்டில் ஐ.பி.யு போன்ற ஒ.ஐ.சி ஊடகங்களையும், சர்வதேச இஸ்லாமிய செய்தி ஏஜன்சியையும்(ஐ.ஐ.என்.எ) வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது என இக்மாலுத்தீன் தெரிவித்தார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் எதார்த்தமாக்கும் விதத்தில் ஐ.பி.யு வை வலுப்படுத்த வேண்டுமென சவூதி அரேபியாவின் கலாச்சார செய்தி தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் கோஜா தெரிவித்தார்.

உலக தரம் வாய்ந்த ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க அவர் ஒ.ஐ.சி நாடுகளின் உதவியை கோரினார். ஒ.ஐ.சியின் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.யுவின் புதிய பொதுச் செயலாளராக மலேசியாவின் ஸைனுல் ஆப்தீன் இப்ராஹீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஜிஎஸ்எல்வி 2வது முறையாக தோல்வி-ராக்கெட் வெடித்துச் சிதறியது


சென்னை: தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது.

கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது.

இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும்.

ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது.

12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும்.

கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை நாமே ஏவும் திட்டத்திற்கும் இது பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் இடம் பெற்றிருந்த ஜிசாட்-5பி செயற்கைக் கோள் ரூ. 125 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு சம்பவம்-முக்கிய துப்பு கிடைத்தது-பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது


ஜெய்ப்பூர்: ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சமப்வத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது.
இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர்.

கோத்ராவிலிருந்து ஆஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஆஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்

தீவிரவாதி என அபாண்டம்- டாக்டர் ஹனீஃபிற்கு 10 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க ஆஸி. சம்மதம்

மெல்போர்ன்,டிச.22:ஆஸ்திரேலிய அரசு தன்னை தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சட்டவிரோதமாக சிறையில் அடைத்ததை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த இந்திய டாக்டர் முகம்மது ஹனீப், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் சமரசமாகப் போக ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு பெரும் தொகையை இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

ஹனீப்புக்கு ஆஸ்திரேலிய அரசு 10 லட்சம் டாலர் இழப்பீடுத் தொகையை வழங்கும் என்று தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்தவர் முகம்மது ஹனீப். டாக்டரான இவர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்தார்.கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுதொடர்பான விசாரணையின்போது, டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும், கிளாஸ்கோ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஹனீப்புக்கு எதிரான எந்த ஆதாரமும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் அம்பலமானது. இதையடுத்து ஆஸ்திரேலிய அரசுக்கு பெரும் அவமானமும், தர்மசங்கடமும் ஏற்பட்டது. இதையடுத்து ஹனீப் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஹனீப் நாடு திரும்பி விட்டார். ஆனால் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, தவறான வழக்கில் கைது செய்து, தனது வாழ்க்கையையும், வேலையையும் கெடுத்த ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக, அந்த நாட்டின் முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசுக்கும், ஹனீப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியா வந்தார் ஹனீப். 10 நாள் விடுமுறையில் வந்த ஹனீப், ஆஸ்திரேலிய தரப்புடன் தனது வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டுள்ளார்.

இதுகுறித்து ஹனீப் கூறுகையில், இந்த உடன்பாடு எனது வேலையை திரும்பப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது கெளரவமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஆஸ்திரேலியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவுள்ளேன் என்றார்.

ஹனீப்புடன் அவரது மனைவி பிர்தோஸ் மற்றும் 3 வயது மகள் ஹனியா ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு நாடு திரும்பிய ஹனீப் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனீப் தொடர்ந்து கூறுகையில், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தவறான குற்றச்சாட்டின் பேரில் நான் கைது செய்யப்பட்டது எனக்கு பெரும் வேதனையான அனுபவத்தைக் கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு எனக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது. எனது குடும்பத்தினருடன் இனி நிம்மதியான வாழ்வைத் தொடர்வேன்.

விரைவில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவோம் என்று கருதுகிறேன். அதுகுறித்து பரிசீலிக்கவுள்ளேன். ஏற்கனவே வேலை பார்த்து வந்த கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் மீண்டும் சேரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. இதுகுறித்து எனது குடும்பத்தினருடன் விவாதித்த பின்னரே முடிவெடுப்பேன் என்றார்.

ஹனீப்புக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து அவரது வக்கீல்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவருக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று மட்டும் தெரிவித்தனர். இருப்பினும் ஹனீப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பிரிஸ்பேனில் அரசுத் தரப்புடன் கடந்த 2 நாட்களாக இறுதிக் கட்ட நஷ்ட ஈடு பேச்சுவார்த்தையில் ஹனீப்பும் அவரது வக்கீல்களும் ஈடுபட்டிருந்தனர். அது இன்று சமரசமாக முடிந்துள்ளது. இதையடுத்து முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் மீது ஹனீப் தொடர்ந்த வழக்கு கைவிடப்படுகிறது.

மன உளைச்சல், வேலை பறிபோனது, வருமானம் பாதிக்கப்பட்டது, கெளரவம் பாதிக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்காக தற்போது ஹனீப்புக்கு இழப்பீடு தரப்படவுள்ளது. ஆஸ்திரேலிய சட்ட வரலாற்றில் இப்படி ஒரு இழப்பீடு விவகாரம் இதுவரை நடந்ததே இல்லை என்று ஹனீப்பின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நீதிபதி டோனி பிட்ஜெரால்ட் முன்னிலையில் இந்த இழப்பீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
தட்ஸ் தமி
ழ்

பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்

கொல்கத்தா,டிச.23:சாதாரணமான ஒரு பிரச்சனையை காரணமாக வைத்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்துள்ளனர்.

கொல்கத்தாவிற்கு அடுத்துள்ள பீவிஹகோலா ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 12 மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் வெறிக் கும்பலின் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாகியுள்ளனர்.
கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தபொழுதிலும் ஊடகங்கள் இச்செய்தியை மூடி மறைத்துள்ளன. காளி பூஜைக்காக பள்ளிக்கூட சுற்றுப்புற பகுதியை அலங்காரம் செய்ததுத் தொடர்பாக இச்சம்பவத்தின் துவக்கம் அமைந்துள்ளது.

பூஜை கொண்டாட்டங்கள் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பொழுதிலும் பள்ளிக்கூட காம்பவுண்டில் கட்டிய பந்தல் மாற்றப்படவில்லை. மேலும் பள்ளிக்கூட கேட்டில் மூங்கிலால் கட்டப்பட்ட வேலி மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூட நிர்வாகிகள் பாஞ்ச்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த 4 பேரைக் கொண்ட போலீஸ் குழு மூங்கில்களை மாற்றுவதற்கு ஆசிரியர்களிடம் கூறினர். ஆனால், அவர்கள் அதற்கு தயாராகவில்லை. பின்னர் அவ்விடத்தில் நின்றுக் கொண்டிருந்த மாணவிகளின் உதவியுடன் மூங்கில்கள் மாற்றப்பட்டன. ஆனால், நாங்கள் கட்டிய மூங்கில்களை மாற்றிவிட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் அங்கு வந்து சம்பவ இடத்திலிருந்த ஆசிரியர்களையும், மாணவிகளையும் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் 12 மாணவிகளை பள்ளிக்கூட குளத்தின் அருகிலுள்ள கட்டிடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளது இந்த பயங்கரவாத காம வெறிப்பிடித்த கும்பல்.

இதில் ஷப்னம் ஹாத்தூன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காமவெறி இயக்கத்தைச் சார்ந்த தகப்பனும், மகனும் உட்பட 8 பேர் சேர்ந்து வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதனை பாதுகாவலர்கள் போலீசாரிடம் புகாராக அளித்துள்ளனர்.

ராஜ்குமார், அவனுடைய மகன் சுஜித் கொல்லா, பினோய் மண்ணா, பொய்கோந்தா ஆகியோரின் தலைமையில்தான் இந்த பயங்கரத்தை
நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

இந்தக் கொடூரத்தை தடுக்கவந்த பள்ளி தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமுற்ற இவர் தற்பொழுதும் ஹவ்ரா பொது மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்று வருகிறார்.

பாலியல் வன்புணர்வுக்கு இரையான மாணவிகள் பலரும் தற்பொழுது மனோநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.

துவக்கத்தில் வழக்கை பதிவுச்செய்ய தயங்கிய போலீசார் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத காம வெறிக்கும்பல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர்.

ஜாமீன் பெற இயலாத குற்றம் என்ற பொழுதிலும் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் ஜாமீன் கிடைக்க தடையில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவிகளுக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து தேசிய ஊடகங்கள் மெளனம் சாதிக்கின்றன. பல நாட்களுக்கு பிறகு 'கலம்' என்ற வங்காள பத்திரிகைதான் இச்செய்தியை முதலில் வெளிக்கொணர்ந்தது.

தொலைக்காட்சி சேனல்களையும், நாளிதழ்களையும் நேரில் அழைத்து இச்சம்பவம் குறித்து அறிவித்த பொழுதிலும் அவர்கள் இதனை செய்தியாக வெளியிட மறுத்துள்ளனர். இத்தகவலை 'வாரிகா' என்ற பத்திரிகையின் எடிட்டர் அஹ்மத் ஹஸன் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் மதவெறிதான் காரணமென பலரும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு மகளிர் உரிமை கமிஷன் தலைவி மாலினி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,