தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.1.11

மகரஜோதி மோசடியை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி,ஜன.23:சபரி மலையில் மகரஜோதி மோசடியை தடுத்து நிறுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனக்கோரி இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸனல் இடமருகு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளமாநில அரசு, மாநில தேவஸம்போர்டு(அறநிலையத்துறை), மாநில மின்சார வாரியம், மாநில வனத்துறை, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா அரசுகள்,மத்திய வனத்துறை அமைச்சகம் ஆகியோரின் மீது குற்றஞ்சாட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அற்புத ஜோதி என்ற பெயரில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கை எரியவிடும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு கேரள மாநில அரசு, திருவிதாங்கூர் தேவஸம்போர்டு, மாநில மின்சார வாரியம், மாநில வனத்துறை ஆகியவற்று உத்தரவு பிறப்பிக்க இம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

மகரவிளக்கு அற்புதமில்லை எனவும், அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என தமிழ்நாடு, கர்நாடகா, மஹராஷ்ட்ரா, ஆந்திரா மாநில அரசுகள் தங்களது மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்பது இம்மனுவில் கோரப்பட்டுள்ள இரண்டாவது கோரிக்கையாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஆஸ்திரேலிய பாதிரியார் கொலை தாரா சிங்குக்கு தூக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது.

இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதுஇந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஜும்ப்லாத் ஆதரவு

பெய்ரூத்,ஜன.23:லெபனானில் முக்கிய எதிர்கட்சிகளில் ஒன்றான ட்ரூஸ் கட்சியின் தலைவர் ஜும்ப்லாத் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனால் லெபனானின் அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக ஹிஸ்புல்லாஹ் விளங்கும். இம்முடிவு, லெபனானின் ஸ்திரத் தன்மைக்காக என ஜும்ப்லாத் தெரிவித்துள்ளார்.

11 உறுப்பினர்களின் ஆதரவு ஜும்ப்லாத்திற்கு உள்ளது. இடைக்கால பிரதமர் ஸஅத் ஹரீரியின் தலைமையில் புதிய அரசை உருவாக்கவோ அல்லது ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாய்ப்பு அளிக்கவோ ஜும்ப்லாத்தின் தீர்மானம் நிர்ணாயகமானதாகும்.

'எனது தலைமையில் புதிய அரசை உருவாக்க முயற்சி மேற்கொள்வேன் என கடந்த செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய ஸஅத் ஹரீரி தெரிவித்திருந்தார். ஹரீரி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை தாங்களும் விரும்புவதாக ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிக்கும் கிறிஸ்தவ கட்சியின் தலைவர் மைக்கேல் அவ்ன் தெரிவித்துள்ளார்.

முன்னர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த உமர் கராமாவை பிரதமராக ஹிஸ்புல்லாஹ் முன்மொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லெபனானில் அதிகார பங்கேற்பு கட்டமைப்பின் படி பிரதமர் சுன்னி பிரிவைச் சார்ந்தவராகவும், அதிபர் கிறிஸ்தவராகவும், சபாநாயகர் ஷியா பிரிவைச் சார்ந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி

அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு

லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.
டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி