தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.10

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

இப்படிக்கு

ரஹ்மதுல்லாஹ்

மாநிலத் துணைத் தலைவர் நன்றி:TNTJ இணையதளம்

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! – தீர்ப்பின் நகல்!!

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் வழங்க வேண்டும் என்றும்,

ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும்,

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர்.

பாபர் மஸ்ஜித் இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளர்.

மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு ஆங்கிலத்தில்..

Sudhir Agarwal.pdf

Sibghat Ullah Khan.pdf

Dharam Veer Sharma-1.pdf

Dharam Veer Sharma-1.pdf

குறிப்பு: இது தீர்ப்பு என்ன உள்ளது என்பது பற்றிய செய்தி மட்டுமே . தீர்ப்பு பற்றிய நமது நிலைபாடோ அல்லது அது பற்றிய விளக்மோ அல்ல! நன்றி: TNTJ இணையதளம்

இது இறுதித் தீர்ப்பு அல்ல..த.மு.மு.க.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.

1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.

இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இன்று பாபர் மசூதி தீர்ப்பு; இணையதளத்திலும் காணலாம்

பாபர்மசூதி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என லக்னோ உயர்நீதிமன்ற அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் இன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது. இணையதள முகவரி:www.allahabadhighcourt.com

இன்று அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு தயார் நிலையில் மத்திய படைகள்


டெல்லி: இன்று அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தேசமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.

மக்களின் அச்சத்தைப் போக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்ட அனைத்து மாநில நிலைமைகளையும் உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. நாடு முழுவதும் 16 இடங்களில் மத்தியப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையின் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் உள்ளன.

அயோத்தி நில விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.

இதனால் நாடு முழுவதும் அச்சமான சூழ்நிலை நிலவுவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வன்முறைகள் மூளாமல் தடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு [^] அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நிலைமையை கண்காணிக்க டெல்லியில் உள்துறை அமைக்கம் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கியுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை உள்துறை அமைச்சர் [^] ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த இடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து இன்டலிஜென்ஸ் பீரோ கொடுத்துள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில், அந்தந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மிகவும் பிரச்சனை மிகுந்த இடங்களுக்கு மத்தியப் படைகள் அனுப்பப்பட்டுவிட்டன. கலவரம் நடக்கலாம் என்று கருதப்படும் இடங்களுக்கு மிக அருகில் இந்தப் படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. மோதல் ஏற்பட்டால், இந்தப் படைகள் உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று சேரும் வகையில் வசதிகளை செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி, அகமதாபாத், கோவை, டார்ஜிலிங் உள்ளிட்ட நாட்டின் 16 இடங்களி்ல் மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட மத்திய துணை ராணுவ படைகள் தவிர, தேசிய பாதுகாப்பு படை, கமாண்டோ படை, அதிவிரைவு படை, ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகளை உடனுக்குடன் அழைத்துச் செல்ல விமானப் படையும் தயாராக உள்ளது.

எங்காவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், உடனடியாக அந்தப் படையினர் சம்பவ இடததை அடைய விமானப் படைக்குச் சொந்தமான ஐ.எல்.-76 மற்றும் ஏ.என்.-32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.