தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.10

பாஜகவும் முஸ்லீம்களும்

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி ஸ்டண்ட் அடித்துள்ளார்முதல்வர் நரேந்திர மோடி.

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் வாக்குகளை கொஞ்சமாச்சும் கவர வேண்டும் என்பதற்காக முஸ்லீம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக

அகமதாபாத்தின் ஜூஹாபுரா வார்டில் அல் சயத் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி பாஜக வேட்பாளராக படு பிசியாக வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சயத் கூறுகையில், குஜராத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் அக்கறையுடன் உள்ளார் மோடி. 5.5 கோடி குஜராத்திகளும் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பும் கலந்த சமுதாயமாகும்.

மோடி எங்களது தலைவர். இந்த மாநிலத்தின் முதல்வர் என்றார் சயத்.

சயத்தைப் போலவே மொத்தம் 9 முஸ்லீம் வேட்பார்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மொத்தம் 548 வார்டுகளுக்கு அக்டோபர் 10ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

************************************************************************* ஏற்கனவே பாஜகவில் நக்வி போன்ற சில முஸ்லீம்கள் இருக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மதவெறியை மறைப்பதற்கு தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே, முஸ்லீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் இருக்கும் முஸ்லீம்கள் பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களா? கோரைப்பல்லை மறைக்கும் தேவை இருக்கும் வரை அக்கட்சியில் தம்முடைய மதத்திற்காக செலாவணியாவோம் என்பதால் இருக்கிறார்கள். அப்துல்கலாமை அவரின் அறிவியலுக்காகவா அரசவைக் கோமாளியாக பாஜக முன்னிருத்தியது? அவரின் பார்ப்பனீயத் தன்மைக்காகத்தானே. குஜராத் இனப்படுகொலைகளின் போது பல்தேய்ப்பதற்குக் கூட வாயைத் திறக்காமல் அவர் தம் நன்றியைத் தெரிவித்தார்

வாக்களித்தால் ரசீது, அதன் பிறகு….?

மின்னணு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் யாருக்கு தாங்கள் வாக்களித்தோம் என்பது தொடர்பாக ரசீது அளிக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய மூவர் கொண்ட குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இந்திரேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு வாக்காளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து ரசீது பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வார்கள். தங்களது ஆய்வு முடிவை தேர்தல் ஆணையத்திடம் இக்குழு அளிக்கும். அதைப் பரிசீலித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்தார்ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தில் மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஓட்டுப்போடுவதே உரிமையா? ஒருமுறை ஓட்டளித்து விட்டால் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றும் செய்யமுடியாது என்பது என்னவிதமான பங்களிப்பை இந்த தேர்தல்முறை மக்களுக்கு வழங்குகிறது? திருப்பி அழைக்கும் அதிகாரமில்லாத தேர்தல்முறை குருடனை கைகளைக் கட்டி காட்டில் விட்டுவிட்டு நடக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்பது போன்றது.

ஓட்டுச் சீட்டு போய் இயந்திரம் வந்தது, இப்போது அந்த இயந்திரத்திலும் ரசீதுமுறையாம். இது யாருக்கு பயன்? தான் யாருக்கு ஓட்டுப்போட்டான் என்பது போட்டவனுக்குத் தெரியாதா? பின் யாருக்கு ரசீது? தேர்தலுக்கு முன் பணம் கொடுத்துவிட்டு தனக்கு ஓட்டுப்போடவில்லை எனத்தெரிந்துகொண்டு கொடுத்த பணத்தை திரும்பப் பறிப்பதற்குத்தான் இது பயன்படும்.

சரியாக செயல்படவில்லை என்றால் திரும்பி அழைக்கும் அதிகாரம் வேண்டும் மக்களுக்கு. இது இல்லாத தேர்தல் முறை செல்லத்தக்கதல்ல. மனு கொடுப்பது மட்டுமா உரிமை, கொடுத்த மனுவின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்டு முடுக்கும் அதிகாரம் இல்லையென்றால் அது என்ன பொருளில் மக்களாட்சி?

நடைமுறைப்படுத்தும், செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அரசு அதிகாரிகளை எந்த மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், அதிகாரம் கொண்டவர்களை தேர்ந்தெடுக்காமல் நியமணம் செய்துவிட்டு பொம்மைகளை தேர்ந்தெடுக்கும் முறையால் என்ன பயன்?