தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.2.11

பாலஸ்தீன அமைச்சரவை திடீர் ராஜினாமா


ரமல்லா, பிப். 15 பிரதமர் சலாம் பயாத் தலைமையிலான பாலஸ்தீன அமைச்சரவை திடீரென இன்று ராஜிநாமா செய்தது. தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அதிபர் மெக்மூத் அப்பாஸிடம் பயாத் நேற்று காலை வழங்கினார்.வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ரமல்லா நகரில் நேற்று அதிகாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் 

காதலர் தின எதிர்ப்பை கைவிட்டது சிவசேனை


மும்பை, பிப். 15காதலர் தின எதிர்ப்பை சிவசேனை கைவிட்டுவிட்டது.காதலர் தின கொண்டாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்த சிவசேனை கட்சி, இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்பைக் கைவிட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவர் ஆதித்யா தெரிவித்தார். இவர் சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் பேரனாவார். தேர்தலில் இளம் தலைமுறையைக் கவர்வதற்காக காதலர் தின எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.

புதுப்பட்டிணத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரம்!! உண்மை செய்திகள்!!

பட்டுக்கோட்டை,பிப்.14:புதுப்பட்டினம் என்ற சிற்றூரில் ஜனவரி 28-ம் தேதியன்று இந்து முன்னனி சார்பில் அவ்வமைப்பின் கொடி ஒன்று பேருந்து நிலையம் அருகில் ஊன்றப்பட்டுள்ளது. பிப்.8 அன்று யாரோ விசக்கிருமிகள் அக்கொடியினை அறுத்து இருக்கின்றனர். இதை முஸ்லிம்கள் தான் செய்ததாக கூறி 8 முஸ்லிம்களின் பெயரை கூறி சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்து முன்னணியினர்.

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார் ஹஷிம் அன்சாரி!!!

லக்னெள, பிப்.13: அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவுசெய்திருப்பதாக அந்த வழக்கைத் தொடர்ந்த ஹஷிம் அன்சாரி தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாண தாம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். பாபர் மசூதி தீர்ப்பு காரணமாக தேசத்துக்கு எந்த இழப்பும் ஏற்படுவதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால் எதிர் அணியில் உள்ள சங்கபரிவார்கள் நாடு பிளவுபட வேண்டும் என விரும்புகின்றனர். பாபர் மசூதி பாபர் மசூதி பிரச்சனையை வைத்து இந்தியாவில் மத துவேசத்தை வளர்த்து இந்தியாவை துண்டாட சதி செய்கிறார்கள்.பாபர் மசூதியோடு இவர்கள் நின்றுவிடவில்லை காசி, மதுரா, இதுவல்லாமல் இந்தியா முழுவதும் மூவாயிரம் பள்ளிகள் இவர்கள் லிஸ்ட் இல் உள்ளது. இதை முஸ்லிம்களால் சகித்து கொள்ளமுடியாது. இது ஒரு பெரிய இன மோதல்களை உருவாக்குவதோடு பிரிவினைக்கும் வழிவகுக்கும் என்று கூறினார். அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது என அன்சாரி தெரிவித்தார்

உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்தேன்: காங்கிரஸ் எம்.பி.


திருவனந்தபுரம், பிப்.14 உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் தலைவர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு, ஊழல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 1 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. தண்டனை பெற்ற அவருக்கு தார்மீக ஆதரவு வழங்கும் விதத்தில், கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி சார்பில் கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கராவில்

புரட்சி பயம்!! பஹ்ரைன் நாட்டில் குடும்பம் ஒன்றிற்கு 2650 டாலர் வழங்கபடுகிறது!!

மனாமா,பிப்.13: துனீசியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சம் அரபுலக ஆட்சியாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பஹ்ரைன் நாட்டில் வருகிறது 14-ஆம் தேதி எதிர்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா 

இப்போதைக்கு புதிய மந்திரிசபை இல்லை: எகிப்து பிரதமர்


கெய்ரோ, பிப். 15 எகிப்தில் இப்போதைக்கு புதிய மந்திரிசபை அமைக்கப்படமாட்டாது. அதற்கு அவசரமில்லை என அந்நாட்டு பிரதமர் அகமது ஷாபிக் தெரிவித்துள்ளார்.
எகிப்தில் அதிபர் முபாரக்கை பதவி விலகக்கோரி கடந்த 17 நாட்களாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தரிர் சதுக்கத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்து போன