தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.6.11

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை - அமெரிக்காவும் உறுதி செய்தது


ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாக அமெரிக்கா முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்ய விரும்பும் அமெரிக்கா, அல்-கொய்தா இயக்கத்தை முழுதும் அழிக்க நினைக்கிறது. புதிதாக அல்-கொய்தாவின் தலைவராகப் பதவி ஏற்றுள்ள அய்மன் அல்-ஜவாஹிரியை கொல்வோம் என்றும் சபதம் செய்துள்ளது அமெரிக்கா.

சென்னையில் இன்று முதல் 4 மணி நேரம் மின்தடை

சென்னை, ஜூன். 21-  சென்னையில் இன்று முதல் சுழற்சி முறையில் 4 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின் தடையும் மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரம் மின்தடையும், தற்போது அமலில் உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவிக்கு வந்ததும் மின் தடையை நீக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதையொட்டி பழுதடைந்த துணை மின்நிலையங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. உயர்மின் அழுத்த

பாபா ராம்தேவ் அறகட்டளைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீசு


டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க ராம்தேவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக கடந்த மாதம் 4-ந்தேதி யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன்

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி!


2G ஊழல் வழக்கில் கலைஞர் தொலைக் காட்சிக்கு ரூ 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கூட்டுச் சதி செய்ததாக சி பி ஐ யால் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையில் அடைக்க பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

சம்ஜெளதா குண்டுவெடிப்பு: அசீமானந்த் உள்ளிட்ட ஐவர் மீது குற்றப்பத்திரிகை!


கடந்த நான்கரை ஆண்டு கால விசாரணைக்குப் பின், சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா சாமியாரான அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

சிபிஐ மற்றும் என்ஐஏ என

இந்தியாவில் விரைவில் “புல்லட்” ரெயில் அறிமுகம்!!!

புதுடெல்லி, ஜூன்.21-பிரான்ஸ் நாட்டில் உள்ளது போன்று புல்லட் ரெயில் எனப்படும் அதிவிரைவு ரெயில் சேவையை தொடங்க இந்திய ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இந்த ரெயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.  பிரான்ஸ் நாட்டில் புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மணிக்கு 280 to 300 கிலோ மீட்டர் வேகத்தில் புல்லட் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.