தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.10

பர்தாவுக்குத் தடை - தாக்கரேவின் அரைவேக்காட்டுத் தனமான கருத்து! தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு

சாம்னா - சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடு. இந்த நாளேட்டில் சில தினங்களுக்கு முன் எழுதப்பட்ட தலையங்கத்தில் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே கடத்தல் குற்றங்களை தடுப்பதற்காக தனது மூளையை கசக்கி பிழிந்து ஒரு வழியை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

அது வேறொன்றுமில்லை. கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று மும்பை சாந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் 2 மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டு விட்டதாம். அந்த குழந்தையைக் கடத்தியவர் பர்தா அணிந்து இருந்தாராம். மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ள ரகசிய கேமராவில் இது பதிவாகியுள்ளதாம்.

இதைக் காரணமாகக் கூறி பர்தாவை தடை செய்ய கோரிக்கை வைத்து இருக்கிறார் குற்றங்களைத் தடுக்க நினைக்கும் மாபெரும் அறிவாளியான (?) தாக்கரே.

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரும்போது எதிர்ப்பு தெரிவிப்பது, ஆடுகளத்தை சேதப் படுத்துவது, ஐபிஎல் கிரிக்கெட் ஏல விவகாரத்தில் ஷாருக்கான் மற்றும் டெண்டுல்கருக்கு எதிராக விமர்சனம் செய்வது போன்றவை விளம்பரதிற்க்காக தாக்கரே செய்யும் கோமாளித் தனத்துக்கு உதாரணங்கள். அது போன்ற கோமாளித் தனமே இது என்ற போதிலும் தாக்கரேவையும் கடவுளாகக் கருதும் சிலருக்காக இந்த பதிவு.

குற்றத்தைத் தடுக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறை உள்ளவர் எந்தெந்த வழிகளில் குற்றத்தைத் தடுக்கலாம் என சிந்தித்து அறிவுரை கூற வேண்டுமே தவிர மத துவேசத்தில் சிந்திக்க மறந்து, மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு கருத்துக்களைக் கூறக் கூடாது. தாக்கரேவை கடவுளாகக் கருதும் நடிகர் நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப்படத்திற்கு அதை தயாரித்தவரின் தொலைக் காட்சியில் வெளி வந்த ஒரு விளம்பரத்தில் நடிகர் தோன்றி, படப் பிடிப்பின் போது படத்தின் கதாநாயகியான உலக நாயகி (?) நடிகரின் முன்னால் வந்தவுடன் நடிகருக்கு தான் பயிற்சி செய்த அத்தனையும் மறந்து விட்டதாம். 60 வயது நடிகரையும் மறக்கடிக்கும் அளவுக்கு அந்த உலக நாயகியின் உடைகள்.

காற்றாட மேலே ஒரு ஆடையும், தொடையை காட்டிக் கொண்டு கீழே ஒரு ஆடையும் அணிந்து வரும் பெண்களாலேயே அளவுக்கதிகமான பாலியல் குற்றங்களும், வன்புணர்வுகளும் நடந்தேறுகின்றன. தாக்கரே சற்று சிந்தித்து கருத்து கூறி இருந்தால் உலக நாயகியையும், டூ பீஸ் ஆடைகளை அணியும் பெண்களையும் பர்தா அணியச் சொல்ல வேண்டாம் குறைந்த பட்சம் அந்த ஆடைகளை தடை செய்ய கோரிக்கை விடுக்கலாமே.


இது வரை இந்தியாவில் நடைபெற்ற ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எத்தனை சதவீதம் பேர் பர்தா அணிந்து கொண்டு செய்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை தருவாரா இந்த தாக்கரே? சரி. தாக்கரேவின் ஆலோசனைகளை ஏற்று பர்தாவை தடை செய்தால் இனி இந்தியாவில் ஆள்கடத்தல் போன்ற குற்ற சமபவங்கள் ஒரு சதவீதம் கூட நடக்காது என தாக்கரே உத்தரவாதம் தரத் தயாரா?

காஞ்சி சங்கராசார்யா, நித்யானந்தா போன்ற (ஆ)சாமிகள் பக்தியின் பெயரால் மக்களை ஏமாற்றி காவி உடை தரித்து காமக் களியாட்டங்களில் ஈடுபட்டது உலகறிந்த விஷயம். இந்த செயலுக்காக காவி உடையத் தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே? அர்ச்சகர் தேவநாதன் கோயில் கருவறையில் நடத்திய காமலீலைகள் சிடி போட்டு விற்கும் அளவுக்கு புகழ் பெற்ற நிலையில் அர்ச்சகர்கள் பதவியையே தடை செய்யக் கோருவாரா பால் தாக்கரே?

மும்பை மராத்தியர்களுக்கே என கோஷம் போடும் தாக்கரே பீகாரில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ யாராவது ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள சென்றால் அவர்களை தாக்கேரேவின் சேனைகள் கொலை செய்யும் அளவுக்கு தாக்குதல் நடத்துவர். ஆனால் அயோத்தி போன்ற சில விவகாரங்களில் மட்டும் இவரது பாசம் மாநிலம் கடந்து எட்டிப் பாருக்கும். தாக்கரேவை கடவுள் எனக் கூறியவர் கூட என் தந்தை ஒரு மராத்தியர் என்ற அடையாளத்துடனே தாக்கரேவை சந்தித்தது குறிப்பிடத் தக்கது.

மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளை அடிப்பதால் பிஸ்கட்டையும், ரயில், பஸ்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என எல்லா இடத்திலும் குற்றங்கள் நடப்பதால் இவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று அரைவேக்காட்டுத் தனமாக கருத்து கூறாமல் குற்றங்களைத் தடுக்க சிறப்பான ஆலோசனைகளையும், குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கக் கோரியும் தாக்கரே போன்றோர் கருத்து கூறினால் வரவேற்போம்.
- அப்துர் ரஹ்மான், ஓமா

அஜ்மீர் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிகையில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயர்

ஜெய்பூர்,அக்.24:ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமாரும் ஆறு முக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான ரகசியக் கூட்டத்தில் பங்கெடுத்ததாக, அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐந்து ஆர்.எஸ்.எஸ், அபினவ் பாரத் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படை குறிப்பிட்டுள்ளது.

இந்திரேஷ் குமாருக்கு குண்டுவெடிப்பில் தொடர்புக் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், ஆனால் இவ்வழக்கில் அவரைகுற்றவாளியாக்கவில்லை எனவும் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் ஏ.டி.எஸ் கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தி விருந்தினர் மாளிகையில் நடந்த ரகசியக் கூட்டத்தில்தான் இந்திரேஷ் குமாரும், இதர ஆறு முக்கிய் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.

வெளியானது உண்மை மட்டுமே எனவும், இதனை அங்கீகரிக்க ஆர்.எஸ்.எஸ் தயாராக வேண்டுமெனவும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சிறிது காலம் கழிந்தால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பெயர்களும் அவர்களின் பங்கும் பின்னணியும் வெளிவரும். சத்தியம் வெளிவரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அசோக்கெலாட் தெரிவித்தார்.

அதேவேளையில், தனது பெயர் அரசியல் தூண்டுதலின் காரணமாகவே குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திரேஷ்குமார் தெரிவிக்கிறார்.

தேசத்துரோகிகளை(?) பாதுகாக்கும் அரசு, தேச விசுவாசிகளூக்கெதிராக(?) போர் புரிகிறது. அநீதிக்கெதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் இவ்வாறு இந்திரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்திரேஷ்குமாரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது. இத்தகையச் செய்திகளை சட்டரீதியாக எதிர்க் கொள்வோம் என ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவிக்கிறார்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தடை

உதகை, அக். 24: ஆர்எஸ்எஸ் நிறுவன தினத்தையொட்டி உதகையில் நடத்த திட்டமிட்டிருந்த அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 186 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) துவங்கியது விஜயதசமி தினத்தில் என்பதால் ஆண்டுதோறும் விஜயதசமியை ஒட்டி, அந்த அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் குன்னூரிலும், அதற்கு முந்தைய ஆண்டில் கோத்தகிரியிலும் இத்தகைய அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.

நடப்பாண்டுக்கான ஊர்வலத்தை ஞாயிற்றுக்கிழமையன்று உதகையில் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. உதகை மத்திய பேருந்து நிலைய வளாகத்திலிருந்து காந்தி மைதானத்தை வந்தடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுமென மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் என்.கே.கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார்.

ஆனால், ஊர்வலம் செல்ல அவர்கள் கேட்டிருந்த பாதையை ஒதுக்க காவல் துறையினர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், தடையை மீறி ஊர்வலத்தை நடத்துவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவித்திருந்ததால், நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பெரும் பரபரப்பு நிலவியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட போலீஸôரும், அதிவிரைவுப் படையினரும் குவிக்கப்பட்டனர். மத்திய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் உதகை வந்திருந்தனர். அனைவரும் சீருடைகளுடன் இருந்தனர். பிற்பகல் 2.30 மணி வரை காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் தடையை மீறி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர்.