தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

கிரண்பேடி மீது வழக்கு டெல்லி கோர்ட் உத்தரவு

புது டெல்லி, நவ. - 27 - முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையுடன் இணைந்து ஏமாற்றுதல் மற்றும் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் அமீத்பன்சால் டெல்லி போலீசின் குற்றப்பிரிவுக்கு இந்த உத்தரவை

நேட்டோ படை தாக்குதலில் 25 பாக்.வீரர்கள் பலி

பாகிஸ்தான் இராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலியாயினர். 

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தானில் `நேட்டோ' படையினர் முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் முகமது மலைப்பகுதியில் நேட்டோ படையின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி புகுந்தன. 

பின்னர் இராணுவ சோதனை சாவடியின்மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரியவில்லை. 

நக்ஸல் தலைவர் கிஷன்ஜியையும் வீழ்த்திய 'வீரப்பன் புகழ்' விஜயகுமார்!

சென்னை, நவ. 27-  சிறிது காலமாக பேசப்படாமல் இருந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமாரின் பெயர் மீண்டும் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. வீரப்பன் உள்ளிட்ட பலரை வீழ்த்திப் புகழ் பெற்ற தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபியான விஜயகுமார் தலைமையிலான சிஆர்பிஎப் படைதான் தற்போது மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியையும்

நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும்: ராசா


நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார்.

ஓடுபாதையில் தேங்கிய மழைநீர்:7 விமானங்கள் தாமதம்


மீனம்பாக்கம், நவம்பர் 26- சென்னையில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் 7 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னை, அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று கனத்த மழை பெய்ததால் விமான ஓடுபாதையில் மழைநீர் தேங்கிவிட்டது. இதன் காரணமாக,

எகிப்தில் இராணுவம் தோல்வி

கடந்த சில தினங்களாக எகிப்தில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் நேற்று வெள்ளி தொழுகைக்குப் பின்னர் மிகவும் பிரமாண்டமான பேரணியாக உருவெடுத்தது. எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் சுமார் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடி ஆர்பாட்டங்களை முன்னெடுத்தார்கள். ஒரு சர்வாதிகாரியை கலைத்துவிட்டு அவனை விட மோசமான சர்வாதிகாரியாக

குஜராத்: அத்வானியை எதிர்த்து போட்டியிட்ட திருநங்கை கொலை!


குஜராத் மாநிலத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த திருநங்கை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள லால் தர்வாஜா பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் அஜ்மிரி. 40 வயதான திருநங்கையான இவர், 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் தலைவராக உள்ளார்.

நேற்று அவர் நேரு பாலம் பகுதிக்குச் சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை

மும்பை கிரார்போர்ட் சந்தையில் தீ : 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்


மும்பையின் கிராவ்ஃபோர்ட் சந்தை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 500 க்கு மேற்பட்ட கடைகள் எரிந்துநாசமாகியுள்ளன.இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் தீ பற்றிய செய்தி அறிந்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வராததால், பொருட்சேதம் அதிகமாகியுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.