தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.11

கிரண்பேடி மீது வழக்கு டெல்லி கோர்ட் உத்தரவு

புது டெல்லி, நவ. - 27 - முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையுடன் இணைந்து ஏமாற்றுதல் மற்றும் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் அமீத்பன்சால் டெல்லி போலீசின் குற்றப்பிரிவுக்கு இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் தேவேந்திரசிங் கொடுத்த புகாரின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடி அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: