தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.1.11

ஜனவரி 4ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி

சென்னையில் ஒரு கோடி புத்தகங்களுடன் 34 ஆவது புத்தக கண் காட்சி 4ஆம் தேதி தொடங்குகிறது.
தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 34ஆவது சென்னை புத்தக கண் காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங் கிலோ இந்திய மேல் நிலைப்பள்ளியில் நடை பெறுகிறது. கண்காட்சி மற்றும் விற்பனை 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண் காட்சியை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. ஆர்.லட்சுமணன் தொடங்கி வைக்கிறார்.

பொற்கிழி
முதலமைச்சர் கலை ஞர் சங்கத்திற்கு வழங் கிய ரூ.1 கோடி நிதியில் ஏற்படுத்தப்பட்ட அறக் கட்டளை வைப்புத் தொகை மூலம் கிடைத்த வட்டியில் இருந்து 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. அந்தப் பொற்கிழியை மத்திய அமைச்சர் பிற்பகல் 2 மணி முதல்

புத்தக கண்காட்சி தினமும் பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். விடு முறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். கண்காட்சி 17ஆம் தேதி முடிய நடைபெற உள்ளது. 666 அரங்குகள் அமைக்கப்பட உள் ளன. 376 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. வருபவர்களுக்கு வசதி யாக சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், சிற் றுண்டி கூடங்களும், கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள் ளன. புத்தக கண்காட்சி யில் ஒரு கோடி புத்த கங்கள் இடம் பெறு கின்றன. புத்தகங் களுக்கு 10 சதவிகித தள் ளுபடி உண்டு. நுழைவுக் கட்டணம் ரூ.5 ஆனால் 12 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட் டணம் கிடையாது. ஆனால் அதற்கான இல வச அனுமதி சீட்டுகள் 5 லட்சம் அச்சடித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. வாசகர்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக 5 வாயில் கள் அமைக்கப்படுகின் றன. 5 பயணச்சீட்டு வழங் குமிடங்களும் திறக்கப் பட உள்ளன. குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவோர்க்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச் சிகள் பட்டிமன்றம், கருத் தரங்கு, இலக்கிய சொற் பொழிவு ஆகியவை நடை பெற உள்ளன.
பேச்சுப்போட்டி
பள்ளி மாணவர்களுக் கான பேச்சுப் போட்டி 7ஆம் தேதி காலை 10 மணிக்கு புரசைவாக்கம் அழகப்பா மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராணிமேரி கல்லூரியி லும் நடைபெற உள்ளது. போட்டிக்கான தலைப் புகள் அப்போதுதான் வழங்கப்படும்.
வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என்று வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆயிரம் ரூபாய் என்று கொடுக்கப்படும். இந்த பரிசு நூல்களாக வழங் கப்படும்.
ஓவியப்போட்டி
இவை தவிர 6 வயது முதல் 8 வயது உள்ள மாணவர்களுக்கும், 9 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கும், 13 முதல் 16 வயது உள்ள மாணவர்களுக்கும் ஓவியப்போட்டிகள் தனித்தனியாக நடத்தப் படும். இந்த போட்டிகள் 8ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை புத்தக கண்காட்சி வளாகத்தில் நடை பெறும்.
இந்தத் தகவலை தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் சேது சொக்கலிங்கம் தெரி வித்தார். பேட்டியின் போது செயலாளர் ராம லட்சுமணன், துணைத் தலைவர்கள் ஆர்.எஸ். சண்முகம், எம்.சுப்ர மணியம், இணைசெய லாளர் எஸ்.சண்முக நாதன், பொருளாளர் எஸ்.எஸ்.சாஜகான் ஆகியோர் உடன் இருந் தனர்.
ஜெகத்ரட்சகன் வழங்குகிறார்

ரஷிய விமானம் வெடித்து: 3 பயணிகள் பலி

ரஷியாவின் `கோகலி மாவியா ஏர்லைன்' என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சைபீரியாவின் சர்கட் நகர் விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோவுக்கு இன்று புறப்பட்டது.

அதில் 124 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் மீண்டும் தரை இறங்கியது. அப்போது சைபீரியாவின் சர்கட் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனி படர்ந்து கிடந்தது.

இதனால் நிலை குலைந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடி வெடித்து சிதறியது. முன்னதாக விமானம் தரையில் விழுந்து ஓடு தளத்தில் ஓடி வெடிக்கும் முன்பே மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.

தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகளை மீட்டனர். ஆனால் 3 பேர் மட்டும் உயிரிழந்தனர். மேலும் 43 பயணிகள் காயம் அடைந்தனர்.

எகிப்து தேவாலயத்தில் கார் குண்டு தாக்குதல்: 21 பேர் பலி


எகிப்து நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் பலியாயினர்.

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அங்கு உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புத்தாண்டையொட்டி நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது தேவாலயத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்தது.

இதை தொடர்ந்து மேலும் 2 கார் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் 21 பேர் அதே இடத்தில் பலியானதாகவும், மேலும் பலர் காயம் அடைந்தததாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி?


அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது.

நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன.

இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு தலைமைக்கு அனுப்பிய 2,50,000 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், "விக்கிலீக்ஸ்" இணைய தளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்துவிட்டது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ' வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நைஜீரியா: குண்டு-வெடிப்பு 30-பேர்-பலி


நைஜீரியாவில் மார்க்கெட் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலியானார்கள்.

நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருந்த்து.

அப்போது இராணுவ குடியிருப்புக்கு அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 30 பேர் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர அபுஜா நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன