தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.11

உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது - தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

கெய்ரோ,பிப்.19:சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்        டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில்

பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு: எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த இளவரசர் நியமனம்

மனாமா,கடந்த சில தினங்களாக பஹ்ரைனில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண நாட்டின் அனைத்து பிரிவினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு மன்னர் ஹமத், இளவரசர் ஸல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவை நியமித்துள்ளார்.
நேற்று பஹ்ரைன் தொலைக்காட்சியில் உரைநிகழ்த்திய மன்னர் ஹமத் தெரிவித்ததாவது; "எல்லா பிரிவைச் சார்ந்த குடிமக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இளவரசர் நாடு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்த துவங்குவார். எனது அனைத்து மக்களோடும், நமது நேசத்திற்குரிய நாட்டின் அனைத்து மக்களோடும் நான் கோரிக்கை விடுக்கிறேன் இளவரசருடன் உள்ளார்ந்த நேர்மையுடனும் உண்மையாகவும் ஒத்துழைக்கவும். இறைவன் நாடினால் பஹ்ரைனுக்கு இதனை சாதிக்க இயலும். நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் எல்லா குடிமக்களுக்கும் வெற்றிப்பெற வாழ்த்துகிறேன்." இவ்வாறு மன்னர் உரை நிகழ்த்தினார்.

மாத்யமம்


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மனு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாபர் மசூதியை இடித்த திரளான கரசேவகர்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படும் போது மேடையில் இருந்து பார்வையிட்ட பா.ஜனதா, சிவசேனா, விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ராஷ்டிரீய சுயம் சேவக் மற்றும்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, காஷ்மீருக்கு மாற்றம்


சென்னை, பிப். 19 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டு காலம் பணியாற்றியவர் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா. இவர், தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
இவர், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதியின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5


மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5


தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் சதாம் ஹுஸைனைப் பற்றிய "கொடுமையான" செய்திகளை கதை கதையாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன் செய்தியாளர் ஜுடித் மில்லர் என்பவர்தான் WMD எனப்படும் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapon of Mass Destruction) ஈராக்கில் இருப்பதாக பல சிறப்புக்

பெனசிர் கொலையாளிகளுக்கு முசரப் நேரடியாக உதவினார்


 இஸ்லாமாபாத், பெனசிர் பூட்டோ கொலையாளிகளுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசரப் நேரடியாக உதவினார் என்று விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பெனசிர் பூட்டோ கொலை வழக்கை எப்ஐஏ எனப்படும் பாகிஸ்தான் புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முசரப்பின் பெயரை சேர்க்க