சென்னை, பிப். 19 சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டு காலம் பணியாற்றியவர் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா. இவர், தற்போது ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.
இவர், அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதியின் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்க இருக்கும் இப்ராகிம் கலிபுல்லா, சில நாட்களில் அந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் 21-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 60 நீதிபதிகள் பணி இடங்களில், இப்ராகிம் கலிபுல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்ற பிறகு இங்கு உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆக குறையும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக