தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.11

இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் காலமானார்

செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்ட இதயம்
செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக்(artificial pacemaker), கண்டுபிடித்த வில்சன் கிரேட்பாட்ச் தனது 92வது வயதில் நேற்று நியூயோர்க்கில் காலமானார்.  இதயமுடுக்கி முதன்முதலாக 1960 ஆம் ஆண்டில் மனிதருக்குப் பொருத்தப்பட்டது. இதன் மூலம் இதயத் துடிப்பு ஒரே சீராக இயங்க வைக்கப்படுகிறது. தற்போது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனைப் பொருத்தி வருகின்றனர்.
கிரேட்பாட்ச் லிமிட்டெட் என்ற
இவரது நிறுவனம் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகளுக்கு மின்கலங்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகித்தது.

1983 ஆம் ஆண்டில் தொழில்நிலைப் பொறியாளர்களின் தேசிய மன்றம் கிரேட்பாட்சின் கண்டுபிடிப்பை ஐம்பதாண்டுகளில் 10 பெரும் பொறியியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அறிவித்தது. தனது கடைசிக் காலங்களில் கிரேட்பாட்ச் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார்.

முதலாவது வெற்றிகரமான செயற்கை இதயமுடுக்கி நியூயோர்க்கில் உள்ள பஃபல்லோ மருத்துவமனையில் பொருத்தப்பட்டது. 77 வயதான நோயாளி இதனைப் பொருத்தி 18 மாதங்கள் வரை உயிரோடிருந்தார்.

0 கருத்துகள்: