தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.11

மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது

புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக  ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஹரீஷ் யாதவ் என்ற மூசவீர்(35) இந்தூர் போலீசாரால் கைது
செய்யப்பட்டார்.  செப்டம்பர் 20ம் தேதி அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.
மோடியின் உண்ணாவிரத நாடக மேடையில் சில முஸ்லிம் பெயர்தாங்கி மௌலவிகள் மோடிக்கு தொப்பி அணிய முயற்சி செய்தனர். ஆனால் மோடி அதனை நிராகரித்து அவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இந்த நிகழ்வைக் கருப்பொருளாக வைத்துதான் ஹரீஷ் அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்.
குஜராத் இனப் படுகொலையைத் தலைமையேற்று நடத்திய மோடியை விமர்சித்து மண்டையோட்டுத் தொப்பியை அணிவிக்க முயற்சிப்பதாக இருந்தது அந்தக் கார்ட்டூன்.
அந்தக் கார்ட்டூன் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக பிரபாத் கிரண் ஆசிரியர் பிரகாஷ் புரோஹித் கூறினார்.  “எதிர்க்கக்கூடிய அளவுக்கு அந்தக் கார்ட்டூனில் ஒன்றும் இல்லை. பா.ஜ.க.வின் சிறுபான்மை அணி மட்டும்தான் அந்தக் கார்ட்டூனை எதிர்த்தது. காவிக் கட்சிக்காரர்கள் பத்திரிகைச் சுரந்திரத்திற்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

0 கருத்துகள்: