தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.11.10

ஈராக் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குவோம்: அல்கொய்தா மிரட்டல்

பாக்தாத், நவ. 4-
ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆலயத்துக்கு வந்திருந்தவர்களை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்து இருந்தனர். அமெரிக்க ராணுவம் மற்றும் ஈராக் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 58 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளும் உயிர் இழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகள் இணைய தளம் மூலம் ஒரு மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஈராக்கில் எகிப்தைச் சேர்ந்த காப்ட் கிறிஸ்தவ சபை முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகிறது. குறிப்பாக பெண்களை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகிறார்கள். இதற்காகவே தாக்குதல் நடத்தினோம்.
முஸ்லிம்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதை நிறுத்த வேண்டும். மேலும் கிறிஸ்தவர்களாக மாற்றி தங்கள் பிடியில் வைத்துள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
இல்லை என்றால் ஈராக்கில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் அவர்களது அமைப்பு கள் மீது இது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். அவர்கள் எங்கு பயணம் செய்தாலும் அங்கும் தாக்குதல் நடத்துவோம். அவர்கள் ரத்த ஆறுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.