தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.7.11

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்
மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

இனவெறி கட்டுரை எழுதிய அரசியல் கிருக்கன் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வலியுறுத்தல்

மும்பை, ஜூலை. 31-  இனவெறியை தூண்டும் விதமாக பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய வேண்டும் என்று மகாராஷ்ட்ரா சிறுபான்மையின ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் மும்பையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மும்பையிலிருந்து வெளிவரும் ஆங்கில

‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு


jayalalitha
சென்னை:மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 மத்திய அரசின் இந்த சட்ட மசோதா மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஜனநாயக விரோதமான இந்த சட்ட

இந்திய அரசால் ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்!


சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மத்திய அரசு பல நலத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றது. அவை பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெறும்.

அதன்பின் அத்திட்டங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு உரிய பயன்கள் கிடைக்குமா என்றால் அந்தத் திட்டங்கள் என்னவென்றே முஸ்லிம் சமுதாயத்திற்குத் தெரியாது.

அரசு அதிகாரிகளை அணுகி குறிப்பிட்ட திட்டம் குறித்து கேட்டால்

நான் என்ன அலங்கார பொம்மையா-ஹினா ரப்பானி கர்


லாகூர்: இந்திய பத்தரிக்கைகள் தன் ஆடை, அலங்காரத்தைப் பற்றி அதிகம் எழுதியதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கடுப்பாகியுள்ளார்.

பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர். அந்நாட்டின் பணம் படைத்த, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் பதவியேற்ற சில நாட்களில் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இலங்கைக்கான நிதியுதவி ரத்து: அமெரிக்கா முடிவு!!!

வாஷிங்டன்: இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது.

இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில்

30.7.11

சிரியா போராட்டக்காரர்களுக்கு அல்கொய்தா தலைவர் வேண்டுகோள்


சிரியாவில் அதிபர் பசீர் அல் ஆசாத் பதவி விலகக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரார்களுக்கு அல் கொய்தா தலைவர் அல் ஜவாகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக சமீபத்தில் பொறுப்பு ஏற்றுள்ள அல் ஜவாகிரி ஒரு வீடியோ கேசட்டை வெளியிட்டு இருக்கிறார். அல்கொய்தா இணையதளத்தில்

இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!


புதுடில்லி: ஆக்ராவில் அமைந்துள்ள, மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இது இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் சிறந்த கட்டிட கலைக்கு உதாரணாமாக திகழ்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தர மிக முக்கியமான காரணமாக தாஜ்மஹால் அமைந்துள்ளது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்பு: டெல்லியில் 144 தடையுத்தரவு

புதுடெல்லி, ஜூலை. 30-   காந்தியவாதி அன்னா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக டெல்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே அறிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முறியடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பாராளுமன்றப் பகுதிகளில் 144 பிரிவின்

108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??

உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை….
108 ஆம்புலன்ஸ்

29.7.11

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்க செயலாளர் எடியூரப்பா!


பெங்களூரு: பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ்

ஷார்ஜா:கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க 3.4 மில்லியன் திர்ஹம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


ஷார்ஜா:பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க வருகின்ற புதன்கிழமைக்குள் 3.4 மில்லியன் திர்ஹம்  நீதிமன்றத்தில் அளிக்க ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல் கிசைசில் உள்ள கிராண்ட் ஹோட்டலின் உரிமையாளர் S.P.சிங் இது பற்றி கூறுகையில் நீதிமன்றம் கூறியுள்ள மொத்த தொகையையும் கொலை

‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!! இந்தியா


விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான்
தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!

ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவியை அமெரிக்கா எதிர்க்கும்


7013054fc26100d73654dcf90879-grande
வாஷிங்டன்:பூரண ஐ.நா உறுப்பினர் பதவிக்கான ஃபலஸ்தீனின் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கும்.ஃபலஸ்தீனின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்பதால் இதனை எதிர்க்கப் போவதாக ஐ.நாவில் அமெரிக்க துணை தூதர் ரோஸ்மேரி டிகார்லொ தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: செப்டம்பரில் ஐ.நா பொது அவைக்கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில்

சமூக தொண்டருக்கு கொலை மிரட்ட​ல் விடுக்கும் காவல்துறை துணை ஆய்வாளர் – போ​லீஸ் உயர் அதிகாரியிட​ம் மனைவி புகார்


திருவிதாங்கோடு(கன்னியாகுமரி மாவட்டம்):காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் அப்பாவி மக்கள் கொடுமைகளை அனுபவிப்பது தமிழகத்தில் வழக்கமாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூகத் தொண்டரும், ஆட்டோ ஓட்டுநருமான பாபுல் ஹுதா என்பவர் மீது குமரி மாவட்டம் தக்கலை காவல்நிலைய காவல்துறையினர் பொய்வழக்கை புனைந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரது மனைவியையும் தொந்தரவுச் செய்து மிரட்டிவருகின்றனர்.

RSS வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கும் வீடியோ!


புதுடெல்லி: ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவவாதிகளின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்ற எனது அறிக்கையை சில பத்திரிகைகள் திரித்து வெளியிட்டன.

போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்ததற்கு லிபியா கண்டனம்


போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளதற்கு லிபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடாபி தலைமையிலான லிபியா அரசின் 8 தூதர்களை பிரிட்டனில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டதோடு, போராட்டக்காரர்களின் பிரதிநிதி ஒருவர் பிரிட்டனுக்கான லிபிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஒரே

ஆப்கான் கந்தஹார் நகரபிதா குண்டுத் தாக்குதலில் பலி


ஆப்கானின் கந்தஹார் நகரபிதா குலாம் ஹயிதர் ஹமீடி இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தஹாரில் உள்ள நகராட்சி மண்டபத்தில் வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

28.7.11

கஷ்மீர் பிரச்சனையில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு!


புது தில்லி: காஷ்மீர் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை

பள்ளிவாசல் தரைமட்டம்! விழுப்புரத்தில் அயோத்தி!!


விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள்

ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு புகழாரம் சூட்டும் நார்வே பயங்கரவாதி​யின் கொள்கை பிரகடனம் – அ​ம்பலமாகும் சர்வதேச பயங்கரவாதம்


8ef29476d6711aa5db7f247fb0f8eea3_full
புதுடெல்லி:நார்வேயில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, இளைஞர்கள் முகாமில் நுழைந்து 76 பேரை கூட்டுப் படுகொலை செய்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதியான ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது கொள்கை பிரகடன அறிக்கையில்(manifesto) இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் தேசீயவாதிகள் ஒன்றுப்பட்டு தற்போதைய ஜனநாயக அரசை வீழ்த்தாவிட்டால் இந்தியா அழிந்துபோகும் என ப்ரெவிக்

ப்ரெவிக்கின் யூனிஃபார்ம் பாட்ஜ் வாரணாசியில் டிசைன் செய்யப்பட்டுள்ளது



dce987a92e1ae925e1e4ee2104cf25a2_full
ஓஸ்லோ:நார்வே கூட்டுப் படுகொலையை நடத்திய வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் தனது இயக்கத்தின் யூனிஃபார்மில் அணியக்கூடிய பாட்ஜின் வடிவமைப்பை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து பெற்றுள்ளான்.
கடந்த ஆண்டு நார்வேயை சார்ந்த ஒருவருக்கு சாம்பிள்கள் அனுப்பிக் கொடுத்ததாக இந்தியன் ஆர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் அஸ்லம் அன்ஸாரி கூறியுள்ளார். இஸ்லாம்,

ஹிந்துத்துவாவை தப்பவைக்க நினைக்கும் புலனாய்வு துறைகள்!


மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திவரும் புலனாய்வு ஏஜன்சிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

புலனாய்வு ஏஜன்சிகளிடையே பிளவு தீவிர மடைந்துள்ளதை தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜன்சி குழுவினர் மும்பையிலிருந்து திரும்பிவிட்டனர்.

புலனாய்வு ஏஜன்சிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை எனக் குற்றஞ்சாட்டி என்.ஐ.ஏ குழு திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. 22 பேரின்

72 கோடீஸ்வரர்களின் அசாதாராண மரணம்


secret-millionaire
2003ஆம் ஆண்டில் இருந்து இந்த வருடம் வரை 72 சீன பெரும் கோடீஸ்வரர்கள் அசாதாரண மரணம் அடைந்துள்ளனர் அல்லது இளம் வயதில் இறந்துள்ளனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கின்றது.
இந்த 72 பேரும் தனித்தனியே ஏறத்தாழ 80கோடிக்களுக்கு மேல் சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர். 2003ல் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர்களில் 15 பேர்கள் மற்றவர்களால்

முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பா?


15swamy
புதுடெல்லி:அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

சவூதிஅரேபியாவின் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக ஆம்னஸ்டி


Amnesty-International
லண்டன்:சவூதி அரேபியா தயாராக்கி வரும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மக்களின் வாயை மூடுவதற்கான முயற்சி என ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கூறியுள்ளது. சட்டத்தின் வரைவை பி.பி.சி வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகளில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த சவூதிஅரேபியா அரசின் முயற்சி என ஆம்னஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. விசாரணை இல்லாமலேயே நீண்டகாலம்

27.7.11

பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி டெல்லி வந்தார்


பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கர் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சரத் சபர்வால், அங்குள்ள இந்திய தூதரகத்தின் இணைச் செயலாளர் ஒய்.கே.சின்கா, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
 
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஹினா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

நார்வே பயங்கரம்: இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் தாக்குதலை நடத்திய வாலிபர்!


ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் நரசிம்மராவுக்கு பங்குண்டு – மணிசங்கர் அய்யர்


manisangariyar
புதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6ம் தேதி நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர் அன்றைய பிரதமராக பதவி வகித்த நரசிம்மராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய இரண்டாவது புத்தகமான ’24, Akbar Road’ வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ’காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் மணிசங்கர் அய்யர்.
அப்பொழுது அவர் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது



malcolm_x_0061
நியூயார்க்:அமெரிக்காவின் குடியுரிமை ஆர்வலராக பணியாற்றிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அவருடைய மரணத்தைக் குறித்த மர்மங்களை வெளிப்படுத்துமா? – மால்கம் எக்ஸின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.
1965-ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் உரையாற்றும் வேளையில் மால்கம் எக்ஸ் துப்பாக்கி குண்டுக்கு

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை பா.ஜ.கவை மிரளச் செய்துள்ளது – ப.சிதம்பரம்


0
புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை தீவிரமடைவதால் பா.ஜ.க சில அமைச்சர்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது: வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெடிக்குண்டு நிர்மாணித்தது,

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி 29ஆம் தி.மு.க போராட்டம்

சென்னை, ஜூலை. 27-   சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் வரும் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் அறப்போர் கிளர்ச்சி நடத்துவதற்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்படியும் எப்பாடுபட்டாவது எத்தகைய நீதிமன்றங்களில் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற

ராம்தேவ் உதவியாளரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது!


புதுடில்லி: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பால கிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்


d973e17a-1c6c-4d91-8234-26f311de671f_S_secvpf
புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ

சிறிலங்காவின் கொலைக்களம் ஒபாமா, ஹிலாரிக்கும் கிடைத்தது


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தின் பிரதிகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

26.7.11

அணு விஞ்ஞானியின் படுகொலையின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் – ஈரான்


டெஹ்ரான்:சனிக்கிழமை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட ஈரானின் அணு விஞ்ஞானி ரஸாயியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் செயல்பட்டுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்தை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லிர்ஜானி ’அமெரிக்க-சியோனிச தீவிரவாதம்’ என குறிப்பிட்டார். இத்தகைய செய்திகளின் எதிர்விளைவுகளை குறித்து அவர்கள் சிந்திக்கவேண்டும் என அவர் கூறினார்.

பெல்ஜியத்தில் முகத்திரைக்கு தடை அமுலுக்கு வந்தது


belgium-niqab
ப்ரஸ்ஸல்ஸ்:ஐரோப்பிய நாடுகளை வாட்டிவரும் இஸ்லாமியஃபோபியா பிரான்சை அடுத்து பெல்ஜியத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இதன் விளைவு அந்நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பாதுகாப்பதற்காக அணியும் முகத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை கடந்த சனிக்கிழமை அமுலுக்கு வந்தது.
இத்தடை மத சுதந்திரம் மற்றும்

பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் – ஆ.ராசா


raja_jpg
புதுடெல்லி:பிரதமரின் முன்னிலையிலேயே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அனுமதி வழங்கினேன் என ஆ.ராசா டெல்லியில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.நீதிபதி ஷைனி முன்பாக அவர் இதனை தெரிவித்தார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் சிக்கி ஆ.ராசா உள்பட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யெமனில் குண்டுவெடிப்பு:மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் பலி


66-xmc7I_St_55
யெமன்:அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப்பெற்று வரும் யெமன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட எட்டுபேர் மரணமடைந்தனர்.
இரண்டு அதிகாரிகள், மேஜர், லெஃப்டினண்ட் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். யெமனின் கடலோர பிரதேசமான

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!


அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக

25.7.11

சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் வஸ்தன்வி ராஜினாமா


moulana_gulam
தேவ்பந்த்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை பாராட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி கலாசாலையின் துணைவேந்தர் முஹம்மது வஸ்தன்வி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
குஜராத்தில் முஸ்லிம்கள்

எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லா​ன் விளையாட்டி​ல் தங்கம் வென்றார்


Aya Medani
கெய்ரோ:எகிப்தின் ஆயா மெதானி ஆஃப்ரிக்கன் பெண்டாத்லான் விளையாட்டில் பெண்களுக்கான போட்டியில் தங்கம் வென்றார். இப்போட்டிகள் எகிப்தின் அலெக்ஸான்ட்ரியா நகரில் நடந்து வருகின்றது. இதன் மூலம் இலண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி அடைகிறார் ஆயா.
இதே போன்று ஆண்களுக்கான