தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.7.11

மும்பை குண்டுவெடிப்பு: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்

நியூயார்க், ஜூலை. 15-   மும்பையில் நேற்று மாலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகரில் 3 இடங்களில் நேற்று மாலை 6.50 மணி தொடங்கி அடுத்தடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு

மும்பை தொடர் குண்டுவெடிப்பு:வட்டமிடும் ஊகங்கள்

மும்பை:மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வழக்கம்போல் சில ஊடகங்கள் போலீஸ் தரப்பு கூறியதாக லஷ்கர் மற்றும் இந்திய முஜாஹிதீன் அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என ஊகங்களை வெளியிட்டுள்ளன. இதைப்போல இன்னும் பல ஊகங்களும் பரவி வருகின்றன.

மும்பையில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு:21 பேர் மரணம்

pakistan_1945870c
மும்பை/புதுடெல்லி:மும்பையில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நகரத்தில் நெரிசல் மிகுந்த தாதர், ஓபரா ஹவுஸ், தெற்கு மும்பையில் ஜவேரி பஸார் ஆகிய இடங்களில் நேற்று மாலை 6.45 க்கும் 7.05 மணிக்கும் இடையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் கடுமையாக இருப்பதால் மரண எண்ணிக்கை உயரும் என போலீஸ் அறிவித்துள்ளது.

இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுப்பேன் – தென் சூடான் ஜனாதிபதியின் மகன் பேட்டி

sssssssssssss
கடந்த ஜூலை 09ம் தேதி அன்று சூடானிலிருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்ட தென் சூடானின் ஜனாதிபதி ஸல்வா கீரின் மகன்களுள் ஒருவர் கடந்த வெள்ளியன்று புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பெருந்திரளான மக்கள் ஜும்ஆவுக்காக குழுமியிருந்த தலைநகர் கார்ட்டூமின் பள்ளிவாயல் ஒன்றிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதாக அந்நாட்டின் செய்திப் பத்திரிகையான அல் இன்திபாஹா செய்தி வெளியிட்டுள்ளது.

பி. ஜெய்னுல் ஆபிதீன் நடத்தும் மதநல்லிணக்க நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ் நாட்டில் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத் தைப்பற்றி பரவி இருக்கும் தவறான கருத்துக் களை போக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை போக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 
இதன் ஒரு பகுதியாக

பொறுப்பற்ற போலீஸும் பொறுப்பான ராஜா முகம்மதும்!

மேலூர்: ரோட்டை கடந்தவரை காரை ஏற்றி கொன்று விட்டு தப்பிய நபரை, தனி ஒரு நபராக மூன்று மாதம் தேடி கண்டுபிடித்து, மேலூர் கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்தார் இறந்து போனவரின் மகன் ராஜா முகமது. மதுரை மேலூர் அருகில் உள்ளது தும்பைப்பட்டி ஊராட்சி. இவ்வூரைச் சேர்ந்த மீராலெப்பை, 55. சென்னை புரசைவாக்கத்தில் ரெடிமேட் கடை நடத்தி வந்தார். 

கத்தாஃபி பதவி விலக தயாராக இருக்கிறார்-பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர்

800_ap_french_pm_110712
பாரிஸ்:லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி பதவி விலக தயாராக இருப்பதாக பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே தெரிவித்துள்ளார். கத்தாஃபி பதவி விலக தயாராக இருப்பதை தெரிவிக்க அவருடைய தூதர்கள் துருக்கி, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது.

போலீசில் ஆஜராக கலாநிதி மாறனுக்கு அவகாசம்

சேலத்தை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் செல்வராஜ்.இவர் சென்னை கே.கே.நகர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சன்பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, என்னிடம், தீராத விளையாட்டு பிள்ளை படத்துக்கு சேலம் வினியோக உரிமை தருவதாக கூறி 83 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வாங்கினார். அதன் பிறகு சேலத்தில் அந்த படத்தை வெளியிடுவதற்கான உரிமை தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே சக்சேனா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, சக்சேனா கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது “சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நான் என் விருப்பப்படி செயல்படவில்லை. நிர்வாகம் சொன்னபடிதான் நடந்து கொண்டேன்” என்று கூறியதாக தெரிகிறது.

தெலங்கானா சிக்கலில் காங்கிரஸ்…தெம்பாகும் கருணாநிதி!

தெலங்கானா சிக்கலால் எம்.பி.க்களின் பலத்தை இழந்துவிடுவோமா என்ற அச்சத்தில் உழன்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, 18 எம்.பி.க்களை வைத்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2ஜி வழக்கில் திமுகவை அடுத்தடுத்து நெருக்கடியில் தள்ளிய காங்கிரஸ் கட்சியை வகையாக பழி தீர்க்க, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.
ஆ.ராசா, கனிமொழியை தொடர்ந்து