பாரிஸ்:லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி பதவி விலக தயாராக இருப்பதாக பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே தெரிவித்துள்ளார். கத்தாஃபி பதவி விலக தயாராக இருப்பதை தெரிவிக்க அவருடைய தூதர்கள் துருக்கி, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது.
லிபியா எதிர்ப்பாளர்கள் கத்தாஃபியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என நேற்று முன்தினம் பிரான்சு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியிருந்தார். நெருக்கடியை சமாளிக்க கத்தாஃபி பதவியிலிருந்து விலகி, நகரங்களிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறவேண்டும் என பிரான்சு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இப்பொழுது ஒப்பந்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. முறையான பேச்சுவார்த்தை இதுவரை துவங்கவில்லை என ஜுப்பா தெரிவித்துள்ளார்.அதேவேளையில் லிபியா பிரச்சனைகளுக்கு பரிகாரம் காண ரஷ்யாவின் தலைமையிலான மத்தியஸ்த குழுவை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா கத்தாஃபி ராஜினாமா செய்யாத பரிகார முயற்சிகளுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பாரக் ஒபாமா ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவை அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக