தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.1.11

ஜனவரி 27 போராட்டம் : மாலைமலர் செய்தி


பாபர் மசூதி வழக்கு தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு:
சென்னை, ஜன. 27-
பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார்.
நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சட்டத்துக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு என்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
எனவே உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்ப்பை மறுபரிசீலனைக்கு தானாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாநில துணைத் தலைவர் ரகமத்துல்லா உள்பட ஏராளமான பிரமுகர்களும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பஸ்-வேன்களில் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் ஐகோர்ட்டை நோக்கி முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
27-1-2010 மாலை மலர்

ஜனவரி 27 போராட்டம் – பத்திரிக்கை அறிக்கை ! தமிழ் , ஆங்கிலம்


புகைப்படம் மற்றும் செய்தி விரைவில் இன்ஷா அல்லாஹ்..
பாபர் மசூதி வழக்கில் சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வௌளம்
அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு சர்வதேச நீதி நெறிமுறைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் உரிமையியல் சட்டத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட அநியாயத் தீர்ப்பு என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதயாமும் கருதுகிறது. மத உணர்வுக்கு அப்பாற்பட்ட நியாவான்களும் இந்தக் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. இது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.
குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப்பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்தமாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ராமருக்கு கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை.
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதை பார்ப்பதுதான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில்தான் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்கு தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத்தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம்தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.
1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?
இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல்கள் செய்து சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இதில் தீர்ப்பு அளிக்க முடியாது என்று கூறி வந்த இந்துத்துவா இயக்கங்கள் அமைதி காக்குமாறு வழக்கத்துக்கு மாறாக அறிக்கைகள் விட்டது இந்தத் தீர்ப்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நீதிமன்றங்களை நாம் மதிப்பது அவர்கள் சட்டப்படி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான். அந்த நபர்களுக்காக அல்ல. சட்டத்தின்படி அளிக்கப்படாத இந்தத் தீர்ப்பை ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி உலக முஸ்லிம் சமுதாயமும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சட்ட விரோதத் தீர்ரபை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் சமுதாயத்தின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம். உச்ச நீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்த அநீதியான தீர்ப்பை மறு பரிசீனைக்கு தானாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதில் மாநில பொதுச்செயலாளா ஆ.அப்துல் ஹமீது அவாகள் தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவா .ஜைனுல் ஆபிதீன் அவாகள் கண்டன உரையாற்றினாகள்.காலை 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் மாலை   மணிக்கு முடிந்தது.
இப்படிக்கு
ஆ.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவார்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்   செய்தி:www.tntj.net    

எகிப்து:தீவிரமடையும் மக்கள் போராட்டம்


கெய்ரோ,ஜன.27:துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி முஸ்லிம் நாடுகளில் பசியாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

அல்ஜீரியா, யெமன், எகிப்து,ஜோர்டான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அமெரிக்காவின் கைப்பாவையான ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி எகிப்திய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்ற பிரதான எதிர்கட்சியினருக்கு தடை, தேர்தல்களில் முறைகேடு, அரசுக்கெதிராக போராட்டம் நடத்த தடை, சமூக இணையதளங்களுக்கு தடை என ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் துனீசியா நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் அந்நாட்டு அதிபர் பின் அலி நாட்டைவிட்டு வெளியேறியது எகிப்திய மக்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எகிப்தின் கெய்ரோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், எகிப்திய தலைநகரான கெய்ரோவில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே நடந்த போராட்டத்தில் ஒரு போலீஸ்காரரும், போராட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என presstv தெரிவிக்கிறது.

போராட்டக்காரர்கள் காக்டைல் பாட்டில்களை துறைமுக நகரமான சூயஸில் அரசு கட்டிடங்களின் மீது வீசினர். ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக நேரில் கண்டவர் தெரிவிக்கிறார்.

ஹுஸ்னி முபாரக்கின் கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் வெறுத்துப்போன ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் அந்நாட்டு வீதிகளில் இறங்கி அரசுத் தடையையும் மீறி போராடத் துவங்கியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தியதோடு போலீசார் மீது கல் வீசினர். போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக கலவரத் தடுப்புப் போலீசார் எகிப்து நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில், வட ஆப்பிரிக்க நாடுகள், அதிலும் குறிப்பாக எகிப்து அங்கு ஆளும் அரசுகள் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் ஜனநாயக காலக்கட்டத்தை நோக்கி செல்வதாக கூறுகிறார்.

பிரஸ் டிவிக்கு பேட்டியளித்த வட ஆப்பிரிக்க அரசியல் ஆய்வாளர் நீ அகுட்டே தெரிவிக்கையில், துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட உத்வேகத்தை அளித்துள்ளது என கூறியுள்ளார்.

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறும் காலம் ஆச்சரியப்படும் வகையில் விரைவில் வரும் என கூறுகிறார் நீ அகுட்டே.

புதன்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் போராட்டத்தை நடத்தினர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் ஒரேகுரலில்,மக்கள் சர்வாதிகார ஆட்சி பதவி விலகவேண்டும் என விரும்புவதாக கோஷங்களை எழுப்பினர்.

'முபாரக்கே வெளியேறு!' 'ரொட்டி,விடுதலை,கண்ணியம்’, 'நாங்கள் துனீசியாவை பின்பற்றுவோம்' என முழக்கமிட்டனர்.

இதற்கிடையே, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் அக்பார் அல் அரப் என்ற இணையதளம், ஹுஸ்னி முபாரக்கிற்கு அடுத்ததாக பதவி வகிக்க காத்திருக்கும் அவரது மகன் ஜமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

source:presstv நன்றி: பாலைவணதூது

தீவிரவாதிகள் தாக்குதல்: ரஷியாவில் மீண்டும் குண்டு வெடித்தது; 4 பேர் பலி


மாஸ்கோ, ஜன 27-
 
ரஷியாவில் உள்ள டோமோதேவ் டோவோ விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை தீவரவாதிகள் மனித குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் குண்டு வெடித்து உள்ளது.
 
டாஜெய்டன் மாநிலத்தில் உள்ள கேசவ்பர்ட் நகரில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டை வைத்து வெடிக்க செய்தனர். இதில் 4 பேர் உயிர் இழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
 
இதே நகரில் கடந்த மாதம் 1-ந்தேதியும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 4 பேர் பலியானார்கள்.இந்த பகுதியில் செசன்ய தீவிரவாதிகள் ஆதிக்கம் உண்டு. எனவே அவர்கள் தான் தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ரஷியாவில் அடுத்தடுத்து நடந்து வரும் குண்டு வெடிப்பு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தடையை மீறி போராட்டம் – பி.ஜே பேட்டி: தினமணி செய்தி


தடையை மீறி போராட்டம் பி.ஜே பேட்டி: தினமணி செய்தி
பாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.
இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
அதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும்.
இந்தப் பேரணிக்கு காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.
25-1-11 தினமணி

62வது குடியரசு தினம்: நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

டெல்லி: இந்தியாவின் 62வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டது.

இன்று இந்தியாவின் 62வது குடியரசு தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்கள் களை கட்டியிருந்தன.

டெல்லியில் குடியரசு தின விழா வழக்கம் போல கண்கவர் அணிவகுப்புடன் நடந்தேறியது. காலை 9.45 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாகேட்டில் உள்ள போர் வீரர் நினைவிடமான அமர் ஜவானில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் டாக்டர் ஹாஜி சுசிலோ பம்பாங் யூத்யோனாவுடன் வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் மேஜர் லய்ஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா (மறைவுக்குப் பின்னர்) விருதினை அவர் வழங்கினார். அதன் பின்னர் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது.குடியரசு தின விழாவையொட்டி ராஜ்பாத்மற்றும் டெல்லி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தியாவின் படை பலத்தை பறை சாற்றும் வகையிலான மாடல்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. மேலும் டி-90 டாங்குகள், பிரம்மோஸ் லாஞ்சர், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவை இடம் பெற்றன.

இந்தியக் கடற்படை சார்பில் ஐஎன்எஸ் விராத், தல்வார் கிலோ கிளாஸ் நீர்மூழ்கி, மிக் 29-கே ஆகியவற்றின் மாடல்கள் அணிவகுத்து வந்தன.

மேலும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பெருமைகளை சித்தரிக்கும் அலங்கார ரதங்கள், பல்வேறு துறைகளின் ரதங்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.

துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து:

இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருந்தார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்திய மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் நாட்டை குடியரசாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் நாம் எத்தனையோ வெற்றிகள் அடைந்துள்ளோம்.

வெற்றிகள் பெற்றிருந்தாலும் நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவு இன்னும் முழுதாக நிறைவேறவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்கள் இன்னும் வறுமை, பசி, நோய், அறியாமையால் வாடுகின்றனர்.

இந்திய குடியரசின் அடிப்படைக் கொள்ளைகளான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும். இனி வரவிருக்கும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வு பெற நான் அனைத்து குடிமக்களுக்கையும் வாழ்த்துகிறேன் என்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்-தேசியக் கொடியேற்றினார் பர்னாலா

சென்னை: தமிழகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் இன்று 62வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் குடியரசு தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.

சென்னை மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவ, மாணவியரின் நடனம், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அவற்றை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியின்போது ஆர். விவேகானந்தன், ஜே.ரவி, எஸ்.ராஜகோபால், ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அண்ணா வீர விருதினை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

மேலும், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும் முதல்வர் பரிசுகளை அளித்தார்.

மாவட்டத் தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்

லால் சவுக்கில் கொடியேற்ற நிகழ்ச்சி-பாஜகவினர் கைது

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர், லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றும் முயற்சியில் ஈடுபட்ட பாஜகவினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால் அதை மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இணைந்து முறியடித்து விட்டன.

பாஜகவினரின் முயற்சி பலிக்காத வகையில், ஸ்ரீநகர் எல்லை முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் லால் சவுக்கை நோக்கி தேசியக் கொடியேற்றுடன் வந்த பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 15 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில் இவர்கள் திடீரென மெளலானா ஆசாத் சாலையில், தோன்றி விறுவிறுவென லால் சவுக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். கைகளில் தேசியக் கொடியுடனும், கோஷமிட்டபடியும் இவர்கள் சென்றனர். இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூத்த பாஜக துணைத் தலைவர் சோபி யூசுப்பும் ஒருவர். 

மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறிய தேவ்பந்த் துணைவேந்தர் ராஜினாமா!

மோடிக்கு ஆதரவாகக் கருத்து கூறியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேவ்பந்த தாருல் உலூம் மதரஸாவின் துணை வேந்தராகப் புதிததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மெளலானா குலாம் முஹம்மது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் என்ற மத்ரஸாவின் துணை வேந்தராக குஜராத்தைச் சேர்ந்த மெளலானா குலாம் முஹம்மது வஸ்தன்வி என்பவர் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடியின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதில்லை; மாறாக மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் குஜராத் முஸ்லிம்கள் பலனடைகின்றனர் என மெளலானா குலாம் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவியில் இருந்து மெளலானா குலாமை நீக்க வேண்டும் என்று தாருல் உலூம் மாணவர்கள் மற்றும் ஆசியரிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மெளலானா குலாம் தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாருல் உலூமின் ஆலோசனைக் குழுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது. ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து நான் பதவி விலகுவேன் என மெளலானா குலாம் செவ்வாய்க் கிழமையன்று கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

20 உறுப்பினர்களைக் கொண்ட தாருல் உலூமின் ஆலோசனைக் குழு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கூடியபோது மெளலானா குலாமை துணை வேந்தராகத் தேர்ந்தெடுத்தது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது 17 பேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் 14 பேர் மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

மோடி குறித்து மெளலானா குலாம் கூறிய கருத்துகள் பிரச்சனை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோத்ரா கலவரத்திற்குப் பின் மோடிக்கு தான் நற்சான்றிதழ் வழங்கவில்லை என்று மெளலானா குலாம் மறுத்துள்ளார்