தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.11

உலகின் அதிவேக விமானம் பரிசோதனையின் போது மாயம்


உலகில் இதுவரை அறியப்பட்டவற்றில், அதிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் விமானம் (ஒலி விமானம்) நேற்றைய
பரிசோதனை நடவடிக்கையின் போது காணாமல் போய்விட்டதாக அமெரிக்க பெண்டகன் விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.  ஒலியின் 20 மடங்கு வேகத்தில், பயணிக்கும் திறன் கொண்ட இவ்விமானம் இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்ட போதே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?


ஆமதாபாத், ஆக. 12: 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு அந்த மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தெரியவந்திருக்கிறது.

குஜராத் காவல்துறையில் டிஐஜி அந்தஸ்தில் பணிபுரியும் ராகுல் சர்மா என்கிற ஐபிஎஸ் அதிகாரி, அங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை வியாழக்கிழமை

பாகிஸ்தான் தொலைதொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

பெய்ஜிங், ஆக. 13-   சீனாவின் தொழில்நுட்ப வழிமுறை, நிதி ஆதார உதவிகளுடன் உருவாகிய தொலை தொடர்பு செயற்கைகோளை பாகிஸ்தான் விண்ணிற்கு அனுப்பியது.
பாக்சாட்- 1 ஆர் என்ற இந்த செயற்கைகோள் பாகிஸ்தான் நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு சீனா ஆலோசனையும், நிதி உதவியும் செய்திருக்கிறது.

தந்தையைக் கொன்ற பாகிஸ்தான் விமானியை மன்னித்த இந்திய விமானியின் மகள்

புதுடெல்லி, ஆக. 13-  1965-ம் ஆண்டு போரின்போது குஜராத் முதல்வர் சென்ற விமானத்தை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் விமானி 46 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்டார். அவரை மன்னித்துவிட்டதாக அந்த விமானத்தை ஓட்டிய விமானியின் மகள் பரீதா சிங் தெரிவித்துள்ளார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருக்கையில் அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேத்தா, அவரது மனைவி சரோஜ்பென் மேத்தா, 3 அரசு அதிகாரிகள், விமானப் பணியாளர், குஜராத் சமாச்சார் நிருபர், ஏர் இந்தியா விமானி ஜகாங்கீர் என்ஜினியர் ஆகியோர் சென்ற விமானம்