தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.5.11

பாகிஸ்தானில் உஸாமாவின் விளம்பர சுவரொட்டிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனை


osama
இஸ்லாமாபாத்: செப்டம்பர் 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3000-கும் மேலானோர் பலியாகினர். அன்று முதல் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் தீவிரவாதி பட்டியலில் இருந்த, அச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் அல் கொய்தாவின் தலைவர் உஸாமா பின் லாடின் கடந்த 2-ஆம் தேதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலால் மரணம் அடைந்ததையொட்டி  ஒசாமாவின் விளம்பர சுவரொட்டிகள் மிக அதிக எண்ணிக்கையில் விற்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்துல்நாஸர்மஃதனி:வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு மீதான புதிய பெஞ்சின் விசாரணை


T-Naseer
புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை புதிய பெஞ்சின் முன்னிலையில் வருகிற வெள்ளிக்கிழமை வரவிருக்கிறது.
முன்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் நீதிபதிகளுக்கிடையே உருவான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து புதிய பெஞ்சிற்கு வழக்கு விடப்பட்டது. ஜாமீன் மனுவில் தீர்மானம் எடுக்க

துபாயில் நபிகளாரை அவமதித்த முதன்மை ஆசிரியருக்கு கல்தா


gems-education
துபாய்:முஹம்மது நபி(ஸல்..) அவர்களை அவமதித்த பள்ளிக்கூட முதல்வரை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. கேரள மாநிலத்தைச் சார்ந்த கிறிஸ்தவரான ஸன்னி வர்க்கி என்பவருக்கு சொந்தமான ஜெம்ஸ் பள்ளிக்கூட நிர்வாகம் முதன்மை ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.
பள்ளிக்கூடத்தில் இஸ்லாமிய நடைமுறைகளை பாடம் எடுக்கும் ஆசிரியருக்கான நேர்முகத்தேர்வுக் குழு முன்பாக இந்தியாவை

எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டது அமெரிக்கா: பின்லேடனின் 4-வது மகன் ஒமர் பின்லேடன் கடும் கண்டனம்


லண்டன்,  ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பின்லேடனின் 4-வது மகன் ஒமர் பின்லேடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சமீப காலமாக வளைகுடா நாட்டில் தங்கியுள்ள அவர் ஒரு இணையதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாணவி சந்தியா மாநிலத்தில் முதலிடம்


சென்னை, பிற மொழியை மொழிப்பாடமாக எடுத்து படித்ததில், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி சந்தியா 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்கிறார்.
பிளஸ்-2 தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் அல்லாத பிற மொழியை ஒரு மொழிப்பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில், மாநிலத்திலேயே முதல் இடத்தை சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவி கே.சந்தியா பிடித்தார்.

காவி மன்ற தீர்ப்பும்!! நீதிமன்ற தடையும்!!

புதுடெல்லி:  பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடம் கொடுக்கவேண்டும்.

இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகரா என்ற அமைப்பிடம் கொடுக்க வேண்டும்.

பாப்ரி மஸ்ஜித்:அலகபாத் நீதிமன்றத்தீர்ப்பிற்கு தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பெரும் ஆதரவு


ayodhya_verdict
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த பாகப்பிரிவினை தீர்ப்பிற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
வரலாற்று உண்மைகளையும், சொத்துரிமை ஆவணங்களையும் பரிசோதிக்காமல்

பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம்: கிலானி குற்றச்சாட்டு!


இஸ்லாமாபாத், மே.11பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றம் சாட்டியுள்ளார். பின்லேடனை நாங்கள் மறைத்து வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதுபற்றி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமகோபாலனின் வாரிசுகளால் எடுக்கப்பட்ட வானம் திரைப்படம்!!

 திருநெல்வேலி: நடிகர் சிம்பு நடித்து வெளிவந்துள்ள வானம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக.,வினர் நெல்லை கமிஷனர் வரதராஜீடம் நேற்று மனு அளித்தனர்.
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள “வானம்’ திரைப்படத்தில் மன்சூர்கான் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் தீவிரவாதியாகவும், திருக்குர்ஆன் படிப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சி முஸ்லிம் மதத்தினர் அனைவரும் தீவிரவாதி என்பது போல் சித்தரிக்கப் பட்டுள்ளது மனவேதனையை அளிக்கிறது. அதுபோல் நசீர் என்ற நடிகர் அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்.