தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.11

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு-கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு குண்டுள் வெடித்தன. ரம்ஜான் மாதத் தொழுகையின்போது அங்குள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் டிபன் பாக்ஸ்களில் குண்டுகள் வைக்கப்ப்டிருந்தன. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்துக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டு வைத்த மூன்று பேரில் பிரவீன் முத்தலிக்கும் ஒருவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற இருவரான ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகியோர் இதுவரை பிடிபடாமல் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தலிக் மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டவிரோத செயல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முத்தலிக்கையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் ஆவர்.

திட்டமிட்டபடி எகிப்தின் தலைநகரில்10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பிரவாகம்

கெய்ரோ,பிப்.1:எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக்கோரி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இன்று காலை முதல் மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி படையெடுத்து வந்தனர்.கட்டுங்கடங்காத மக்கள் கூட்டத்தினால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
                             இதைப்போன்று அலெக்ஸாண்ட்ரியாவிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே எகிப்தின் பழம்பெரும் கட்சியான, வஃப்தின் தலைமையில் முக்கிய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய கூட்டணிக்கு முயன்று வருகின்றனர். முபாரக்கிற்கு அதிகாரத்தில் நீடிக்க தார்மீகரீதியாக உரிமையில்லை என வஃப்த் கட்சி கூறுகிறது.

அதேவேளையில், ஹுஸ்னி முபாரக்குடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என இஸ்லாமிய கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் அறிவித்துள்ளது.

போராட்டம் தீவிரமடைந்த பொழுதும், பதவி விலகமாட்டேன் என அடம்பிடிக்கிறார் முபாரக்.

செய்தி:மாத்யமம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்,11 வது மாநில பொதுக்குழு


கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை
சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம் மற்றும் 7 செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயிலூல் ஆபிதின் கூறியதாவது:தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.
இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழுஅமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு, இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்போம். கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு முறையாக கிடைக்கவில்லை  என்றும் அதனை கண்கானிக்க அரசு குழு அமைதிடவேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலமைச்சரிடமும் துணை முதல்வரிடமும் நீண்ட நாட்களாக கோறி வந்தது.அது தற்போது நிறைவேரியுள்ளதால் அதற்காக நன்றி தெரிவித்து கொண்டார்கள்.  

ஹோஸ்னி முபாரக்கின் மனைவி, மகன் லண்டனுக்கு ஓடியதாக தகவல்

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி மற்றும் மகன் தனி விமானம் மூலம் ரகசியமாக லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டதாக எகிப்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

82 வயதாகும் முபாரக் கடந்த 30 வருடங்களாக எகிப்தை தனது பிடியில் வைத்துள்ளார். தனக்குப் பின்னர் தனது மகன் கமால் முபாரக்கை அதிபராக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அங்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

முபாரக் குடும்பம், கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது முபாரக்குக்கு எதிர்ப்பு பல மடங்காக அதிகரித்து வருவதால் நாட்ட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளோடு லண்னுக்கு தப்பி ஓடி விட்டதாக அக்பர் அல் அராப் என்ற எகிப்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல முபாரக்கின் மனைவியும் லண்டனுக்குப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கமால் முபாரக்கும், அவரது மனைவி, குழந்தையும், தனியார் விமானம் மூலம் லண்டனுக்குப் போய் விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெட்டி பெட்டியாக ஏராளமான பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவை பணமா என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் வெளியேற உத்தரவு

இதற்கிடையே, போராட்டம் வலுத்து வருவதைத் தொடர்ந்து எகிப்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களை வெளியேறுமாறு அவர்கள் சார்ந்த நாடுகளின் அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக ஒவ்வொரு நாடும் சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

கனடா, துருக்கி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்களது நாட்டவர்கள் எகிப்தில் இருக்க வேண்டாம் என எச்சரிக்கை அறிவுரையை பிறப்பித்துள்ளன. இவர்களை தங்களது விமானங்கள் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி சொந்த நாட்டுக்கு அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

எகிப்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்களிடம் பணம் பறிக்கும் ஏர் இந்தியா

மும்பை: பற்றி எரியும் எகிப்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வரும் பயணிகளிடம் பெருமளவிலான பணத்தை டிக்கெட் கட்டணமாக ஏர் இந்தியா பறிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம்வெடித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதட்டம்நிலவுகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு குடிமக்களை பத்திரமாக அங்கிருந்து மீட்டு வருகின்றன.

பெரும்பாலான நாடுகள் இலவசமாகவே அவர்களை விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமோ, வந்த வரைக்கும் லாபம் என்பது போல பெரும் பணத்தை தருமாறு கூறி இந்திய பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எகிப்திலிருந்து இந்தியா வரும் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் பயணிக்க வேண்டுமானால் ரூ. 45,000 முதல் ரூ. 55,000 வரை பறிக்கிறார்களாம். இதைக் கொடுக்காவிட்டால் விமானம் ஏற முடியாது என்றும் கட் அன்ட் ரைட்டாக சொல்கிறார்களாம்.

அங்கிருந்து மும்பைக்கு வந்து சேர்ந்த பயணிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு இது.

ஆனால் இதை நியாயப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா. இது மீட்புப் பணி அல்ல என்று மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாக இருந்தால் கட்டணம் குறைவாக இருக்கும், ஏன் கட்டணமே இல்லாமல் கூட இருக்கும். ஆனால் மீட்புப் பணியாக இதை அரசு அறிவிக்காததால், இந்தக் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும் என்று தெனாவெட்டாக கூறியுள்ளது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா மட்டுமல்லாமல், எகிப்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், எகிப்து ஏர், கத்தார் ஏர்வேஸ், ஓமன் ஏர் உள்ளிட்டவற்றுக்குச் சென்றால் அவர்களும் வழக்கத்தை விட அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்களாம்.

இந்தக் கட்டணத்தையும் கூட ரொக்கமாக கொடுத்தால்தான் டிக்கெட் போட்டு விமானத்தில் ஏற அனுமதிக்கிறார்களாம்.

இதற்கிடையே, இதுவரை 2 சிறப்பு விமானங்களை எகிப்துக்கு இயக்கிய ஏர் இந்தியா நிறுவனம் மேலும் ஒரு சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாம். அது சரி, காசைக் கறப்பதாக இருந்தால் எத்தனை சிறப்பு விமானத்தையும் கூட இயக்கலாமே.

எகிப்து:10 லட்சம்பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி

கெய்ரோ,ஜன.31:எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக்கோரி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வரும் மக்கள் திரள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.

இன்று (01/02/2011) கெய்ரோவில் பத்துலட்சம் பேர் கலந்துக் கொள்ளும் பிரம்மாண்டபேரணிக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்துபோன சூழலில் போராட்டத்தை எதிர்கொள்ளவியலாமல் ராணுவம் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளிலும் ராணுவம் தடையை ஏற்படுத்தியிருந்த போதிலும் ஐம்பதினாயிரம் பேர் இன்றும் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடினர்.

ராணுவத்தினரையும், இரவு ஊரடங்கு உத்தரவையும் மக்கள் பொருட்படுத்தவேயில்லை.

இதற்கிடையே போராட்டத்தை எதிர்கொள்ளவியலாமல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறிய போலீசாரிடம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு உத்தரவிட்ட பொழுதிலும் போலீஸ் இதுவரை களமிறங்கவில்லை. பெரிய டாங்குகளுடன் ராணுவத்தினர் ரோந்து வந்தபொழுதிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தடுக்க முனையவில்லை. ஹுஸ்னி முபாரக் காலம் தாழ்த்தாமல் பதவியை ராஜினாமாச் செய்யவேண்டுமென நோபல் பரிசு பெற்ற அல்பராதி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:மாத்யமம்


முஸ்லிம்களிடையே நீதி கிடைக்கவில்லை என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது - திக் விஜய்சிங்

போபால்,ஜன.31:பல்வேறு காரணங்களால் முஸ்லிம்களிடையே நீதி கிடைக்கவில்லை என்ற எண்ணம் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் இந்தியா முஸ்லிம்களுக்கும் சொந்தமானதுதான் என்ற நம்பிக்கையை முஸ்லிம்களுக்கு வலுப்படுத்தும் பொறுப்பு ஹிந்துக்களுக்கு உள்ளது.

இந்தியாவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற உணர்வை முஸ்லிம்களிடையே உருவாக்க வேண்டுமென திக் விஜய் சிங் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் - குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு

ஜம்முகஷ்மீர்,ஜன.31:ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் குலாம் நபி ஆசாத்.

ஜம்முவில் மகாத்மா காந்திஜியின் அறுபத்தி மூன்றாவது நினைவு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர்.

மகாத்மா காந்திஜி கொலைக்கு பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ்தான் என குற்றஞ்சாட்டிய ஆசாத் அவ்வியக்கத்திற்கு பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்பிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு மத வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் உச்சத்தில் கேட்கிறது.

மலேகான், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பங்குள்ளது என அதன் உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு குறைந்தது பத்துவருடமாவது ஆகும் என ஆசாத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரகசிய புலனாய்வு ஏஜன்சிகளும் மதசார்பற்றத் தன்மையை பேணிக்காப்பதுக் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த ஆசாத், ஹிந்து சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகள்தான் பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தி:மாத்யமம்