தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.11

அமைச்சர் மரணத்துக்கு காரணமான லாரி மேற்கு வங்காளத்தில் சிக்கியது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
சென்னை : அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்கு காரணமான சரக்கு லாரியை,  மேற்கு வங்க மாநிலத்தில்  தமிழக சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை ஓட்டிய டிரைவர், ஆந்திராவில் பிடிபட்டார். திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியம்பிச்சை. மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். 13ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 16ம் தேதி அமைச்சராக பதவி ஏற்றார்.

ரயிலில் பெண்களுக்கு கட்டண சலுகை: ஜுன் 1 தேதி முதல் பாதி பணம் கொடுத்தால் போதும்

புதுதில்லி,  (டிஎன்எஸ்) 58 வயது பெண்களுக்க ரயிலில் பயணம் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 1ஆம் தேதி முதல் அவர்கள் ரயிலில் பயணம் செய்ய பாதி கட்டணம் கொடுத்தால் போதும். எனினும் ஜுன் 1ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், இந்த கட்டண சலுகை கிடையாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

2011-12-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய அமைச்சர் மம்தா பானர்ஜி ஏராளமான

தமிழக புதிய ஆட்சியின் முதல் கோணல்: விடை தருவது யார் ?


ஆரவரமான வெற்றியுடன் தமிழகத்தில் கோட்டையை பிடித்திருக்கும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைகிறதா? இந்த கேள்வி தான் தற்போது சமநிலையில் இருந்து அரசியலை பார்க்கும் அனைவரின் மனதிலும் எழுந்துள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கு காரணம், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கிறோம் என்ற அரசின் அறிவிப்பு. ஏன்? எதற்கு? இதில் அடுத்த நடவடிக்கை என்ன? என்று அடுத்தடுத்து இயல்பாகவே கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஆனால்

இலவச அரிசி திட்டம் : ஜூன் 1ம் திகதி முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைக்கிறார்



 ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் ஜூன் 1ம் திகதி முதல் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தால் இந்த அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சராக ஜெயலலிதா கடந்த 16-ந்தேதி பதவி ஏற்றதும் 7 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கிய உத்தரவு இலவச அரிசி வழங்கும் திட்டமாகும். அரிசி பெற தகுதி உடைய அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படும்

கனிமொழி ஜாமீன் உயர்நீதிமன்றம் நிறுத்திவைப்பு


2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை சிபிஐ நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கியது.

ஆப்கனில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கேட்டது நேட்டோ


தென்-மேற்கு ஆப்கானிஸ்தானில் விமானத்தாக்குதல் ஒன்றில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆப்கனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பொதுமக்களின் உயிரிழப்பை தடுப்பதற்குத்தான் நேட்டோ அதிகபட்ச

நடிகர் மோகன்லாலும், துபாய் புர்ஜ் கலிஃபா உல்லாச வீடும்!!

உலகின் மிக உயரமான கட்டிடமாகிய (துபாய் நாட்டில் உள்ள) புர்ஜ் கலிஃபா அடுக்குமாடி,

இந்த குடியிருப்பில் மூன்றரை கோடி ரூபாயில் வீடு வாங்கியுள்ளார் மலையாள நடிகர் மோகன்லால்.

கடந்த வாரம் தனது 51 வது பிறந்தநாளை நண்பர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். தனக்கு தானே பிறந்தநாள் பரிசளித்துக் கொள்ள விரும்பினார்.

துபாயில் புர்ஜ் கலிஃபா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்தார்.
முதலில் துபாய் சென்று வீட்டை

வெள்ளை துண்டுக்கு மாறும் கருணாநிதி: குருபெயர்ச்சியால் திடீர் மாற்றம்


குருபெயர்ச்சி சாதகமில்லாமல் போனதால், மஞ்சள் நிறத்தில் இருந்து, அடிக்கடி வெள்ளை துண்டுக்கு கருணாநிதி மாறி வருகிறார். ஆரம்பம் முதல் கறுப்பு துண்டு அணிந்த கருணாநிதி, ஐந்தாண்டுகளுக்கு மேலாக மஞ்சள் துண்டுக்கு மாறினார். “கழுத்து பகுதியில் அதிக வலி ஏற்படுவதால், கனமான மஞ்சள் துண்டு அணிந்தால் கழுத்து பகுதியில் வெப்பம் ஏற்படும். வலியை அது கட்டுப்படுத்தும் என, மருத்துவர்கள் ஆலோசனைப்படி துண்டு மாற்றம் நடந்தது’ என, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.
“கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார்’ என, ஆன்மிக பெரியோர் கூறி வந்தனர். முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மஞ்சள் துண்டை அவர் தவிர்த்தது இல்லை. தஞ்சாவூரில் இரண்டாண்டுகளுக்கு