தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.10.11

ஆர் எஸ் எஸ் - பாஜக வின் அடுத்த நாடகம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்து-திக்விஜய்சிங்


ஊழல் எதிர்ப்பு வேடம்போடும் ஆர் எஸ் எஸ் - பாஜக கட்சியினரின் அடுத்த நகர்வு, 'மூன்றாம் திட்டமாக' அநேகமாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வைத்தே அரங்கேறக்கூடும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டில் சம்பவித்த பல பயங்கரவாதச் செயல்களின் பின்ணணியில் சங்பரிவாரங்களின் முகம் வெளிப்பட ஆரம்பித்ததும், அதை மறக்கடிக்க வேண்டியே இப்படி ஓர் ஊழல் எதிர்ப்பு நாடகம் ஆடப்படுகிறது" என்றார் திக்விஜய்சிங.

சவுதிக்கு புதிய முடிக்குரிய இளவரசர்

உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியாவின் அடுத்த முடிக்குரிய இளவரசராக தற்போதைய உள்நாட்டு அமைச்சரும், அரச குடும்ப வாரீசுமான இளவரசர் நயீப் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 22ம் திகதி அமெரிக்காவில் புற்று நோய் காரணமாக மரணமடைந்த 86 வயது சவுதி சுல்தானுடைய இடத்தில் 78 வயதுடைய நயீப் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது சவுதி மன்னராக இருக்கும் அப்துல்லா நோய்வாய்ப்பட்டுள்ளார்,

சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்



தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.

கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம்.

இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப்

துபாய்: முதலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியருக்கு மரணதண்டனை?


துபாய்: சம்பளம் தராத முதலாளியை கத்தியால் குத்திக் கொன்ற இந்தியருக்கு மரணதண்டனை?

சுமார் 45,000 திர்ஹம்கள் சம்பள பாக்கி தராத காரணத்தால் தன் முதலாளியை சுத்தியலால் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்த இந்தியர் ஒருவருக்கு துபாய்  நீதிமன்றம் முதல் விசாரணை

கடாபி குடும்பம் நேட்டோவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்று போகிறது

நேட்டோ விமானங்கள் லிபியாவில் நடாத்திய தாக்குதல்கள் சர்வதேச போர்க்குற்றங்களுக்கு இணையானவை என்று கடாபி குடும்பம் தெரிவித்துள்ளது. கடாபியின் மரணம் நேட்டோவின் தவறான இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன் வைக்க இருப்பதாக கடாபி குடும்பத்தின் சார்பில் வாதாடும் வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் கடாபி கொல்லப்பட்ட முறை ஒளிநாடாவாக வெளி வந்துள்ளது.

ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் செல்கிறார்! - குழுவிலிருந்து விலகிய ராஜிந்தர் சிங் விமர்சனம்


அன்னா ஹசாரே தன் குறிக்கோளிலிருந்து விலகிச் சென்று கொண்டிருப்பதாக அவரது குழுவிலிருந்து சமீபத்தில் விலகிய ராஜிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
வலுவான ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம், போராட்டம் என பரபரப்பு கிளப்பியவர் அன்னா ஹசாரே. இவரது குழுவுக்கு டீம் அன்னா என்று பெயரிட்டுள்ளனர்.

டேனிஸ் படைகள் லிபியாவில் இருந்து ஒரு வாரத்தில் வெளியேறும்

நேட்டோவின் வேண்டுதலை ஏற்று லிபியாவில் குண்டு வீசச் சென்ற டேனிஸ் விமானங்களும், விமானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் டென்மார்க் திரும்பிவிட வேண்டுமென டேனிஸ் படைத்துறை அமைச்சர் நிக் காக்கருப் தெரிவித்தார். முதலாவதாக விமானங்கள் டென்மார்க் நோக்கி பறப்பெடுக்க வேண்டும், அதைத் தொடர்ந்து மற்றயவர்கள் வந்து சேர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

கடாபியை கொன்றவர் தண்டிக்கப்படுவார் சிறீலங்காவுக்கு சவுக்கடி !


கடாபி கொல்லப்பட்ட முறை கண்டிக்கத்தக்க செயல் என்று உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன. தமிழரை கொன்ற சிங்கள இராணுவத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை தேசிய கொள்கை போலக் கொண்ட சிறீலங்கா அரசு கூட கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தது. இப்போது லிபியாவின் உயர்மட்ட அரச ஆயம்

ஆட்கொல்லி நீரிழிவு நோய்! 7 செகண்டுக்கு ஒருவர் மரணிக்கின்றனர்!!


உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது.

நீரிழிவு நோய் தொடர்பிலும் அதன் வகை தொடர்பிலும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் நாம் அறிவோம்.

இந்நிலையில் சர்வதேச நீரிழிவு