தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.1.11

எகிப்திலே தொடர்ந்து நடபெற்றுக்கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் புரட்ச்சி!!! அரசாங்கத்தைக் கலைத்தார் எகிப்து ஜனாதிபதி _

எகிப்திலே தொடர்ந்து நான்காவது நாளாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப் பட்டுள்ளனர். வெள்ளிகிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் வெள்ளமெனத் திரள ஆரம்பித்திருந்தனர். அவர்களுக்கும் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசாருக்கும் இடையே மோதல்கள் எழுந்துள்ளன. கெய்ரோவிற்கு சற்று வெளியே அமைந்துள்ள கீஸா பகுதியில் கலகக் கட்டுப்பாட்டுப் பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியும் தண்ணீர்ப் பாய்ச்சி அடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.

நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான சூயெஸ்ஸிலும் கலவரங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அங்கே வியாழக்கிழமை நடந்த கலவரங்களின்போது மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
தவிர கெய்ரோவின் மத்திய பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் மூண்டது. துறைமுக நகரமான அலெக்ஸாந்திரியாவிலும், இஸ்மாயிலியா, சினாய் போன்ற இடங்களிலும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர் குழுக்கள் என்று தெரிகிறது. நாட்டில் வேகமாகப் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி ஆகியவற்றால் விரக்தி அடைந்திருப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்களில் எகிப்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சி இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அமைப்பு கலந்துகொள்ளவில்லை. ஆனால் இனி தாங்களும் ஆர்ப்பாட்டங்களில் இறங்க எண்ணங்கொண்டுள்ளதாக இவர்களும் அறிவித்துள்ளனர். டுனீஷியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் கண்டதால் எகிப்திலும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில்
இறங்கியுள்ளனர் எனச் சொல்லலாம்             இதேநேரம் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.  கடைசி செய்தி: எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால்; அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார். 


அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே திருவோம்: அசோக் சிங்கால் மண்டைகன கொக்கரிப்பு

காஞ்சிபுரம், ஜன. 28: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்தார். காஞ்சிபுரம் கும்பாபிஷேக விழாவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியது: கடந்த சில மாதங்களுக்கு முன், கோவாவில் நடைபெற்ற இந்து சமய மாநாட்டில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.

சிந்திக்க :இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி கொண்டு போகாமல் விட மாட்டார்கள் போல. இப்படித்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததும் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து போக காரணமாக இருந்தார்கள். இப்ப பாபர் மசூதி அதை தொடர்ந்து காசி, மதுரா மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 2500 மசூதிகளை உடைப்போம் என்று சொல்லி இன்னும் எத்தனை கலவரங்களை நடத்த போகிறார்களோ இந்த பாசிச ஹிந்துவா பயங்கரவாதிகள். நினைத்தாலே மிகவும் பயமாக இருக்கு

சர்ச்சுகள் மீதான தாக்குதல்:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பரிசுத்தமானவர்கள் என கமிஷன் நற்சான்றிதழ்

பெங்களூர்,ஜன:2008 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆளுங்கட்சியான பா.ஜ.கவுக்கு, சங்க்பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது.

நேற்று கர்நாடகா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்தான் கமிஷன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு 'சுத்தமானவர்கள்' என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.

சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே அதாவது, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஒரு நபர் கமிஷனை பா.ஜ.க அரசு நியமித்தது.

இக்கமிஷன் வெள்ளிக்கிழமை கர்நாடகா பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ள முக்கியக் கருத்துக்கள்:

பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் மாவட்டங்கள், குறிப்பாக மங்களூர் மற்றும் தாவணகெரே நகரங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது உண்மை. எல்லாத் தாக்குதல் சம்பவங்களும் தற்செயலாக அல்லது விபத்தாக நேர்ந்ததல்ல.

சில சம்பவங்கள் பல ஆண்டுகளாக நிலவிவரும் அடிப்படைவாதத்தின் திட்டமிட்ட மதத் தாக்குதலாகும். மங்களூரில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்த இயலாது. இது கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவங்களில் அசல் ஹிந்துக்களின் நேரடி அல்லது மறைமுக பங்களிப்பு இல்லை. இச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் போலீஸார் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இத் தாக்குதல் சம்பவங்களில் அரசியல்வாதிகள், பாஜக, சங்பரிவார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருந்துள்ளதாக கிறிஸ்தவ மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இச் சம்பவத்தை அரசியலாக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் கமிஷன் முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விதத்திலான பிரசுரங்களும், மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகளும்தான் இத்தாக்குதல்களுக்கு காரணம் எனக்கூறி தாக்குதலை நியாயபடுத்தியுள்ளது சோமசேகர கமிஷன்.

மதமாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் இக்கமிஷன் அரசுக்கு பரிந்துரைச் செய்துள்ளது.

அறிக்கையில் முரண்பாடு- முன்னாள் மத்திய அமைச்சர்: தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் நீதிபதி சோமசேகர் கமிஷனின் அறிக்கையில் முரண்பாடு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பூஜாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தேவாலயங்களின் மீது தாக்குதல் நடந்த பிறகு அது குறித்து பஜ்ரங் தள பொதுச்செயலாளர் மகேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார். இத் தாக்குதலுக்கு போலீஸாரின் ஆதரவும் இருந்தது என ஆரம்ப கட்ட விசாரணையில் நீதிபதி சோமசேகர் தெரிவித்திருந்தார்.

தற்போது இறுதி அறிக்கையில் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பூஜாரி தெரிவித்துள்ளார்.


ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் - உளவுத்துறை, பாதுகாப்புத்துறை ஏஜன்சிகள் - தொடர்புகள் குறித்து விசாரணை தேவை - கருத்தரங்கில் கோரிக்கை

புதுடெல்லி,ஜன.29:பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் ஒருங்கிணைந்து டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்புகள் வெளியான சூழலில் இந்தியாவில் பாதுகாப்பு ஏஜன்சிகள், உளவுத்துறை ஏஜன்சிகள் ஆகியவற்றில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

குண்டுவெடிப்புகளில் இதுவரை பாதுகாப்பு ஏஜன்சிகள் விசாரணையை திசைதிருப்பிக் கொண்டிருந்தன என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இச்சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சி.பி.எம்.பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அரசியல் பிரமுகர்களும், பிரபல மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற இக்கருத்தரங்கில் இத்தகையதொரு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம்களைக் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், அபினவ்பாரத், வி.ஹெச்.பி, பா.ஜ.க, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுடன் உளவுத்துறை, பாதுகாப்பு ஏஜன்சிகள், போலீஸ் அதிகாரிகள், அதிகாரவர்க்கத்தினர், ராணுவத்தினர் ஆகியோருக்கான தொடர்புகளைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அப்பாவிகள் அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களைக் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக ஆதரவளிப்பவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் நிரபராதிகளை சிக்கவைத்து சித்திரவதைச் செய்து அவர்களை நிர்பந்தப்படுத்தி பொய் வாக்குமூலங்களை வாங்கிய அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவர்களுக்கு வழங்கிய பதவிகளையும், பதக்கங்களையும் பறிக்கவேண்டும்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் விடுதலைச் செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்ற நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து கேள்வி எழுப்பும் ஆந்திர அரசின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பொய்வழக்குகள் சுமத்தப்பட்டதால் மனோரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மாநில அரசுகள் மன்னிப்புக் கோரவேண்டும்.

பயங்கரவாத வழக்குகளில் ஆஜராகமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றிய பார் கவுன்சில் நடவடிக்கையை இக்கருத்தரங்கு கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கெதிராக பொய்ச் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் பங்கினையும் இக்கருத்தரங்கம் கண்டிக்கிறது.

புலனாய்வு ஏஜன்சிகள் ஆதாரங்கள் என போலியாக முன்வைக்கும் காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடக் கூடாது என ஊடகங்களை இக்கருத்தரங்கம் வேண்டிக் கொள்கிறது.

இக்கருத்தரங்கில் அமீத் சென் குப்தா, ஆஷிஷ் கேதான், சித்தரஞ்சன் சிங், ஃபராஹ் நக்வி, இஃப்திகார் கிலானி, பிரசாந்த் பூஷன், சத்ய சிவராம், சீமா முஸ்தஃபா, சுபாஷ் கட்டாடே, சுரேஷ் கைர்னார், தருண் தேஜ்பால், பிருந்தா க்ரோவர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


அல்ஜஸீரா வெளியிட்ட ரகசிய ஆவணங்கள்: ஃபலஸ்தீன் ஆணையம் வெளிநாட்டு உதவியை கோருகிறது

ரமல்லா,ஜன.29:உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான பைத்துல் முகத்தஸ் என்றழைக்கப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா உட்பட கிழக்கு ஜெருசலத்தின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க ஃபலஸ்தீன் ஆணையம் ஒப்பந்த மேற்கொண்ட தகவல்களைக் குறித்த ஆவணங்களை சமீபத்தில் அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்நிலையில் தங்களது சாயம் வெளுத்துப்போன ஃபலஸ்தீன் ஆணையம் இதுத்தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது.

பிரிட்டீஷ் ரகசிய புலனாய்வு அதிகாரி, அல்ஜஸீராவில் பணியாற்றும் அமெரிக்க குடிமகன், பிரஞ்சுநாட்டு குடிமகன் ஆகியோரை விசாரிக்கத்தான் ஃபலஸ்தீன் ஆணையம் அந்நாடுகளின் உதவியை நாடியுள்ளது. இதனை ஃபலஸ்தீன் ஆணைய மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் தெரிவித்தார். இம்மூன்று பேரும் தவறு செய்யவில்லை எனினும், விசாரணை குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டுமென அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


சவூதி அரேபியா:ஜித்தாவில் பெருவெள்ளம் - 4 பேர் மரணம் - கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம்

ஜித்தா,ஜன.29:கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெருமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த 17 ஆண்டுகளுக்கிடையே கடுமையான மழை கடந்த புதன்கிழமை ஜித்தாவில் பெய்தது. இதனால் ஏற்பட்ட விபத்துக்களில் 4 பேர் மரணித்தனர். முக்கிய சாலைகளெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி நதிபோல் காட்சியளித்தன. இதனால் மக்கள் வீடுகளிலும், பள்ளிக்கூடங்கள், கடைகளில் ஒதுங்கினர்.

வியாழக்கிழமை கால நிலை மாறினாலும் மக்களின் வாழ்க்கை சாதாரணகதிக்கு மாற இன்னும் சில தினங்கள் ஆகலாம். மூன்று மணிநேரத்தில் 111 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது.

 மழைத் துவங்கி சில மணிநேரங்களுக்குள்ளாகவே ஃபலஸ்தீன் தெரு, ஹாயில், மதீனா சாலை, வாலி அல் அஹத் தெரு, ஷரஃபியா ஆகிய பகுதிகள் உட்பட நகரத்தின் முக்கிய பகுதிகளெல்லாம் வெள்ளத்தில் சிக்கியது. இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் இரவில் பள்ளிக்கூடங்களிலும், அதிகாரிகள் ஏற்பாடுச்செய்த தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டனர். வியாழக்கிழமை காலையில்தான் பல மாணவர்களும் வீடு திரும்பினர்.

புதன் கிழமையிலிருந்து நகரத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் தொடர்பு பாதிக்கப்பட்டிருந்தது. துயர்துடைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், சாதாரண வாழ்க்கை வெகுவிரைவில் புனரமைக்கவும் நியூயார்க்கில் அறுவை சிகிட்சையை முடித்துவிட்டு மொரோக்கோ நாட்டு காஸாபிளாங்காவில் ஓய்வெடுக்கும் சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:மாத்யமம்


மொடாஸா குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள்தான் - என்.ஐ.ஏ

புதுடெல்லி,ஜன.29:கடந்த 2008 ஆம் ஆண்டு மொடாஸா குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுவைத்த ஹிந்து பயங்கரவாதிகள்தான் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.

மொடாஸாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோர்தான் என ஏற்கனவே குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா என்.ஐ.ஏவிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததை அஸிமானந்தா தெரிவித்ததாக என்.ஐ.ஏ கூறுகிறது.

குஜராத் மாநிலம் மொடாஸாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டான். 10 பேருக்கு காயமேற்பட்டது. ஈகைப் பெருநாளின் முந்திய தினம் இரவு பொருட்களை வாங்குவதற்காக சுகா பஸாரில் முஸ்லிம்களின் கூட்டம் அதிகமாக இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.

மொடாஸாவில் ஹிந்து ஜாக்ரதி சமிதியின் தலைவர்களான சியாம் ஸாஹூ, திலீப் நகர், சிவநாராயண் சிங், தர்மேந்திரா பைராகி ஆகியோரின் உதவியுடன் டாங்கேயும், கல்சங்கராவும் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக அஸிமானந்தா தெரிவித்தார். இவர்களெல்லாம் அப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாவர். இவர்களுடன் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையால் கைதுச் செய்யப்பட்ட லோகேஷ் சர்மாவுக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக அஸிமானந்தா என்.ஐ.ஏவிடம் தெரிவித்துள்ளான்.

குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான டாங்கே, கல்சங்கரா, அமீத் ஆகியோரின் புகைப்படங்களை அஸிமானந்தா அடையாளம் கண்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனே குஜராத் போலீஸ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்து சித்திரவதைச் செய்தபொழுதும் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கு முடங்கிப்போனது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்