தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.7.12

சிரியாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் : சீனா, ரஷ்யா மீண்டும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின


சிரியாவுக்கு எதிராக ஐ.நா சபை கொண்டுவரவிருந்த பொருளாதார தடை தீர்மானத்தை, ரஷ்யா மற்றும் சீ னா மீண்டும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படு த்தி நிராகரித்துள்ளன. சிரிய அதிபர் பசார் அல் அசாத் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதையும், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தாவிடி ல் பொருளாதார தடைகளை அங்கு அமல்படுத்துவ து தொடர்பில் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்ட து. இந்தியா உட்பட 11 நாடுகள்

சவூதி பெண்களுக்கு சிகை அங்காரம் செய்த அழகுக்கலை நிபுணருக்கு தண்டனை


சவூதி அரேபியாவிலுள்ள பெண்களின் வீடுகளுக்கு இரகசியமாக விஜயம் செய் து அவர்களுக்கு கேச அலங்காரம் மற்று ம் ஒப்பனை அலங்காரம் என்பவற்றை மேற்கொண்ட அழகுக்கலை நிபுணர் ஒ ருவருக்கு 200 கசையடிகள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளி த்துள்ளது.பச்சை குத்தும் நிபுணர் என பிரபலம் பெற்ற மேற்படி லெபனானிய நபருக்கு பெண்களுக்கு பச்சை குத்திய குற்றச்சாட்டில்

சிரிய அதிபர் தலைமறைவு இல்லை. புதிய ராணுவ அமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத், ராணுவ அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் நேற்று கலந்து கொண்டார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், டமாஸ்கஸ் நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு மைய தலைமையகத்தின் மீது, தற்கொலைப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில், ராணுவ அமைச்சர் தாவூத் ரஜிஹாவும், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் மைத்துனர் அசெப் ஷாகத்தும்கொல்லப்பட்டனர்.

26 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக சரிவைச் சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்.


இணையதள விளம்பர வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சரிவை சந்தித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மைக்‌ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தங்கள் நிறுவனம் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள்அல்லது 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் பேட்மேன் பிரிமியர் ஷோ திரையரங்கில் துப்பாக்கிச்சூடு : 12 பேர் பலி


அமெரிக்காவின் டென்வார் நகரின் சினிமா திரையர ங்கு ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய கண் மூடித்தனமான தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.அ ண்மையில் திரைக்கு வந்த பேட்மேன் நள்ளிரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 50 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி தாரி அருகிலிருந்த கார் பார்க் ஒன்றில் வைத்து, ரிஃ பிள்,

மனிதனை உயிருடன் தின்னும் மீனை கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசு. சீன அரசு அறிவிப்பு.


மனிதனை தின்னும் மீனை உயிருடனோ சாகடித்தோ பிடித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ளது லியுஜியாங் ஆறு. இங்கு மனிதனை தின்னும் மீன்கள் (பிரானா) இருப்பது தெரிய வந்துளது. தென் அமெரிக்க கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் ஏராளமாக உள்ளன. மனிதனை தின்னும் இந்த வகை மீன்கள், லியுஜியாங் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேரை கடந்த வாரம் தாக்கி உள்ளது.இந்த மீன்கள், ஆற்றுக்குள் இறங்கும் மனிதர்களின் சதைகளை அப்படியே