தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.11

குஜராத் கலவரம்: 31 பேருக்கு ஆயுள் தண்டனை


குஜராத் மாநிலம் சர்தார்புரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தில், சர்தார்புரா பகுதியில் 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணை

சிமி தொடர்பு:பொய் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை


பெங்களூர்:இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன்(சிமி) தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பெல்காமில் பதிவுச்செய்யப்பட்ட 2 வழக்குகளில் 11 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலைச்செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்ட இவ்வழக்கில் பெல்காம் அமர்வு

சதாம் உசேனின் மல,ஜல கூடத்துடன் நாடு திரும்பும் அமெரிக்கப் படைகள்


அமெரிக்கப்படைகள் ஈராக் போருக்காக புறப்பட்டு அணு குண்டை தேடிப்பிடித்தா, இல்லை உயிரியல் பயோ ஆயுதங்களை கண்டு பிடித்ததா என்ற கேள்வி முடிவடைந்துவிட்டது. இப்போது ஈராக் சென்ற நினைவுகளின் ஓரங்கமாக சதாம் உசேன் பாவித்த மலசல(கக்கூஸ்) கூடத்தை பிடுங்கிக் கொண்டு அமெரிக்கா செல்லவுள்ளார்கள்.

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்

புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.

ஆசியா முழுவதும் உளவுத் துறையை பரப்பி வருகிறது இஸ்ரேல்


mostofi20111107193557920
தெஹ்ரான்: இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இஸ்ரேலில் உள்ள டெல் அவிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது

பின்லேடனை கொன்றதை போல பாக். அணுஆயுதங்களை அமெரிக்காவால் அழிக்க முடியாது: முஷரப்


பின்லேடனை அதிரடியாக தாக்கி கொன்றதை போல, பாகிஸ்தான் அணுஆயுதங்களை அமெரிக்காவால் அழிக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்து இருக்கிறார்.பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்க உளவு நிறுவனம் கண்டுபிடித்து அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அவரை சுட்டுக்கொன்றதை போல அமெரிக்க ராணுவம்

தமிழகத்தில் மின் பற்றாக்குறை 2016 வரை நீடிக்கும்: மின்வாரியம் தகவல்


2015-16 வரை தமிழகம் மின் பற்றாக்குறை மாநிலமாகவே திகழும் என்று தமிழக மின்வாரியம் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம) அரசுக்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனமின் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,

மைக்கேல் ஜாக்சனை கொலை செய்தது அவரது குடும்ப டாக்டர்தான்: அமெரிக்க கோர்ட் தீர்ப்பு


மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மறைவிற்கு, அவரது குடும்ப டாக்டரின் கவனக்குறைவே காரணம் எனவும், அவர் கொலையாளி எனவும் அமெரிக்க கோர்ட் தெரிவித்துள்ளது. பாப் இசை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சன், 52. கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி