தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.11

குஜராத் கலவரம்: 31 பேருக்கு ஆயுள் தண்டனை


குஜராத் மாநிலம் சர்தார்புரா பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002-ல் கோத்ராவில் ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து நடந்த கலவரத்தில், சர்தார்புரா பகுதியில் 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக நடந்த விசாரணை
முடிவடைந்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 73 பேரில், 42 பேரை விடுவித்த நீதிமன்றம், 31 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 31 பேர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிற விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது அவர்கள் மீதான கிரிமினல் சதித்திட்டக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
கடந்த 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில், 59 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் ஏற்பட்டது. சர்தார்புராவில் நடந்த கலவரத்தில், சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டது. உயிருக்கு பயந்து, அப்பகுதி மக்கள் இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில், கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அதில், 22 பெணஅகள் உள்பட 33 பேர் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.
இந்த வழக்கில், கடந்த 2009-ம் ஆண்டு, குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, 73 பேருக்கும் எதிராக விசாரணை துவங்கியது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கோத்ரா ரயில் எரி்ப்பு சம்பவத்தை அடுத்து, சில உள்ளூர் தலைவர்கள் அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியது.
கலவரத்துக்கு முன்பு, குற்றவாளிகள் ஆயுதங்களை விநியோகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், தாங்கள் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், வெளியில் இருந்து வந்த நபர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் உள்பட 112 பேர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

0 கருத்துகள்: