தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.11

பின்லேடனை கொன்றதை போல பாக். அணுஆயுதங்களை அமெரிக்காவால் அழிக்க முடியாது: முஷரப்


பின்லேடனை அதிரடியாக தாக்கி கொன்றதை போல, பாகிஸ்தான் அணுஆயுதங்களை அமெரிக்காவால் அழிக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தெரிவித்து இருக்கிறார்.பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை அமெரிக்க உளவு நிறுவனம் கண்டுபிடித்து அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அவரை சுட்டுக்கொன்றதை போல அமெரிக்க ராணுவம்
பாகிஸ்தானின் அணுஆயுதங்களை தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டு உள்ளது.
அணுஆயுதங்கள் இப்போது பாதுகாக்கப்பட்டு வரும் இடம் அமெரிக்க உளவுத்துறைக்கு தெரிந்து போனதால் அங்கு இருந்து ரகசிய இடத்துக்கு அவற்றை பாகிஸ்தான் மாற்றி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், சி.என்.என்.டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய ராணுவ அனுபவத்தில் சொல்கிறேன், பாகிஸ்தான் அணுஆயுதங்களை அமெரிக்க ராணுவம் தாக்கி அழிப்பது என்பது அத்தனை எளிதானது இல்லை. அவை பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கின்றன. அவை பாதுகாக்கப்பட்டு வரும் இடத்தை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
எனவே பின்லேடனை சுட்டுக்கொன்றதை போல அணுஆயுதங்களை அழித்து விடமுடியாது. பின்லேடன் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருந்தார். அணுஆயுதங்கள் அப்படி இல்லை.
எங்கள் அணு ஆயுதங்களை செயல்இழக்க செய்யவும், பலவீனப்படுத்தவும் முடியாது. இந்தியாவுடன் போர் ஏற்பட்டபோது கூட இந்தியா அதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டது கிடையாது. ஏனெனில் நாங்கள் மரபு ரீதியான போரில் ஈடுபட்டோம். போர் என்னும் சவாலை சமாளிக்க எங்களுக்கு மரபு ரீதியான பலம் இருந்தது.
ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பாகிஸ்தான் முன்வந்தது. இதை ஏற்க ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் மறுத்து விட்டார். இலவசமாகவே பயிற்சி அளிக்கிறோம் என்று நாங்கள் கூறினோம். அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். அது முதல் நான் கர்சாய் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் ஏற்பட்டால் நாங்கள் பாகிஸ்தானுக்கு தான் ஆதரவாக இருப்போம் என்று சொன்னபோது கூட அதை நான் நம்பவில்லை. இவ்வாறு முஷரப் கூறினார்.

0 கருத்துகள்: